VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: ‘சிலிர்ப்பு’ (தி. ஜானகிராமன்) – ஒரு பார்வை (அதிர்வு)
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > புத்தகப் பார்வை > ‘சிலிர்ப்பு’ (தி. ஜானகிராமன்) – ஒரு பார்வை (அதிர்வு)
புத்தகப் பார்வை

‘சிலிர்ப்பு’ (தி. ஜானகிராமன்) – ஒரு பார்வை (அதிர்வு)

'சிலிர்ப்பு' (தி. ஜானகிராமன்) - ஒரு பார்வை (அதிர்வு)

பாலமுருகன். லோ
Last updated: May 24, 2026 5:24 pm
Share
3 Min Read
'சிலிர்ப்பு' (தி. ஜானகிராமன்) - ஒரு பார்வை (அதிர்வு)
SHARE

அறிமுகம்

எழுத்தாளர் தி. ஜானகிராமன் அவர்கள், வறுமையின் கோரப் பிடியில் சிக்கி இளம் வயதிலேயே வேலைக்குத் தள்ளப்படும் ஒரு சிறுமியின் நிலையையும், மனிதநேயம் என்பது குழந்தைகளிடம் குறையாமல் காணப்படுவதையும் ‘சிலிர்ப்பு‘ என்ற இக்கதையில் அழகாக எடுத்துரைக்கிறார். அதே மனிதநேயம், படித்த, பணம் படைத்தவர்களிடம் ஏன் இருப்பதில்லை என்ற ஆழமான கேள்வியையும் இக்கதை எழுப்புகிறது. முகம் தெரியாத நபர்களாக இருந்தாலும், குழந்தைகளிடையே காணப்படும் அன்பு, நேசம், பரிவு போன்ற குணங்கள் மாறாதவை என்பதைத் தன் எழுத்தின் மூலம் தெளிவாக நமக்கு உணர்த்துகிறார்.

 

பயணத்தின் தொடக்கம்

திருச்சிராப்பள்ளியிலிருந்து மாயவரம் செல்லும் தொடர்வண்டி, நடைமேடையில் நின்றுகொண்டிருந்தது. கடைசிப் பெட்டிக்கு அடுத்தாற்போலிருந்த பெட்டியில் தந்தையும் மகனும் அமர்ந்திருந்தனர். பயணத்தின் அசதி காரணமாக, மகன் தன் தந்தையின் மடியில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் பெங்களூரிலிருந்து திருச்சிராப்பள்ளி வந்து, அங்கிருந்து கும்பகோணம் சென்றுகொண்டிருந்தனர். தந்தை, தன் மகனை அவனது மாமன் வீட்டிலிருந்து அழைத்துச் செல்கிறார். தொடர்வண்டி நிலையத்தின் அன்றைய சூழலை எழுத்தாளர் விவரிக்கும்போது, அது இன்றும் மாறாமல் இருப்பது நம்மை சிந்திக்க வைக்கிறது. நாம் இருக்கும் இடத்தை அழகாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்வதில் அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.

 

ஒரு சந்திப்பும், சிறுமியின் கதையும்

அவர்கள் இருந்த அதே பெட்டியில், ஒரு நடுத்தர வயது அம்மையாரும், அவருடன் பத்து வயது சிறுமி ஒருத்தியும் எதிர்ப்புறமாக அமர்ந்தனர். பையனின் தந்தை அவர்களிடம் நலம் விசாரித்தபின், அந்தச் சிறுமியின் பெயர் காமாட்சி (குஞ்சு) என்றும், அவள் தன் பெரிய குடும்பத்தின் வறுமை காரணமாக கொல்கத்தாவிற்கு வேலைக்குச் செல்வதாகவும் அறிந்துகொள்கிறார். தனக்கு நான்கு அக்கா, இரண்டு அண்ணன், ஒரு தம்பி, ஒரு தங்கை எனப் பெரிய குடும்பம் இருந்தும், தந்தையால் அனைவரையும் படிக்க வைக்க இயலவில்லை என்பதை அந்தச் சிறுமி குறிப்பிடுகிறாள்.

