வரவர இந்த ஃபிளைட்லாம் சிடி பஸ் மாதிரி ஆயிடுச்சு.ஸ்டாண்டிங் டிராவல் ஒண்ணுதான் இன்னும் ஆரம்பமாகலை.
மும்பைல ஃபிளைட் பிடிச்சேன் சார் சென்னை வரதுக்கு.கடேசி நிமிஷத்துல கூட டிக்கெட் கிடைச்சது (6500 ரூபா).
விண்டோ இல்லை, அய்ல் இல்லை நடுவாந்தர சீட். கை வச்சுக்க ரெண்டு ஹேண்டிலும் இல்லை. ஒரு பக்கம் சர்தார்ஜீயும், மறு பக்கம் பெங்காலி பாபுவும். அவர்கள் முழங்கையால் என் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டு அவர்கள் சந்தோஷித்தார்கள்.
ரெண்டு மணிநேர இம்சை, இதுல என்ன கஷ்டம்னா 6.5k கொடுத்து ஒரு காஃபி கூட ஃபிரீயா கொடுக்கலை.இறங்கினவுடனே A to B-ல நல்ல காபி குடிக்கணும்.
விண்டோ சீட் சர்தார்ஜீ ஃபிளைட் பர்சரைக் கூப்டு ஒரு காஃபினு சொன்னான். 250 ரூபா வாங்கிண்டு ஒரு கப்புல வெந்நீரும் காபிபொடி பாக்கெட்டும், பால் பொடி பாக்கெட், சக்கரை பாக்கெட்னு கொடுத்துட்டு வெக்கமில்லாம என்ஜாய்னு வேற சொல்லிட்டுப் போனான்.
பாவம் அந்த குறுகலான இடத்தில் வெந்நீர்ல காபி கலக்க படாத பாடுபட்டு கலந்து, என் தொடைல கொஞ்சம் சக்கரை தூவி, அந்த காபியை அவர் தாடில வடிகட்டி குடிக்கறப்ப என் கழுத்தை கஷ்டப்பட்டு திருப்பி அவன் முகத்தைப் பாத்தேன். அந்த தாடி மீசைக்குள்ளேயும் அவன் விளக்கெண்ணை குடித்த முகத்தைப் பாத்து ரசிக்க முடிந்தது.
இப்படியாகத்தானே விமானம் சென்னையில் தரையிறங்கியது. எல்லோலும் அவசரமாய் ஏதோ பனிஷ்மெண்ட் கொடுத்த மாதிரி எழுந்து நின்றார்கள். ஒரு 20 நிமிஷம் எல்லாரையும் அடென்ஷனில் நிற்க வைத்து கதவை திறந்தார்கள்.
ஏதோ இறங்கிப் போய் பெரிய பெரிய சாதனைகள் செய்யப் போறது போல எல்லாரும் முட்டி மோதிக் கொண்டு இறங்கினார்கள்.
என்னதான் சாதனைனு பாத்தா இறங்கி விமானநிலைய டாய்லட் வாசலில் வரிசை கட்டி நின்றார்கள்.
என்னவோடாப்பா சரவணா இந்த அவசர உலகமே புரியலை.
சரவணன் யாருனு கேக்கறீங்களா, அது எங்க தெரு முனைல தள்ளு வண்டில இட்லி போட்டு விக்கறவர். ஒரு இட்லி 8 ரூவா, சுக்கு காபி 2 ரூவா.
அவரெதுக்கு இங்கேன்னு பாக்குறீங்களா..? யானை விலை விக்கிற விமான நிலையங்களை விடுத்து குறைந்த விலைக்கு கொடுக்கும் இந்த மனிதர்களிடம் மனிதநேயமும் இருக்கிறது என்பதற்காகத்தான்.


