VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: ‘பெண்கள் எழுதுவதே இங்கு சவால் தானே…’ – எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > நேர்காணல் > ‘பெண்கள் எழுதுவதே இங்கு சவால் தானே…’ – எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு
நேர்காணல்

‘பெண்கள் எழுதுவதே இங்கு சவால் தானே…’ – எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு

பெண் எழுத்தாளர் ஆண் எழுத்தாளர் என்ற பாகுபாடே இருக்க வேண்டாம்.

சித்ரா சிவன்
Last updated: May 25, 2026 8:46 pm
9 Views
Share
18 Min Read
எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு
SHARE

“பெரிதினும் பெரிது கேள்” என்ற பாரதியின் புதிய ஆத்திச்சூடி வரிகளைப்போல் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்ற திருமதி.சம்சுல் ஹுதா பானு தொழிலதிபர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், சமூக ஆர்வலர் என சமூகத்தில் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய நபராக திகழ்ந்து வருகிறார். பல பத்திரிகைகளில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகளை எழுதி வருகிறார். இஸ்லாமிய பெண்களின் கல்வி மேம்பாடு மற்றும் சமூக விழிப்புணர்வுக்காக தனது எழுத்துக்களின் மூலம் பங்காற்றி வருகிறார். கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளுக்காக புதுச்சேரி ஆளுநர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கைகளால் பரிசுகளைப் பெற்றுள்ளார்.

சாதனைப் பெண், தமிழ்கதிர், பொன்மகள், அன்புத்தமிழச்சி, தமிழணங்கு இயற்தமிழ் போன்ற விருதுகளை வென்ற ஹுதா அவர்கள், ‘Hutha health care products’ என்ற பெயரில் உணவுப்பொருள் தயாரிப்புக்கான சிறு தொழில் நிறுவனத்தை நடத்தி, விளிம்பு நிலையிலிருக்கும் பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வாழ்வாதாரத்தை அளித்து வருகிறார். இத்தகு சிறப்பு வாய்ந்த திருமிகு.சம்சுல் ஹுதா பானு அவர்களுடன் ஒரு மனம் திறந்த உரையாடல்…

உங்கள் எழுத்து தொடங்கிய தருணம் எது? எழுத வேண்டுமென்பது நீண்டகால திட்டமா அல்லது எதிர்பாராமல் நிகழ்ந்த நிகழ்வா?

நான் புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவளாக இருந்தேன். வாசித்த புத்தகங்களின் கதைச்சூழல், கதாபாத்திரங்களை எனக்குள் ஒளிப்படமாக நிகழ்த்திப் பார்ப்பேன். வாசிக்கும் நூலின்  முக்கியமான பகுதிகளை, சமூகத்தின் மீது தொடுக்கும் நியாயமான கேள்விகளை, மனபலத்துடன் இருக்க உதவும் வரிகளை, உத்வேகம் தரும் வார்த்தைகளை அடிக்கோடிடுவேன். ஆரம்பத்தில் இவ்வளவு தான் எனக்கும் புத்தகத்திற்குமான தொடர்பாக இருந்தது. என் மகள், மகன் பள்ளி செல்லும்போது பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக அதன் தலைப்புகளுக்கேற்ப நான் தரவுகளைத் தேடி எழுதிக் கொடுப்பேன். பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுத்து அவர்களும் பரிசுகளை வென்றார்கள். இதையறிந்த உறவுகள், நட்புகள் அவர்கள் பிள்ளைகளுக்கும் எழுதித்தர சொன்னபோது செய்து கொடுத்தேன். அந்தப் பிள்ளைகளும் பரிசுகளைப் பெற்றபோதுதான் என்னால் எழுத முடியும் என்ற சிறிய பொறி என்னுள் ஏற்பட்டது. ஆனாலும் எனது கல்வித் தகுதி என்னை ஆமை ஓட்டுக்குள் புகுந்துகொள்வதைப்போல் புகுந்துகொள்ள வைத்துவிடும்.

