VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: ‘முட்கள் நிறைந்த பாதையில் பயணம்’  – எழுத்தாளர் ஆர்.வி.சரவணன்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > நேர்காணல் > ‘முட்கள் நிறைந்த பாதையில் பயணம்’  – எழுத்தாளர் ஆர்.வி.சரவணன்
நேர்காணல்

‘முட்கள் நிறைந்த பாதையில் பயணம்’  – எழுத்தாளர் ஆர்.வி.சரவணன்

எனக்கு எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணத்தை விட சினிமா இயக்குனராக வேண்டும் என்பதில் தான் தொடக்கமிருந்தே மிகுந்த ஆர்வமிருந்தது.

பரிவை சே. குமார்
Last updated: May 28, 2026 12:02 pm
10 Views
Share
8 Min Read
எழுத்தாளர் ஆர்.வி.சரவணன்
SHARE

 

எழுத்தாளர், குறும்பட இயக்குநர், குறும்பட நடிகர் எனப் பன்முகம் கொண்ட ஆர்.வி.சரவணன் அவர்கள் எனக்கு வலைப்பூ மூலமாக 2009-ல் அறிமுகமாகி, இன்று வரை ஒரு அண்ணனாய், தோழமையுடன் தொடரும் நட்புக்குச் சொந்தக்காரர்.

அவர் சொல்வதைப் போல வாழ்க்கையின் பாதை கரடுமுரடாக இருந்தாலும் அதில் பசுமையை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கும் வெள்ளந்தி மனிதர். சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பதுதான் அவரின் கனவு, அதற்கென கதையுடன், நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டிருக்கிறார்.

அவரிடம் நேர்காணல் குறித்துப் பேசியபோது நான் என்ன சாதித்துவிட்டேன் என்று என்னிடம் கேட்கிறீர்கள் என்றார். விண்மீன் நேர்காணல் என்பது சாதித்தவர்களுக்கானது அல்ல, தொடர்ந்து பயணித்துக் கொண்டு இருக்கும், அதிகம் பேசப்படாத எழுத்தாளர்களுக்கானது என்று சொன்னதும் ஒத்துக் கொண்டார்.

இவரின் எழுத்தின் மீது இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களுக்கு ஒரு ஈர்ப்பு. அதனால் பாக்யாவில் நாவல் எழுத வைத்ததுடன், அந்த நாவல் புத்தகமான போது அணிந்துரையும் அளித்திருந்தார். அவரிடம் பேசிப் பழகியவர்களுக்குத் தெரியும் அவரின் வெள்ளந்தி மனது, அதுதான் இந்தப் நேர்காணலிலும் இருக்கிறது.

அவரின் எதார்த்தமான பதில்கள்…

தங்களது எழுத்துப் பயணம் பற்றிச் சொல்லுங்கள்?

எங்கள் வீட்டில் அனைவரும் புத்தகப் பிரியர்கள். தாத்தா வீட்டிலேயே மினி லைப்ரரி வைத்திருந்தார். சக்கரவர்த்தி திருமகன், கடல் புறா ,பொன்னியன் செல்வன் என ஆரம்பித்து முக்கிய  எழுத்தாளர்களின் புத்தகங்கள் பல அதில் இருந்தன.

குமுதம், ஆனந்த விகடன், கல்கி, வார இதழ்கள் வரும் நாட்களில் வீட்டில் யார் முதலில் படிப்பது என்று சிறு ரகளையே நடக்கும். அம்மா, மாமாக்கள், சித்தி இவர்களெல்லாம் தொடர்கதைகளை பற்றியும், கேரக்டர்களைப் பற்றியும்  விவாதிப்பதைப் பார்க்கையில்  எனக்கும் ஆர்வம் வந்தது.

அப்படி என்ன இருக்கிறது என்று புத்தகங்களை புரட்ட ஆரம்பித்தவன் பின்  படிக்க தொடங்கி  அதிலேயே மூழ்கி விட்டேன். தொட்டு விடத் தொட்டு விட தொடரும் என்பது போல் வார இதழ்களிருந்து  தாத்தாவின் லைப்ரரியில் உள்ள புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.( ஒரு பள்ளி விடுமுறை நாளில் பொன்னியின் செல்வன் முதலாவது பாகம் ஒரே நாளில் படித்து முடித்தேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள்) 

இப்படி தொடர்ந்து படித்து வர வர, நாமும் எழுத வேண்டும் என்ற உந்துதல் வந்தது. எழுதத் தொடங்கினேன். வலைப்பூ, முகநூல், பத்திரிகைகள் வரை வந்திருக்கிறேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவனை இதோ இன்று இந்தக் கேள்வியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது காலம்.

