உலகார்ந்த பறவை
நாடுகள், மொழிகள், இனங்கள்
என்று பிரிந்துவிட்ட பிறகு
கடவுச்சீட்டிலும் விசாவிலும்…
பறவையாதலின் சாத்தியங்களைத்
தேட நிர்பந்திக்கப்பட்டிருக்கும்
என் தோட்டத்து புல்வெளியையா
கிரகத்தையே ஒற்றை நாடாக,
ஆகாயப் புழங்குவெளியில்
கட்டற்ற சுதந்திரத்தை புசிக்கும்
சிட்டுக்குருவியொன்று
தன முட்டைகளையிடத்
தேர்வு செய்யவேண்டும்?
அது என் குறித்து என்ன நினைத்திருக்கும் ?
‘சர்வாதிகாரி’ என்றா?
‘மதி கெட்டவன்’ என்றா?
‘கோழை’ என்றா?
அதற்கு உணவும், நீரும் வைத்தேன்…
இத்தனை மருந்துகளால்
ஆற்றுப்படுத்திவிடக்கூடியதா
குற்ற உணர்வென்னும் நோய்மை?
காலப்பயணம்
பதில் ஒன்று கிட்டியிருந்தது…
கேள்விக்காக
காத்திருக்க முடியுமா என்ன?
கிடைத்த பதிலை
முகநூலில் இட்டுவிட்டேன்…
இனி அந்தக் கேள்வி,
தான் கேட்கப்பட,
யாரைத் தேர்வு செய்ய இருக்கிறதோ?
இன்னமுமா கடந்த காலத்திற்கு
காலப்பயணம் சாத்தியமில்லையென்று
நம்புகிறீர்கள்?