இந்த சமயத்தில் நாளிதழ்கள், வாரஇதழ்களில் வரும் கவிதைகளை வாசித்து, நானும் அந்தத் தலைப்புகளில் கவிதைகள் எழுத முயற்சித்து எழுதி, யாருக்கும் அனுப்பாமல் நானே வைத்துக்கொள்வேன்.

நான் மறைந்திருந்த ஆமையின் ஓட்டை விட்டு கொஞ்சம் வெளியே வந்து ஜூனியர் விகடனில் ஒரு அரசியல் கவிதைப் போட்டிக்கு எழுதி அனுப்பினேன். என் கவிதை தேர்வாகி வெளிவந்து 500 ரூபாய் பரிசும் பெற்றது. எனக்கே நம்ப முடியாமல் திணறிப் போனேன். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக என்னை வெளிப்படுத்தி மீண்டும் ஓட்டுக்குள் ஒளிந்து கொள்வேன்.

பாண்டிச்சேரி பாரதி தமிழ்சங்கம் பாரதி கவிதைகளை முன்வைத்து உங்கள் சொந்த கற்பனையில் கவிதையெழுத வேண்டுமென்ற போட்டியை அறிவித்தது. உலகம் முழுவதுமிருந்து தமிழர்கள் கலந்துகொண்ட  போட்டியது. அப்போட்டியில் பாரதியின் பாப்பா பாட்டை முன்வைத்து  எனது கற்பனையில் ஒரு கவிதையை எழுதி அனுப்பினேன். அந்தக் கவிதையைத் தேர்ந்தெடுத்து பாரதி தமிழ்சங்கம் என்னைப் பாராட்டி கடிதம் அனுப்பியிருந்தார்கள்.

பாராட்டு கடிதத்தை கையில் வைத்துக்கொண்டு ‘உன்னால் முடியும்’ என எனக்கு நானே சொல்லிக்கொண்டு என்னை உத்வேகப்படுத்திய தருணம், என் எழுத்து தொடங்கிய தருணம்.

எழுத வேண்டுமென்ற எந்த திட்டமும் என்னிடம் இருக்கவில்லை. எதிர்பாராமல் நிகழ்ந்த நிகழ்வு தான். கல்வியில் கரைகண்ட அறிஞர்கள் சான்றோர்களால் மட்டுமே எழுத முடியும். அவர்களின் நூலை வாசித்து அறிந்து தெளிந்து கொண்டால் போதும் என்ற நம்பிக்கையில் இருந்தவள் நான். 

உங்கள் முதல் படைப்பு வெளியானபோது உணர்ந்தது என்ன?

எனக்கு எழுத்தில் கிடைத்த சின்ன சின்ன அங்கீகாரங்களை அறிந்த கணவரும் எனது குழந்தைகளும் எனக்காக ஒரு  வலைப்பூ (blog) தொடங்கிக் கொடுத்து, கணினி இயக்க சொல்லிக் கொடுத்து எனது படைப்புகளை அதில் ஏற்றச் சொன்னார்கள். நானே என்மீது நம்பிக்கை இல்லாமல் இருந்த காலத்தில், இவளால் எழுத முடியும் என என் குடும்பம் நம்பிக்கை கொள்ள காரணமாக இருந்தது, அந்த 500 ரூபாய் பரிசுதான். எனது கணவர் அயல்நாட்டில் இருந்ததால் இங்கு குடும்பச்சுமை அனைத்தும் என் மீதே இருந்தது. அதனால் எழுதுவதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ள இயலவில்லை.