தங்களின் கதைகளில் காதலே மையப்பொருளாக இருப்பதன் காரணம் என்ன?

காதல் மேல் கொண்ட காதலால் இருக்கலாம். ஹா… ஹா… ஆனால்  நிஜத்தில் நான் காதலித்ததில்லை. எனவே என் நாயக, நாயகிகளை கதைகளில் ஆசை தீர காதலிக்க வைத்து அழகு பார்க்கிறேன்.

பின் குறிப்பு :  வார இதழ்களில் வெளியான எனது சிறுகதைகளில்   5 கதைகளில்   காதல் என்பது மருந்துக்குக் கூட கிடையாது.

திரைக்கதை வடிவில் எழுதுவதற்கு ஏதேனும் பிரத்யேக காரணம் இருக்கிறதா?

எனக்கு எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணத்தை விட சினிமா இயக்குனராக வேண்டும் என்பதில் தான் தொடக்கமிருந்தே மிகுந்த ஆர்வமிருந்தது. சினிமாக்களில் வரும் காட்சிகளை  பார்க்கையில் இதை நாம் செய்தால் எப்படி இருக்கும் என்று சிறு வயது முதலே கற்பனை செய்து பார்த்து கொண்டிருப்பேன்.

உதாரணத்திற்குச் சொல்லப் போனால் எழுத்தாளர் ராஜேந்திரகுமார் எழுதிய நாவல் ஒன்றைப் படித்தபோது,  அது பிடித்து போய் அதை திரைக்கதையாக கற்பனையில் எழுதிப் பார்த்தேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இப்படித் திரையில் பார்ப்பதையும் படிக்கும் கதைகளையும் திரைக் காட்சிகளாக உருவகம் செய்யச்செய்ய  அது பழகிப் போய்  திரைக்கதை வடிவிலேயே  என் கதைகளை யோசிக்க  வைத்து விட்டது.

எனது முதல் நாவலான  ‘இளமை எழுதும் கவிதை நீ’ , சினிமா திரைக்கதை போல் தான் எழுதினேன். ஆனால் அடுத்த நாவலான ‘திருமண ஒத்திகை’ அதைத்  தொடர்ந்து எழுதிய ‘தொடத்தொட தொடர்கதை நீ’, ‘பூங்கதவே தாழ் திறவாய்’ இவையெல்லாம் நாவல் கட்டமைப்பில் எழுதியவையே.

‘இளமை எழுதும் கவிதை நீ’ நாவலைப் போல் முழுக்க முழுக்க காதல் நிறைந்த இன்னொரு நாவலை எப்போது எழுதப் போகிறீர்கள்?

எனது கதைகள் பெரும்பாலும் நகரத்தைச் சுற்றியே நிகழ்வதாக அமைந்திருக்கிறது. நண்பர்கள் சிலர் இதை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்கள். கிராமம் சார்ந்த, மண் மணம் நிரம்பிய வாழ்க்கை ஒன்றை அழுத்தமான காதலுடன் எழுத ஆர்வமிருக்கிறது. அதற்கான சூழல் அமையும் போது எழுத இருக்கிறேன். கதையின் தலைப்பு கூட முடிவு செய்து விட்டேன். தலைப்பு ‘விடல புள்ள நேசம்’

சிறுகதை, நாவல், சினிமா கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதுவதற்கு அலுவலகம், வீடு இரண்டையும் கடந்து எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?

அலுவலகம், வீடு இரண்டையும் கடந்து எனக்கு கிடைக்கும் நேரங்கள் :

தூக்கமில்லா இரவுகள்…

தொலை தூர பயணங்கள்…

யாருக்காகவது எதற்காகாவது காத்திருக்கும் நேரங்கள்…

கல்யாணங்களில் கலந்து கொள்ளும் போது  பேச யாருமில்லாத பொழுதுகள்…

தினமும் ரயிலில் சென்று வரும் நேரங்கள்

இவையெல்லாம்  கதைகளை கற்பனை செய்யவோ கதைகள்  எழுதவோ எனக்கு பயன்படுகிறது.

வலைப்பூ, முகநூல், பத்திரிக்கைகளில் எழுதுவதில் உள்ள வேறுபாடு என்ன? தங்களுக்கு எதில் எழுதுவது பிடித்திருக்கிறது?

வலைப்பூ, முகநூல் என்பது சொந்த பிசினஸ் செய்வது போல். இஷ்டப்படி நினைத்த நேரத்தில் எழுதலாம், வெளியிடலாம். அதற்கான விமர்சனமும் உடனே கிடைத்து விடும். ஆனால் பத்திரிகையில் எழுதுவது என்பது ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பது போல். எழுதி அனுப்பி விட்டு வெளியாகும் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். சன்மானத்திற்காகவும் காத்திருக்க வேண்டும். எதில் எழுதினாலும்  தொடர்ந்து எழுதுகிறோம் அல்லவா… அதுவே  பிடித்திருக்கிறது.

