ஆன்லைனில் இந்திரா சவுந்திர ராஜன் எழுதிய இறையுதிர் காடு வாசித்தேன்.
அமானுஷ்ய நாவல்கள் வாசிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இந்திரா சவுந்திரராஜன் என் அபிமான எழுத்தாளர்.
புஸ்தகா தளத்தில் அவரது இறையுதிர்காடு நாவல் வாசித்து பிரமித்துப் போனேன்.
நிகழ்காலத்திலும் முன் காலத்திலும் என இரு பாதைகளில் பயணிக்கும் நாவல் இறுதியில் ஒன்றினைந்து நமக்குத் தெரிவிக்கும் தகவல் அற்புதமானது.
சித்தர்களின் வாழ்வியல் ஒழுக்கநெறிகள், கட்டுப்பாடுகள் என இந்த நாவலில் எழுத்தாளர் சொல்லும் தகவல்கள் ஏராளம்.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. இறுதியில் டிவிஸ்டுக்கும் குறைவில்லை.
சித்தர்களின் புதையலை பாதுகாக்கும் பாம்பு நம்மை பயமுறுத்துகிறதோடு பாடமும் கற்பிக்கிறது.
போகர், அவரது மாணவர்கள் புலிப்பாணி உள்ளிட்ட பல சித்தர்களோடு உடன்பயணிக்கும் உணர்வை தந்த அருமையான நாவல்.
அனைவரும் படிக்க வேண்டிய சுவையான நாவல். புஸ்தகா இணைய தளத்தில் கிடைக்கிறது. நன்றி.