கணவர் அங்கு பணி ஓய்வு பெற்று ஊர் திரும்பியதும் எனக்கு எழுத்துக்காக ஒதுக்க சிறிது நேரம் கிடைத்தது. அந்த சமயத்தில் தான் எனது மகன் முகநூலில் கணக்கு தொடங்கி கொடுத்தார். சமூக வலைதளங்கள் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது. முதலில் பயத்துடன் சின்னச்சின்னப் பதிவுகள் செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக முகநூலில் எழுதுவது பிடிபட ஆரம்பித்தது. கொஞ்சம் நேர்த்தியாக பதிவுகள் எழுத ஆரம்பித்தேன். கோதை பதிப்பக நிறுவனர் ‘நான் ராஜாமகள்’ அறிமுகம் கிடைத்தது. அவர், “உங்கள் எழுத்து ராமநாதபுர வட்டார வழக்கில் கிராமத்து நடையில் எல்லாரும் ரசிக்கும் வண்ணம் உள்ளது. எழுத்துப்பாணி சோ.தர்மன் அவர்களை நினைவூட்டுகிறது. நீங்கள் கட்டாயம் புத்தகம் எழுதுங்க. உங்களால் முடியும்.” என்றார்.

புத்தகம் எழுதும் அளவுக்கு எனக்கு திறமை கிடையாது என நான் தயங்கியபோது, ” முதலில் பத்து பக்கங்கள் உங்களுக்கு பிடித்த தலைப்பில் எழுதிப் பாருங்கள், அதை என்னிடம் வாசிக்க தாருங்கள்” என்றார்.

சரியென்று ஏதோவொரு நம்பிக்கையில் எழுத ஆரம்பித்தேன். எனக்குள் மூச்சுமுட்ட அடைந்து கிடந்த தாயை இழந்த சிறுமியின் வாழ்வை எழுதிப்பார்த்தேன். அந்தப் பத்துப் பக்கங்களை வாசித்துப் பார்த்த கணவரின் கண்களில் கண்ணீர் வடிந்து பேசத் திணறிப் போனார். “உனக்குள் இத்தனை ஆண்டுகளாக இவ்வளவு மனக்குமுறல்களை வைத்திருந்தாயா? உன் வாழ்வியலையே கட்டுரைகளாக எழுது” என்று என்னை ஊக்கப்படுத்தி நான் ராஜாமகளின் கோதை பதிப்பகம் வழியாக என் முதல் நூலான “தாயில்லாமல் நான்” வெளியானது. பள்ளிப்படிப்பை கூட முடிக்காத நான் தமிழ் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்து, தொடர்ந்து என்னால் இயங்க முடியுமா என்ற தயக்கங்களையும் தாண்டி, தாயில்லா பெண் குழந்தையின் வாழ்வை ஆவணப்படுத்தி இருக்கிறேன் என்ற மனநிறைவுடன், சம்சுல் ஹுதா பானு என்று புத்தக அட்டையில் இருந்த எனது பெயரை பெருமிதத்துடன் தடவிப் பார்த்துக்கொண்டேன். 

ஒரு கதையை எழுதும்போது முதலில் வருவது – கதைமாந்தரா? காட்சியா?

கதையெழுதுவதற்கு முன்  மனதில் கதைக்கரு உருவாகியிருக்கும். அந்தக் கதைக்கருவில் முதலில் உருவாவது கதை மாந்தர்களே, அதன்பின் கதையின் போக்கை வைத்து காட்சிகள் உருவாகும், அல்லது விரிந்து கொண்டே செல்லும்.

பெண் எழுத்தாளராக இருப்பதில் நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

நான் குடும்பக் கதைகள், வரலாற்று நாவல்கள், க்ரைம் நாவல்கள் என வாசிக்கும்போது ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் காதல் காட்சிகளை எழுதும்போது அதன் நெடி மிகத் தூக்கலாக இருக்கும். முக்கியமாக வரலாற்று நாவல்களில் காதலின் விரசம் அதிகமாக இருக்கும். பெண் எழுத்துக்களில் ஒரு சிலரைத் தவிர இது குறைவாகவே இருக்கிறது. காதல், காமம் குறித்து எழுதும்போது எனக்கும் இந்தத் தயக்கம் இருக்கிறது.

