நேற்று என் வீட்டிற்கு
ஒரு மகிழுந்து வந்தது
வரவேற்று அருந்த
நீர் கொடுத்தேன்
பின் தான் பார்த்தேன்
வாயிற்கோலம் காணாமல்
போயிருந்தது
இன்று ஒரு ஈருருளி
வந்தது
வரவேற்று நீர்
கொடுத்தேன்
செல்லும் போது
வாயிற்கோலம் பாதி
அழிந்திருந்தது
சற்று முன்…
ஒரு நாடோடி கால்நடையாய்
வந்தார்
பருக நீர் கொடுத்தேன்
பாதத்தடங்களை
சுமந்து நின்றது
என் வாயிற்கோலம்
நாளையும்
யாரேனும் வருவார்கள்
மறக்காமல் தடங்களைத்
தந்துவிட்டு போவார்கள்
நானும் தவறாமல்
நீர் கொடுப்பேன்..
–
பிரியா ரஞ்சன்


