VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: பசித்த மானுடம் (1978) – சதீஷ்குமார்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • சிறுகதைகள்
  • புத்தகப் பார்வை
  • கட்டுரைகள்
  • விண்மீன் மின்னிதழ்
  • கவிதைகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்
  • திரைப் பார்வை
  • நிகழ்ச்சிகள்
  • ஆசிரியர் பக்கம்
  • About
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > புத்தகப் பார்வை > பசித்த மானுடம் (1978) – சதீஷ்குமார்
புத்தகப் பார்வை

பசித்த மானுடம் (1978) – சதீஷ்குமார்

2025 வாசித்த புத்தகங்களில் கவர்ந்தது எது..? ஏன்..?

சதிஷ்குமார்
Last updated: May 25, 2026 6:18 pm
By
சதிஷ்குமார்
Published: May 25, 2026
1 View
Share
2 Min Read
பசித்த மானுடம் (1978)
SHARE

பசித்த மானுடம் (1978)

ஆசிரியர்: கரிச்சான் குஞ்சு  

சிறந்த நாவலாகப் பல இலக்கியத் தளங்களில் பரிந்துரைக்கப்பட்ட கரிச்சான் குஞ்சுவின் “பசித்த மானுடம்” நாவலை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நானும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதாலும், இந்த நாவலின் கதைக்களம் தஞ்சையை ஒட்டியே நகர்வதாலும் அறிமுகமான ஊரின் மண்வாசனையோடு நகரும் காட்சிகள், வாசிப்பை இன்னும் இனிமையாக்கின.

நாவலைத் தொடங்கும் போது அதன் கருப்பொருள் என்னவென்று புரியவில்லை என்றாலும், வாசிக்க வாசிக்க மனிதர்களின் உடல், பணம் மற்றும் அதிகாரம் சார்ந்த ஆசைகள் (பசிகள்) ஒருவரது வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகின்றன என்பதை நாவல் மிக அழகாகக் காட்டுகிறது. இத்தகைய துணிச்சலான கதைக்கருவை அந்தக்காலத்திலேயே தேர்ந்தெடுத்தது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும். குறிப்பாக, அன்றைய காலக்கட்டத்தில் ஓர்பாலின உறவு குறித்துப் பேசிய மிக முக்கியமான படைப்பாக இது கருதப்படுகிறது.

கணேசன் மற்றும் கிட்டா என்ற இரு நண்பர்களின் வாழ்க்கை பயணமே இக்கதையின் மையக்கருவாகும். கிட்டா சிறுவயது முதலே பணத்தின் மீது தீராத தாகம்கொண்டு, கடினமாக உழைத்து ஒரு பெரிய தொழிலதிபராக மாறுகிறான். ஆனால், அவனது ஓட்டத்தில் பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்ததால், இறுதியில் குடும்ப அன்பையும் நிம்மதியையும் இழக்கிறான். ஒருகட்டத்தில் அவனது சொந்த மகனே அவனை வெறுத்து அடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவது அவனது வாழ்வின் சோகம்.

கணேசன் ஆரம்பத்தில் படிப்பில் சிறந்தவனாகவும், அனைவராலும் நேசிக்கப்படுபவனாகவும் இருக்கிறான். ஆனால், அமைதியான குணமுடைய கணேசன், ஒரு பணக்காரரின் சகவாசத்தால் திசைமாறிச் செல்கிறான். அதன் விளைவாக வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்து, இறுதியில் தொழுநோயால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுகிறான். இவர்களின் வாழ்வியல் மாற்றங்களை எந்தவித ஒளிவுமறைவுமின்றி இந்த நாவல் வெளிப்படையாகப் பேசுகிறது.

கதையின் சில பகுதிகள் மிகவும் வெளிப்படையாகவும் ஒருவிதமான மன அழுத்தத்தைத் தரக்கூடியதாகவும் இருப்பதை உணர முடிகிறது. இது ஒரு சராசரி நாவலைப் போல மகிழ்ச்சியான முடிவைத் தருவதில்லை; மாறாக, வாசித்து முடித்த பிறகு ஒருவித கனத்த மனநிலையையும், வாழ்க்கையைப் பற்றிய நீண்ட சிந்தனையையுமே நமக்குள் விட்டுச் செல்கிறது. 

அதீத ஆசைகளுடன் எதன் பின்னாலாவது ஓடிக்கொண்டே இருந்தால், இறுதியில் நிம்மதி கிடைக்காது என்பதையும், ஒருகட்டத்தில் மிஞ்சுவது  வெறுமைதான் என்பதையும் இந்த நாவல் ஆழமாக உணர்த்துகிறது.

PrevPreviousஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – தமிழ்க்காதலன்
Nextஒரு மனிதன் ஒரு வீடு  ஒரு உலகம் – மருத்துவர் பிரியதர்ஷினிNext

You Might Also Like

ஒற்றைச் சிறகு ஓவியா
ஜமா
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – தமிழ்க்காதலன்
கொலைஞானம்
அறியப்படாத தமிழகம்
TAGGED:நூல் அறிமுகம்புத்தகப் பார்வைபுத்தகம்விண்மீன் ஜனவரி 2026விமர்சனம்
SOURCES:rubynews.comtimenews.com
VIA:ThemeRubyMarsNews
Previous Article ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – தமிழ்க்காதலன்
Next Article ஒரு மனிதன் ஒரு வீடு  ஒரு உலகம் – மருத்துவர் பிரியதர்ஷினி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

கட்டுரைகள் (15) கவிதைகள் (15) சிறுகதைகள் (53) திரைப் பார்வை (7) தொடர்கள் (11) நிகழ்ச்சிகள் (4) நேர்காணல் (8) புத்தகப் பார்வை (28) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • May 20262
  • April 20262
  • March 20262
  • February 202611
  • January 202621
  • December 202512
  • November 202516
  • October 202519
  • September 202513
  • August 202515
  • July 202517
  • June 202522
  • August 20211

பிரிவுகள்

articles (15) essays (15) Interview (8) Poems (15) Series (11) Short Stories (53) இளையராஜா (1) கட்டுரை (8) கட்டுரைகள் (14) கவிதைகள் (15) குறுங்கதை (14) கேலக்ஸி (2) சினிமா (7) சிறுகதைகள் (59) திரை விமர்சனம் (7) துபை (1) தொடர்கள் (11) நாவல் (7) நிகழ்ச்சி (4) நிஸ்வா (7) நூல் அறிமுகம் (28) நூல் வெளியீடு (3) நேர்காணல் (8) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (28) புத்தகம் (28) பேட்டி (8) மதுரை (2) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (11) விண்மீன் அக்டோபர் 2025 (18) விண்மீன் ஆகஸ்ட் 2025 (15) விண்மீன் ஏப்ரல் 2026 (1) விண்மீன் செப்டம்பர் 2025 (13) விண்மீன் ஜனவரி 2026 (19) விண்மீன் ஜுலை 2025 (17) விண்மீன் ஜூன் 2025 (17) விண்மீன் டிசம்பர் 2025 (11) விண்மீன் நவம்பர் 2025 (15) விண்மீன் மார்ச் 2026 (1) விண்மீன் மே 2026 (1) விமர்சனம் (35) வெண்பா (2)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?