சமூகம், குடும்பம் இரண்டும் பெண்ணின் எழுத்தை உற்றுக் கவனித்துக்கொண்டே இருக்கும். இதில் நான் விதிவிலக்கல்ல.

அடுத்ததாக எழுத்து குறித்த ஏதாவது சிந்தனை தோன்றும் போதெல்லாம் அந்த வரிகளை உடனே எழுதி வைத்துக்கொள்ள முடியாதவாறு குடும்பக் கடமைகள் அழைக்கும். பிறகு ஓய்வு கிடைக்கும்போது எழுத உட்கார்ந்தால் சுத்தமாக அந்த வரிகள் நினைவிலிருந்து மறைந்து போகும். எவ்வளவு யோசித்தாலும் வராது. குடும்பத்துக்குள் இருந்து எழுதும் எல்லா பெண்களுக்கும் இந்த பிரச்சினை உண்டு. பெண்கள் எழுதுவதே இங்கு சவால் தானே…. நான் வளர்ந்த சூழலில் நான் பார்த்து வேதனையடைந்த முடை நாற்றம் வீசும் பெண்களின் வாழ்வியலை அப்படியே எழுத வேண்டும் என்பதே என் விருப்பம்.

ஒரு மனித வேதனையை அப்படியே எழுத முடியாதது எனக்கு சவாலாக உள்ளது. அந்த சவாலை எனக்குள் நானே உடைப்பேன் என்ற நம்பிக்கையும் உள்ளது.

உருவக்கேலி குறித்து உங்கள் பதிவுகளில் நிறைய எழுதியிருக்கீங்க. உருவக்கேலியால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டது குறித்தும் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தீங்க என்பதையும் கூறுங்களேன்?

இந்த நேர்காணலில் எனக்கு பிடித்த முக்கியமான கேள்வியாக இதைக் கருதுகிறேன். உருவக்கேலியே உலகில் இல்லாமல் செய்ய வேண்டுமென்பதற்காக என்னால் முடிந்தளவு எழுத வேண்டும், குரல் கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறேன்.

உடல் பருமன் என்பது குறைபாடல்ல ஆனால்  எந்த உடல் குறைபாடு உள்ளவர்களாக இருந்தாலும் உருவக்கேலி செய்யக்கூடாது என்பதை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்க வேண்டுமென்பது என் குறிக்கோள்.

காரணம், உடல் பற்றிய விழிப்புணர்வு இல்லாத மிகச் சிறுவயதிலேயே உருவக் கேலியால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். என் அம்மாவின் அம்மா என்னைப்போல இருப்பார்களாம். என் குடும்ப மரபில் பெரும்பாலும் உடல்வாகு பருமனாக இருப்பவர்கள் தான். பள்ளிக் காலத்தில் உடன் படித்த மாணவர்களாலும், ஆசிரியர்களாலும் அங்கமுத்து, குந்தாணி, பிந்துகோஸ் என்று பட்டப்பெயர்களால் அழைக்கப்பட்டேன். அந்தக் கோபத்தையெல்லாம் சாப்பாட்டில் காட்டுவேன். இன்னும் அதிகமாக சாப்பிட ஆரம்பித்தேன். ஆனால் பதின்ம வயது வந்தபோது ஒல்லியாக இருப்பது தான் அழகு என்று பொதுப்புத்தியால் எனக்குப் போதிக்கப்பட்டிருந்ததால் பட்டினி கிடப்பது, பேதி மாத்திரை எடுத்துக் கொள்வது என என்னை நானே வருத்திக்கொள்ள ஆரம்பித்தேன். எல்லோரின் கேலியால் நிறைய அழுதது மட்டுமில்லாமல் தற்கொலை முயற்சி வரை செய்திருக்கிறேன்.