 

படித்தவர்களின் ஈரமற்ற இதயம்

“இத்தனை காலம் எங்கே வேலை செய்தாய்?” என்று தந்தை கேட்டபோது, அவள் ஒரு நீதியரசர் வீட்டில் வேலை செய்ததாகக் கூறுகிறாள். ஆனால், அங்கே அவளுக்குச் சம்பளம் எதுவும் கிடையாது; இரண்டு வேளை சாப்பாடும், தீபாவளிக்குப் புதுச் சட்டையும் மட்டுமே கிடைத்துள்ளது. அவள் மெலிந்து காணப்படுவதற்குக் காரணம், அந்த வீட்டில் பாதி நாட்கள் வற்றல் குழம்பு, சுட்ட அப்பளம் போன்ற எளிய உணவையே உண்பதுதான். மூன்றாண்டுகள் வேலை செய்த இடத்திலிருந்து கிளம்பும்போது கூட, அவளுக்குப் ‘பழையது‘ போட்டு அனுப்பியதை அறிந்தபோது, படித்த, வசதி படைத்த மனிதர்களின் மனதை எண்ணி வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. உடன் வந்த அம்மையார், “உள்ளம் குளிர வேண்டும் என்பதற்காகப் பழையதைப்போட்டு அனுப்பி வைத்தார்களோ?” என்று கூறும் கிண்டல், அந்தச் சூழலின் அவலத்தை மேலும் அதிகரிக்கிறது.

 

மனிதநேயத்தின் சிலிர்ப்பு

தஞ்சாவூரில் தொடர்வண்டி நின்றதும், சிறுமி பழைய சோறு சாப்பிட்டதை அறிந்த தந்தை, தன் மகனுடன் அவளையும் அழைத்துச் சென்று உணவு வாங்கித் தருகிறார். தாய் இல்லாமல் இருக்கும் அந்த இரண்டு குழந்தைகளும் அவருக்கு அநாதைகளைப் போலத் தோன்றினர். ‘அன்னை இல்லையேல் அநாதைதான்‘ என்ற எழுத்தாளரின் வரி இங்கே நினைவுகூரத்தக்கது. உணவின் காரம் தாங்காமல் அவன் “தண்ணீர்” எனக் கேட்க, காமாட்சி சட்டென ஓடிப்போய் சர்க்கரையை அள்ளி அவன் வாயில் போடுகிறாள். பின்பு சாதத்தைப் பிசைந்து அவனுக்கு ஊட்டுகிறாள். அதுவரை பிடிவாதம் பிடித்த அவன், அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தது, குழந்தைகளின் கள்ளமற்ற பாசத்தை அழகாகக் காட்டுகிறது.


முடிவுரை

கும்பகோணத்தில் இறங்கும் நேரம் வந்தது. தந்தை அந்தச் சிறுமிக்கு ஒரு ரூபாயைக் கொடுத்தார். அடுத்த கணமே, அதுவரை தன் கையில் வைத்திருந்த ஆரஞ்சுப் பழத்தை, சிறுவனின் கைகள் காமாட்சியிடம் நீட்டின. அன்புடன் கொடுத்த அந்தப் பழத்தை அவளும் மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டாள். தன் மகனின் இந்தச் செய்கையைக் கண்ட தந்தைக்கு உடம்பு சிலிர்த்தது. தன் மகனை அணைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றி, அப்படியே அணைத்துக்கொண்டார். ‘அன்பையே, சச்சிதானந்தத்தையே கட்டித் தழுவுகிற ஆனந்தம் அது‘ என்று திரு. தி. ஜானகிராமன் அவர்கள் கதையை முடித்திருக்கும் விதம், நம் இதயத்தையும் சிலிர்க்க வைக்கிறது. இதுவே இக்கதையின் உச்சம்.

PrevPreviousதர்மம்
Nextஏழு நூல்கள் வெளியீடு – கேலக்ஸி மதுரை வாசகர் வட்டம்Next

You Might Also Like

ரோந்து
தர்மம்
எதிர்பாராதது…
காதலுக்கு பிரபஞ்சம் ஒரு கைப்பிடி
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – தமிழ்க்காதலன்
TAGGED:நூல் அறிமுகம்புத்தகப் பார்வைபுத்தகம்விண்மீன் நவம்பர் 2025விமர்சனம்
SOURCES:rubynews.comtimenews.com
VIA:ThemeRubyMarsNews
Previous Article தர்மம்
Next Article ஏழு நூல்கள் வெளியீடு – கேலக்ஸி மதுரை வாசகர் வட்டம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (12) கட்டுரைகள் (18) கவிதைகள் (28) குறுநாவல் (1) சிறுகதைகள் (68) திரைப் பார்வை (8) தொடர்கள் (14) நிகழ்ச்சிகள் (4) நேர்காணல் (11) புத்தகப் பார்வை (34) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • June 20261
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (18) Interview (11) Poems (28) Series (14) Short Stories (69) ஆசிரியர் பக்கம் (12) இளையராஜா (2) கட்டுரை (11) கட்டுரைகள் (17) கவிதைகள் (28) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (2) சினிமா (8) சிறுகதைகள் (74) தலையங்கம் (12) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (14) நாவல் (7) நிகழ்ச்சி (4) நிஸ்வா (10) நூல் அறிமுகம் (34) நூல் வெளியீடு (3) நேர்காணல் (11) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (34) புத்தகம் (34) பெருங்கதை (1) பேட்டி (11) மதுரை (2) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (42) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?