போட்டிகளில் பெறும் வெற்றிகளை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

தோல்விகள் அதிகம் சுமந்தவனுக்கு சிறு வெற்றியும் பெரிது தான்.  எழுத்துத் துறையைப் பொறுத்தவரை பல சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொண்டிருந்தாலும் இரண்டு போட்டிகளில் மட்டுமே ( ஆறுதல் பரிசு, மூன்றாம் பரிசு) வெற்றி பெற்றிருக்கிறேன். என் முயற்சிகளுக்கு கிடைத்த ஊக்கம் என்பதாகவே இவற்றை எடுத்து கொள்கிறேன்.

குறும்படம் இயக்கினீர்கள், நடித்தீர்கள்… ஏன் நிறுத்திவிட்டீர்கள்? மீண்டும் அவற்றில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறதா?

சினிமாவில் சேர்ந்து இயக்குனராக வேண்டும் என்பது எனது அவா. ஆனால் சூழ்நிலை சினிமாவுக்குள் நுழைய விடவில்லை. ஆகவே, எனது ஆசைக்காக சில முயற்சிகளைச் செய்து பார்த்தேன். இயக்கிய இரு குறும்படங்களுமே கவனம் பெறவில்லை. சரியான குழு (Team) அமையாததும்,  திட்டமிடலில் ஏற்பட்ட குழப்பங்களுமே  காரணம். அதில் கிடைத்த அனுபவங்களும் சிரமங்களும் அடுத்து செய்வதை சரியாகச் செய்ய வேண்டும் என்பதைக் கற்று கொடுத்திருக்கிறது. மீண்டும் குறும்படம் எடுக்கும்  ஆர்வமிருந்தாலும் பொருளாதாரம் தயங்கத்தை கொடுக்கிறது என்பதுதான் உண்மை.

சினிமா இயக்க வேண்டும் என்ற தங்களின் கனவு எப்போது நனவாகும்? அதற்கான முயற்சிகள் எந்த நிலையில் இருக்கிறது?

கனவுகள் இருந்து என்ன பயன்? யதார்த்தம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா..? சினிமாவிற்கு  உள்ளிருக்கும் எத்தனையோ பேர் வெளிச்சம் கிடைக்க போராடி உழைத்து கொண்டிருக்கையில், நான் வெளியில் நின்றபடி சினிமாவையும், அதன் செயல்பாடுகளையும் வேடிக்கை பார்ப்பவனாய் மட்டுமே இருக்கிறேன். தொடர்ந்து நான் மேற் கொள்ளும் முயற்சிகளைப் பார்த்து, வயது ‘என்னத்தை இனிமே’ என்று இடித்துரைத்தாலும் மனது மட்டும் ‘இனி தான் எல்லாமே இருக்கு’  என்ற நம்பிக்கையைக் கொடுத்து கொண்டிருக்கிறது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

தாங்கள் எழுத ஆரம்பித்து இன்னும் புத்தகமாக்கப்படாமல் இருக்கும் ‘அரியாசனம்’ நாவல் எப்போது வெளிவரும்?

இது சினிமா எடுப்பதற்காக  உருவாக்கப்பட்ட கதை. அதாவது ஒரு சாமானியன் திடீரென முதல்வர் ஆகிறான். ஆன’பின் என்ன செய்வான்..? என்ன ஆவான்..? என்பதே இதன் ஒன்லைன்.

1996 கால கட்டத்தில் உருவான இந்த படைப்புக்கான  இன்ஸ்பிரேசன் சுஜாதா அவர்கள் எழுதிய பதவிக்காக நாவல் தான். ஆனால் பாருங்கள். இந்த வகைப் படங்கள் நிறைய வந்து விட்டது. ஆனாலும் என் படைப்பு மீதான எனது நம்பிக்கை இன்று வரை குறையவில்லை. சினிமா உலகில்   இந்த கதையை சொல்லும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை. (ஆனாலும் கதை கேட்ட நண்பர்கள் நன்றாக இருக்கிறது என்கிறார்கள்)

ஏற்கனவே எழுதிய இரு நாவல்களும் எழுதி முடித்த பின்னரே  தங்களுக்கான அடையாளத்தைத் தேடி கொண்டன. ஆகவே இதை நாவலாகவே எழுதி முடித்து விடலாம் என்ற எண்ணத்திற்கு இப்போது வந்திருக்கிறேன்.

 

இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களுடனான தங்களின் நட்பு பற்றிச் சொல்லுங்களேன்.