எனக்குத் திருமணம் முடிந்த பின்பு கணவர் எனக்கு உறுதுணையாக இருந்தது தான் மிகப்பெரிய ஆறுதல். என்னை உருவக்கேலி செய்யாத ஒரே ஆத்மா அவர்தான். என் உடல் நலனில் அக்கறை காட்டினாரே தவிர. ஒருபோதும் குறையாகப் பார்க்கவில்லை. எனது 26 ஆம் வயதில் உடல் சார்ந்த பிரச்சினையால் கர்ப்பப் பை அகற்றப்பட்டது. அதன்பின் இன்னும் உடல் எடை கூடியது. திரும்பவும் என்னை கேலிப்பேச்சுகள் துரத்தியது. அதீதமாக பெருத்த வயிறால் கால் வலி அதிகமானதால் டம்மிடெக் சர்ஜரி செய்துகொண்டேன். அது எனது மறுபிறவி என்றே சொல்லலாம். அப்போது முடிவெடுத்தேன் இவர்களை சட்டை செய்யாமல் நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று. தொடர்ந்து உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுக்கட்டுப்பாடு மற்றும் யோகா, தியானம் என்று என்மீது அக்கறை செலுத்த ஆரம்பித்தேன். அப்போது என்னை எனக்கே பிடிக்க ஆரம்பித்தது. செல்ப் லவ் கொடுக்கும் நம்பிக்கையை வேறெதுவும் கொடுக்காது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். என்னைப்போல் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது இதுதான், நம்மை நாம் நேசிக்கத் தொடங்குவோம்.

நாலு பேருக்கு நன்றி கட்டுரைத் தொகுப்பில் அறியப்படாத அசாதாரண மனிதர்களைக் குறித்து எழுதியிருக்கிறீர்கள்.. அவர்களை எழுத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் எதனால் எழுந்தது?

தாயில்லாமல் வளர்ந்த சிறுவயதில் பாசத்திற்காக ஏங்கியபோது எனக்கு மட்டும் தான் சோதனையும் வேதனையும் என நினைத்து இறைவனை நிந்தனை செய்வேன். மனதுக்குள் திட்டித் தீர்ப்பேன். அல்லாகிட்ட சொல்லிதான் கேட்கல, பிள்ளையார்கிட்ட கேட்கலாமா? அவர் பாசத்தை மட்டும் காட்டும் மனுசங்கள தருவாரா? எனக் கேட்கும் அப்பாவி சிறுமியாக இருந்த காலத்தில்,

“அடி சம்சு இந்த கேப்பைக் கருத சுட்டு கசக்கி சொளகுல உமி தட்டி சாப்டு” என்று சொன்ன கஸ்ஸாக் குப்பியை ரொம்ப பிடித்துப் போனது. அவருக்கு ஆயிரம் பிரச்சினைகளும் வலிகளும் இருந்தாலும் அவர் எனக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் அன்பை மட்டுமே கொடுப்பவராக இருந்தார். இதுபோல ‘நாலு பேருக்கு நன்றி’ தொகுப்பில் நான் பதிவு செய்திருக்கும் அத்தனை மனிதர்களும் உன்னதமானவர்களே. அதுபோன்ற மனிதர்களை இன்று பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது. ஆளுமைகள் என்றால் நமக்கு  பிரபலமானவர்கள் மட்டுமே நினைவுக்கு வருவார்கள். ஆனால் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் எந்த விளம்பரமும் இல்லாமல் வாழ்ந்த நான் பார்த்து வளர்ந்த ஆளுமைகள் இவர்கள். அதனால் இவர்களை என் எழுத்தில் பதிவு செய்ய விரும்பினேன்.

என் முதல் நூல் வெளிவந்த பிறகு என்னுள் பூட்டி வைத்த பொக்கிஷமான மனிதர்களை எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

உண்மையில் அவர்கள் அசாதாரண மனிதர்கள் தான்.

