கேலக்ஸி தனது பயணத்தில் அடுத்த மைல் கல்லாக, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டதுதான் ‘விண்மீன்‘ மின்னிதழ். காலாண்டிதழாக தொடங்கப்பட்ட முதல் இதழுக்குக் கிடைத்த வரவேற்பும், மாத இதழாக மாற்றுங்களேன் என்ற வாசகர்களின் விண்ணப்பமும் ஒரு சேர, இரண்டாவது இதழிலேயே மாத இதழாக மாற்றம் பெற்றது. உலகெங்கிலும் வாழும் தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். குறிப்பாக புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறோம். சிறந்த எழுத்தாளர்களின் நேர்காணல், புத்தக விமர்சனங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் என கொஞ்சம் வித்தியாசமான பக்கங்களை வாசகர்களுக்கு அளிக்கிறோம். இந்த இதழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கேலக்ஸியின் மற்றொரு முக்கிய அங்கமாக, கேலக்ஸியின் யூட்யூப் சேனல் வழியாக 100 சிறுகதைகள், 100 புத்தகங்கள், 100 கட்டுரைகள் எனத் தொடர்ந்து பகிரப்பட்டது. அதற்கு உலகெங்கிலும் இருந்து பெரும் வரவேற்பு இருந்தது. அதேபோல் உலகெங்கும் வாழும் துறை சார் நிபுணர்கள் மற்றும் சாதனை படைத்த தமிழர்களோடு நேரலை உரையாடல்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். மேலும், இலக்கியம் சார்ந்த ‘கதை பேசலாம் வாங்க‘ என்ற தொடர் நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மிக்க நன்றி.

பரிவை சே. குமார்
ஆசிரியர்

சென் பாலன்
வடிவமைப்பாளர்

ஹரி பிரசாத்
வடிவமைப்பாளர்

தேவதர்சினி நடராஜன்
இணை ஆசிரியர்

இலக்கியா
இணை ஆசிரியர்

பாலாஜி பாஸ்கரன்
பதிப்பாளர்