ஒரு ரசிகனாக அறிமுகமாகிய போது கை குலுக்கி நட்பு பாராட்டியவர், எனக்கு எழுத வரும் என்று தெரிந்த பின் என் படைப்புகளை கேட்டறிந்த  பின் அன்போடு அரவணைத்து கொண்டார். 

ஒரு முறை பாக்யராஜ் வர சொல்லியிருந்தார். அவரை பார்க்க சென்றிருந்தேன். லேப்டாப்பில்  படம் பார்த்து கொண்டிருந்தவர், “சரவணன் படம் முடியப் போகுது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க க்ளைமாக்ஸ் முடிச்சிடறேன். அதுக்குள்ள நீங்க ஸ்நாக்ஸ் காபி சாப்பிட்டிட்டிருங்க” என்று உபசரித்தார். அவர் திரைப்படம் பார்த்து கொண்டிருக்க, நான் அவர் அன்பை வியந்தபடி  அமர்ந்திருந்தேன்.

தங்களைப் பற்றியும் கடந்து வந்த பாதை குறித்தும் சொல்லுங்கள்?

மிடில் கிளாஸ் பேமிலி தான். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். வேலை கிடைக்காததால் செக்யூரிட்டி, பியூன் ஆக வேலையைத் தொடங்கியவன் சில ஆண்டுகளில் ஒரு துறையை நிர்வகிக்கும் மேலாளராக உயர்ந்திருக்கிறேன். ஒரு வேலையை நம்பி ஒப்படைத்தால் அதை சரியாக செய்து முடித்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

குடும்ப வாழ்க்கையில் எங்களது மகன், மகள் இருவருமே மாற்று திறனாளிகள் என்பதால் நானும் மனைவியும் கடந்து வந்து கொண்டிருக்கும்  பாதை முட்கள் நிறைந்ததாக இருக்கிறது.  இதோ முட்கள் இல்லாத பாதையும் இறைவன் அருளால்  தென்பட்டு விடும் என்ற நம்பிக்கையுடனே போராட்ட வாழ்க்கையை தொடர்ந்து  கொண்டிருக்கிறோம்.

 

தீவிர வாசிப்பாளரான தங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்? ஏன்?

சாண்டில்யன், கல்கி, சுஜாதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர். எனத் தொடரும் எழுத்தாளர்களின் எழுத்துக்களில்  இருக்கும் ஈர்ப்பு  தனி உலகத்துக்குள் என்னை அழைத்து சென்று சுற்றிக் காண்பித்து கொண்டு வந்து இறக்கி விடும் வல்லமை கொண்டது.

முன்னணி எழுத்தாளர் என்ற வட்டத்துக்குள் நானும் ஒருவனாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உண்டா?

எந்த துறையாக இருந்தாலும் அதில் முன்னணிக்கு வர வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும் எனக்கு மட்டும் இல்லாமல் இருக்குமா..?

தற்போது எழுதும் படைப்பாளிகளில் – தாங்கள் வாசித்த வகையில் – யாருடைய எழுத்து உங்களுக்குப் பிடித்திருக்கிறது? ஏன்? (ஒருவர் என்றில்லை பலரைக் கூட குறிப்பிடலாம்)

ஜி.ஆர்.சுரேந்தர்நாத், இமையம், லஷ்மி சரவணகுமார் (இந்த வரிசையில் இன்னும் பலர் இருக்கிறார்கள்)

அவர்களது எழுத்துக்களில் இருக்கும்  ருசிகரம் எனக்குப் பிடித்திருக்கிறது.

எழுதுபவர்களுக்கு தாங்கள் கொடுக்கும் அறிவுரை என்று சொல்வதைவிட குறிப்பு (Tips) என்ன?

நல்ல எழுத்துக்களை தேடி படித்துக் (காதலித்து) கொண்டே இருங்கள். எழுத்து உங்களைக் காதலிக்க தொடங்கும்.  நிறையப்  படியுங்கள். நிறைவாய் எழுத வரும். (இந்தக் குறிப்பை எனக்கும் சொல்லி கொள்கிறேன்)

நன்றி.

You Might Also Like

கண்டிப்பாரற்ற சுதந்திரப் பறவை
பின்னல்
பயணம் (கிழமைபட வாழ்)
தெரியாத விசயத்தை எழுதுவதில்லை
உம்மாவின் துப்பட்டா
TAGGED:Interviewநேர்காணல்பேட்டிவிண்மீன் ஏப்ரல் 2026
Previous Article Vinmeen Apr 2026 அஞ்சலியில் அரசியல்
Next Article முண்டாசு கவியும் புரட்சி கவிஞரும்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?