VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: ஒரு மழைநாளும் தேவதையும்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > கவிதைகள் > ஒரு மழைநாளும் தேவதையும்
கவிதைகள்

ஒரு மழைநாளும் தேவதையும்

கால்போன போக்கை கட்டிப் போடுகிறது கனத்துப் பெய்யும் மழை

புனிதா பார்த்திபன்
Last updated: May 24, 2026 10:15 pm
Share
1 Min Read
ஒரு மழைநாளும் தேவதையும்
SHARE

முதுகுத் தண்டு சற்றே

வளைந்ததாய் உணர்கிறேன்

நிமிராத் தலை அடையாளமாகிறது

 

தெருமுனையில் நிற்கும்

துரத்தப்பட்ட நாயாய்

என் மனம் வாழ்க்கையைப்

பார்த்துக் கொண்டிருக்கிறது

 

எத்திக்கிலும் அவமானம்

அடியெல்லாம் அடியெனும் நிலையில்

நாடித்துடிப்பை நசுக்க எண்ணுகிறேன்

 

கால்போன போக்கை கட்டிப் போடுகிறது

கனத்துப் பெய்யும் மழை

மரத்தடியில் அண்டி

மரணத்திற்கு வழிதேடுகிறேன்

 

அருகிருந்த பாறையில்

அடிக்கடி இடியிடிக்க

மரம் விட்டு பாறைக்கு நகர்கிறேன்

கேட்டதும் எது தான்

கிடைக்கும் எனக்கு

இடியும் இடம் மாறியது

நிலத்தலையிலிருந்து

மொத்தமாய் வீழ்கிறது மரம்

 

“தோற்றகடித்துவிடுவாயா”

மரணத்திடம் வீராப்பு பேசுகிறேன்

ராத்திரி முழுதும்

அழுது தீர்க்கும் இம்மழை

அம்மாவைவேறு நினைவூட்டுகிறது

 

மழையோடு இருளும் அகல

மரணக்குழி தேடியெழுகிறேன் 

விழுந்த மரத்தின்

பிளந்த வேர்களருகே

கொத்தாய் முளைத்திருக்கின்றன காளான்கள்

 

நாற்பதடி மரத்தை முட்டித்தள்ளி

தன் வாழ்வை தொடங்கியிருப்பதாய் காட்சி தந்த

காளான்களை நின்று திரும்பிப் பார்க்கிறேன்

 

வெண் தேவதைகளாய் அவை என் மனதினுள்

ஏதோ ஒன்றைக் கொன்று

ஏதோ ஒன்றை உயிர்ப்பித்துக்கொண்டிருந்தன! 

PrevPreviousஇலக்கியன்
Nextவிண்மீன் டிசம்பர் 2025 மின்னிதழ்Next

You Might Also Like

ஏமாற்றம்
‘எல்லாரையும் நம்பு; ஆனால் யாரையும் நம்பாதே’ – ஜி. ஏ. பிரபா
சாபத்தின் சாட்சிகள்
நெஞ்சம் மறப்பதில்லை
விண்மீன் டிசம்பர் 2025 மின்னிதழ்
TAGGED:Poemsகவிதைகள்விண்மீன் டிசம்பர் 2025
Previous Article இலக்கியன் இலக்கியன்
Next Article Vinmeen Dec 2025 விண்மீன் டிசம்பர் 2025 மின்னிதழ்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (12) கட்டுரைகள் (18) கவிதைகள் (28) குறுநாவல் (1) சிறுகதைகள் (68) திரைப் பார்வை (8) தொடர்கள் (14) நிகழ்ச்சிகள் (4) நேர்காணல் (11) புத்தகப் பார்வை (34) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • June 20261
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (18) Interview (11) Poems (28) Series (14) Short Stories (69) ஆசிரியர் பக்கம் (12) இளையராஜா (2) கட்டுரை (11) கட்டுரைகள் (17) கவிதைகள் (28) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (2) சினிமா (8) சிறுகதைகள் (74) தலையங்கம் (12) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (14) நாவல் (7) நிகழ்ச்சி (4) நிஸ்வா (10) நூல் அறிமுகம் (34) நூல் வெளியீடு (3) நேர்காணல் (11) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (34) புத்தகம் (34) பெருங்கதை (1) பேட்டி (11) மதுரை (2) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (42) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?