மனோதத்துவம் பற்றித் தெரியாத மன திடம் கொண்ட மனிதர்கள்.

தன்னலம் பார்க்காமல் பிறர்நலம் காப்பவர்களால் உலகில் மழை பெய்கிறது என்பார்கள்.

இன்னும் நாம் உற்றுக் கவனித்தால் மாண்புமிக்க மனிதர்கள் அமைதியாக சமூகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

சமூக விமர்சனத்தை எழுத்தில் வெளிப்படுத்தும்போது அதை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

இந்தச் சமூகத்தில் நானும் ஒரு அங்கம் எனும்போது சமூகத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்தோ அல்லது கண்டனத்தையோ பதிவு பண்ணாமல் இருந்தால் அந்த அநீதிக்கு நானும் துணை போனவள் ஆகிறேன். எப்ஸ்டீன் பிரச்சினை ஆக இருக்கட்டும், புர்கா அணிந்து ஒரு பெண் நடனமாடினாள் என்பதற்காக அந்தப் பெண்ணை தரக்குறைவாக பேசியவர்களாகட்டும் என்னுடைய எதிர்ப்பை எழுத்தில் பதிவு செய்யாமல் போனால் ஒரு எழுதும் பெண்ணாக இருந்து என்ன பிரயோசனம். உண்மையும் நேர்மையும் நம்மிடம் இருக்கும்போது அது இல்லாதவர்களிடமிருந்து வரும் விமர்சனங்களை புறந்தள்ளி விடுவேன். அவர்களும் தொடர்ந்து நாம் புறக்கணிக்கும்போது ஒரு கட்டத்தில் அமைதியாகிவிடுவார்கள்.

அடுத்த தலைமுறை பெண் எழுத்தாளர்களிடம் உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

பெண் எழுத்தாளர் ஆண் எழுத்தாளர் என்ற பாகுபாடே இருக்க வேண்டாம், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை அவரவர் சிந்தனைகளுக்கேற்ப எழுதும் முழு சுதந்திரம் வேண்டும். பெண்கள் எழுதினால் பெண் துன்பப்பட்டாள், கஷ்டப்பட்டாள் என்று மட்டுமே எழுதுவார்கள் என்னும் பொதுப்புத்தியை உடைக்க வேண்டும். ஆன்ட்ராய்டுபோன் பயன்படுத்தவே தெரியாதவளாக இருந்து தட்டுத்தடுமாறி கற்றுக்கொண்டு இன்று சமூக வலைதளங்களில் எழுதி வருகிறேன்.

அடுத்த தலைமுறைப் பிள்ளைகள் புத்தகம் வாசிப்பதை விட தொடுதிரையில் வாசிப்பதையே விரும்புபவர்களாக இருப்பார்கள். எனவே நவீன தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு, தன்னைப் புதுப்பித்துக் கொண்டே பெண்கள் எழுத்திலும் புதுமைகளைக் கொண்டுவர வேண்டும்.

இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த பெண்ணாக இருந்துகொண்டு எழுத்தாளராக இருப்பதில் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? நீங்கள் சார்ந்த சமூகம் குறித்து உங்களால் விமர்சனங்களை முன்வைக்க முடிகிறதா?

இஸ்லாமிய பெண்ணாக இருந்துகொண்டு சமூக ஊடகங்களில் நான் இயங்கத் தொடங்குமுன் உன்னால் பின்னூட்டங்களை தாங்க முடியாது, ஓடி வந்திடுவ… என எனக்கு நிறைய எச்சரிக்கைகள் வந்தன. அதனால் பயத்துடனும் தயக்கத்துடனும் தான் நான் உள்ளே வந்தேன். ஆனால் எனக்கு முன்னால் எழுத வந்த ராஜாத்தி சல்மா போன்ற பெண்களைப் பார்த்து தைரியமும் துணிச்சலும் கொண்டேன். அத்தனை விமர்சனங்களையும் புறந்தள்ளி இன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினராகி இருக்கிறார்.

