VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: அச்சம்..!
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > கவிதைகள் > அச்சம்..!
கவிதைகள்

அச்சம்..!

பவானி சிம்ஹன்
Last updated: May 28, 2026 1:10 pm
Share
1 Min Read
அச்சம்..!
SHARE

அச்சம்..!

–      பவானி சிம்ஹன்,

துபை, அமீரகம்

 

ஒரு பெண்ணின்

அமைதியான இரவுகளில்

அவள் இதயத்துக்குள் மட்டுமே 

எட்டிப்பார்க்கும் அச்சம்

தனிமை அல்ல…

 

ஒருநாள்

தன் கனவுகளை எல்லாம்

மடித்துப் பழைய சேலையோடு

சேர்த்து அலமாரிக்குள்

வைத்துவிட நேருமோ என்று…

 

காதல் இல்லாத ஒரு வீட்டில்

கடமைகளின் சத்தத்துக்குள்

தன் சிரிப்பை மெதுவாக

இழந்துவிட நேருமோ என்று….

 

குழந்தைகளின் எதிர்காலத்தைப் 

பிடித்துக் கொண்டிருக்கும் கைகளில்

தன் எதிர்காலமே

கரைந்து போய்விடுமோ என்று….

 

அனைவருக்கும் எல்லாமாக இருந்தபின்

தனக்காக மட்டும்

யாருமில்லாத வெறுமை வந்து

அமருமோ என்று…

சமையலறை வாசத்திலும்

அழுகையை மறைத்த சிரிப்புகளிலும்

தன் இளமையைச் சாம்பலாக்கிவிட்டு

ஒருநாள் கண்ணாடி முன் நின்று

இவள் யார்?”

என்று தன்னையே அடையாளம்

காண முற்பட நேருமோ என்று…

 

பெண்கள் விரும்புவது

வெறும் திருமணம் அல்ல…

மெய்யான உயிர் திளைக்கும் வாழ்வை!

 

அவர்கள் தேடுவது

வெறும் பாதுகாப்பல்ல…

தங்களை இழக்காத அன்பை!

 

அவர்கள் வேண்டுவது

ஒரு பொன் கூண்டல்ல…

பறந்து விரிந்த வானை!

 

இன்றைய பெண்களின்

மிகப் பெரிய அச்சம்….

தனிமை அல்ல!

 

தன்னையே மெதுவாகப்

புதைத்துக்கொண்டு

மற்றவர்கள் எழுதிய கதையில்

ஒரு பாத்திரமாய்

வாழ்ந்து மறைந்து போவதுதான்!

PrevPreviousதொலைந்த சாவி
Nextமீசைக்காரர் பங்களாNext

You Might Also Like

விண்மீன் மே 2026 மின்னிதழ்
காதலுக்கு பிரபஞ்சம் ஒரு கைப்பிடி
உழைப்பு & துணை
கடல் பிரசவித்த குகையும், மலையும்!!!  நிஸ்வா – பகுதி 10
சாபத்தின் சாட்சிகள்
TAGGED:Poemsகவிதைகள்விண்மீன் மே 2026
Previous Article தொலைந்த சாவி
Next Article மீசைக்காரர் பங்களா
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (12) கட்டுரைகள் (18) கவிதைகள் (28) குறுநாவல் (1) சிறுகதைகள் (68) திரைப் பார்வை (8) தொடர்கள் (14) நிகழ்ச்சிகள் (4) நேர்காணல் (11) புத்தகப் பார்வை (34) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • June 20261
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (18) Interview (11) Poems (28) Series (14) Short Stories (69) ஆசிரியர் பக்கம் (12) இளையராஜா (2) கட்டுரை (11) கட்டுரைகள் (17) கவிதைகள் (28) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (2) சினிமா (8) சிறுகதைகள் (74) தலையங்கம் (12) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (14) நாவல் (7) நிகழ்ச்சி (4) நிஸ்வா (10) நூல் அறிமுகம் (34) நூல் வெளியீடு (3) நேர்காணல் (11) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (34) புத்தகம் (34) பெருங்கதை (1) பேட்டி (11) மதுரை (2) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (42) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?