VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: கறி விருந்து
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • சிறுகதைகள்
  • புத்தகப் பார்வை
  • கட்டுரைகள்
  • விண்மீன் மின்னிதழ்
  • கவிதைகள்
  • தொடர்கள்
  • எழுத்தாளர்கள்
  • நேர்காணல்
  • திரைப் பார்வை
  • நிகழ்ச்சிகள்
  • ஆசிரியர் பக்கம்
  • About
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > கறி விருந்து
சிறுகதைகள்

கறி விருந்து

கறி விருந்து

கார்த்திகேயன் மாதையன்
Last updated: May 24, 2026 5:12 pm
By
கார்த்திகேயன் மாதையன்
Published: October 23, 2025
2 Views
Share
3 Min Read
கறி விருந்து
SHARE

ஒரு ஊர்ல மாணிக்கம்ன்னு ஒருத்தரு இருந்தாரு…

 

அவர் கோழிக்கறி வெட்டும் கடை வச்சுருந்தாரு…

 

அவருடன் மனைவி, மற்றும் ஆறு வயது மகளும் வாழ்ந்து வந்தாங்க.

 

மாணிக்கம் வார வாரம் சந்தைக்கு போவது வழக்கம். அப்படி போய் வரும்போது ரெண்டு முயல் குட்டிங்கள தூக்கி வந்து வீட்டில வச்சிருந்தாரு.

 

பள்ளி முடிஞ்சு வீடு திரும்பிய மகள் ஸ்ரீதேவி அந்த முயல் குட்டிகள பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதிச்சா. எப்போ பள்ளி முடிஞ்சு வீடு திரும்பினாலும் அந்த முயல் குட்டிகளிடம் விளையாடிகிட்டே இருந்தா…

 

மாணிக்கம் காலையில தொழிலுக்கு போனா சாயந்திரம் தான் வீடு திரும்புவாரு. மாணிக்கம் மனைவிக்கு வீட்டு வேலையே சரியாக இருந்தது.

 

இப்படி இருக்கையில…

 

ஒரு நாள் மாணிக்கத்தின் மச்சான் (மனைவியின் அண்ணன்) வீட்டிற்கு வந்திருந்தாரு. தனது அண்ணனுக்காக முயல் கறி செய்து தருமாறு கணவனிடம் கேட்டுக்க்கிட்டா மனைவி. மனைவியின் விருப்பப்படியே வீட்டில் உள்ள அந்த முயல்களை கறியாக்கி அவளிடம் கொடுக்க, அவள் அதை ஆசையாக சமைத்து தனது அண்ணனுக்கு பரிமாறினாள்.

 

மாணிக்கத்தின் மச்சான் அதை ருசித்து சாப்பிட்டு முடிக்க… மாலை அவரை வழியனுப்ப சென்றார் மாணிக்கம்.

 

வழக்கம்போல பள்ளியில இருந்து திரும்பி வந்த ஸ்ரீதேவி முயல் கூண்டில் சென்று பார்த்த போது அங்கே முயல்கள் இல்லாமல் அதிர்ச்சியடைந்தாள்.

 

தனது அம்மாவிடம் வந்து அதை பற்றி கேட்க, உன் மாமா ஊர்ல இருந்து வந்ததால அவருக்கு அதை சமைச்சு கொடுத்துட்டேன்மா என்று சொன்னாள். அதைக் கேட்டு ஓ என்று அழுதாள். அந்தக் கூண்டை பார்த்து பார்த்து அழுது கொண்டே இருந்தாள்.

 

மாணிக்கம் வீடு திரும்பினார்.

 

நடந்த விஷயத்தை மனைவி கூற, மாணிக்கம் மகளிடம் வந்து “இங்க பாருமா ஸ்ரீதேவி நீ சின்ன பொண்ணு தான் இருந்தாலும் உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்றேன். ஏதோ ஒரு ஆசையில நாங்க தெரியாம செஞ்சி இருந்தாலும் இது எல்லாம் கர்மா உடைய செயல். எந்த ஒரு உயிர் யார் மூலமாக பிரியுதோ அந்த உயிரோட அத்தனை பாவ புண்ணியங்களையும் அவங்க ஏத்துகிட்டதுக்கு சமம்… இது எல்லா உயிருங்களுக்கும் பொருந்தும். சொர்க்கம் நரகம் பாவம் புண்ணியம் இதெல்லாம் நாம வாழும் காலத்திலேயே கழியுது. எப்போ ஒரு உயிர் உடலை விட்டு பிரியுதோ அப்போதான் அந்த உடலுக்கும் உயிருக்கும் முழுமையான சுதந்திரம் கிடைக்குது. நீ வளர்த்த அந்த முயலுங்க இப்போ சுதந்திரமான ஆத்மாவாக பறந்துகிட்டிருக்கும். இதை நீ புரிஞ்சிக்கிட்டா இனி இப்படி நீ அழ மாட்ட…” என்றார்.