அதுபோல என் பெண் இசை கற்றுக்கொண்ட போதும் என் சமூகத்திற்குள் இருந்து எதிர்ப்புகள் வந்தன. பகுத்தறிந்த ஒரு பண்பட்ட எழுத்தையே நான் எழுதினேன். ஒருபோதும் நீதியும் நேர்மையும் தவறி நான் எழுதியதில்லை. அதே சமயம் நான் சார்ந்த சமூகத்திற்குள்ளிருக்கும் பிற்போக்குத்தனம் குறித்தும் கேள்விகள் எழுப்பினேன். இதனால் இவள் பெரிய முற்போக்குவாதி என்று பேசினார்கள். பிற்போக்காக சிந்திப்பது தானே தவறு, முற்போக்காளராக இருப்பது தவறில்லையே….

நான் வாசித்த இஸ்லாமிய நூல்களில் இஸ்லாமிய நீதி, இஸ்லாமிய சட்டதிட்டம், வழக்குமொழி என்று தான் கதைகள் இருக்குமே தவிர, நிறைய புனிதப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் நான் பார்த்த நிகழ் உலகம் வேறு மாதிரி இருந்தது. எத்தனையோ பிரச்சினைகள், பெண்களின் பாடுகள், இஸ்லாம் சமூகம் சார்ந்து தற்காலத்துக்குத் தேவையான உரையாடல்கள் எதுவும் பேசப்படவில்லை.

இதையெல்லாம் குறித்து யாராவது எழுதியிருக்கிறார்களா என நான் தேடும்போது, தோப்பில் முகமது மீரானின் ‘சாய்வு நாற்காலி’ வாசிக்க கிடைத்தது. வாசித்து விதிர்த்துப் போனேன்.

அடுத்ததாக களந்தை பீர்முகம்மது எழுதிய ‘சிலுக்கு சுமிதாவும் சுலைமான் ஹாஜியாரும்’  வாசித்துவிட்டு அவரை நேரில் பார்த்து நன்றி சொல்ல வேண்டுமென தோன்றியது. ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னாலேயே சமூகத்தைச் சார்ந்த பெண் பாடுகளை எழுத்தாக்கிய புரட்சிப் பெண் எழுத்தாளர் என அறியப்படும் சித்தி ஜுனைதா பேகம் எழுதிய நூல்கள் எதுவும் எவ்வளவு தேடியும் எனக்கு கிடைக்கவில்லை. அவரின் நூல்கள் பொதுத்தளத்தில் எளிதில் கிடைக்காமல் போனதற்கான காரணம் என்ன? அதற்குப் பின்னாலிருக்கும் அரசியலை நான் கட்டாயம் விமர்சிக்கவும் கேள்வியெழுப்பவும் செய்வேன்.

தொகுப்பு : எழுத்தாளர் சித்ரா சிவன்

You Might Also Like

‘முட்கள் நிறைந்த பாதையில் பயணம்’  – எழுத்தாளர் ஆர்.வி.சரவணன்
‘எல்லாரையும் நம்பு; ஆனால் யாரையும் நம்பாதே’ – ஜி. ஏ. பிரபா
அபுல் கலாம் ஆசாத் – ஓர் உரையாடல்
‘கணியன் பூங்குன்றனார் விருது’ பாராட்டு விழா
“கட்டுரையும் ஒரு சிறுகதையே; சிறுகதையும் ஒரு கட்டுரையே.”
TAGGED:Interviewநேர்காணல்பேட்டிவிண்மீன் ஃபெப்ரவரி 2026
Previous Article Vinmeen Feb 2026 விண்மீன் ஃபெப்ரவரி 2026 மின்னிதழ்
Next Article ஒரு மனிதனின் கவனக்குறைவு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?