 

அழுது கொண்டே இருந்த அவள், “நான் ஆசையா வளர்த்த முயலுங்கள கொன்னுட்டு அதுக்கு ஒரு காரணக் கதை வேற சொல்றியாப்பா” என்றாள்.

 

பெருமூச்சு விட்ட மாணிக்கம் செய்வது அறியாமல் எழுந்து வெளியே சென்று தேடி அலைந்து அதே போன்று இரண்டு முயல் குட்டிகளை வாங்கி வந்து அவளிடம் கொடுத்தார்.

அதைப் பார்த்து அழுது கொண்டே, “போப்பா அந்த முயல் குட்டிங்க மேல எவ்வளவு பாசமா இருந்தேன் தெரியுமா…? அதுவும் என்கிட்ட எவ்வளவு அன்பா இருந்துச்சு. இதுங்க மேல நான் பாசம் வச்சா நாளைக்கு இதையும் கொன்னிடுவீங்க… அது எங்க இருந்துச்சோ அங்கேயே கொண்டு போய் விட்டுடுப்பா” என்றாள்.

 

அத்தனையும் அறிந்த மாணிக்கத்திற்கு தனது மகளுக்கான பதிலை கொடுக்க முடியவில்லை. குற்ற உணர்ச்சியில் தலை குனிந்து நின்றார்.

 

முயல் குட்டிகள் கூண்டில் விளையாடிக் கொண்டே இருந்தன…

PrevPreviousஇன்னொரு சாவி
Nextஇட்லிகடைNext

You Might Also Like

மாயநிழல்
தர்மம்
அன்பின் ஆழம்
ரசிக்கும் சீமானே
காதல் பெருகட்டும்
TAGGED:Short Storiesகுறுங்கதைசிறுகதைகள்விண்மீன் அக்டோபர் 2025
Previous Article இன்னொரு சாவி
Next Article இட்லிகடை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

கட்டுரைகள் (14) கவிதைகள் (12) சிறுகதைகள் (46) திரைப் பார்வை (6) தொடர்கள் (9) நிகழ்ச்சிகள் (3) நேர்காணல் (6) புத்தகப் பார்வை (18) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • May 202616
  • April 20261
  • March 20261
  • February 20261
  • January 20261
  • December 202511
  • November 202515
  • October 202517
  • September 202513
  • August 202515
  • July 202517
  • June 202517
  • August 20211

பிரிவுகள்

articles (14) essays (14) Interview (6) Poems (12) Series (9) Short Stories (46) இளையராஜா (1) கட்டுரை (5) கட்டுரைகள் (14) கவிதைகள் (12) குறுங்கதை (14) கேலக்ஸி (1) சினிமா (6) சிறுகதைகள் (52) திரை விமர்சனம் (6) துபை (1) தொடர்கள் (9) நாவல் (7) நிகழ்ச்சி (3) நிஸ்வா (5) நூல் அறிமுகம் (18) நூல் வெளியீடு (2) நேர்காணல் (6) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (18) புத்தகம் (18) பேட்டி (6) மதுரை (1) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (1) விண்மீன் அக்டோபர் 2025 (17) விண்மீன் ஆகஸ்ட் 2025 (15) விண்மீன் ஏப்ரல் 2026 (1) விண்மீன் செப்டம்பர் 2025 (13) விண்மீன் ஜனவரி 2026 (1) விண்மீன் ஜுலை 2025 (17) விண்மீன் ஜூன் 2025 (17) விண்மீன் டிசம்பர் 2025 (11) விண்மீன் நவம்பர் 2025 (15) விண்மீன் மார்ச் 2026 (1) விண்மீன் மே 2026 (1) விமர்சனம் (24) வெண்பா (2)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?