VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: உன்மத்தம்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > புத்தகப் பார்வை > உன்மத்தம்
புத்தகப் பார்வை

உன்மத்தம்

சௌமியா இராஜாராம்
Last updated: June 18, 2026 1:31 pm
7 Views
Share
2 Min Read
உன்மத்தம்
உன்மத்தம்
SHARE

ஆசிரியர்: பரிவை சே. குமார்

 

கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்கு கருத்தினையும் தருவது கலையாகும். கருத்துடன் கலைத்திறனை நோக்காகக் கொண்டு காலவெள்ளத்தைக் கடந்து நிற்பன ஆகும். சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள்.

 

நிகழ்கலை வாழ்வியலோடு ஒருங்கிணைந்த ஒன்றாக வாழும் சிற்றூர் மக்களுள் கலைதான் வாழ்வே என்று எண்ணும் கலைஞர்களின் வாழ்வியல் போராட்டங்கள் எப்படியிருக்கும் என்பதை பற்றியும், தனக்கு முடியாத சூழ்நிலையிலும் அக்கலையின் மீதுள்ள ஆர்வம் குறையாது அதனை வளர்க்க நினைத்து தன் வாழ்வே கலைக்காகத்தான் என்றிருக்கும் கலைஞர்களையும் பற்றியும் பேசும் நூல்தான் ‘உன்மத்தம்’.

 

குடும்ப சூழ்நிலையால் உடலளவில் அக்கலையை பிரிந்திருந்தாலும் மனதளவில் தன்னுடனே இருக்கும் அக்கலையினைப் பற்ற ஏங்கும் ஒரு கலைஞனின் மனப்போராட்டத்தை நம் கண்முன் காட்சிப்படுத்துகிறது இந்நாவல். இக்கதையின் முக்கியக் கதாபாத்திரமாக இருக்கும் ராஜவேலு சில காரணங்களாலும் நாடக நடிகனான மூத்த மகன் விபத்தில் இறந்த துக்கத்தாலும் தான் விரும்பி ஏற்றுக் கொண்ட கலையை விட்டொழிக்கிறார் என்றாலும் தன்னுள் ஆக்கிரமித்த அக்கலையை தனிமையின் தாக்கத்தில் மீண்டும் உயிர்ப்பிக்க நினைக்கிறார். இக்கலையினை தன்னால் மேலும் வளர்க்க முடியும் என்ற எண்ணத்தோடு மனதுடன் போராட்டம் நடத்தும் ஒரு கலைஞனை ஊரும் உறவும் எப்படிப் பார்க்கும் என்பதையும், அக்கலைஞன் என்ன ஆனான் என்பதையும் பற்றிப் பேசும் இந்நாவலை நான் வாசித்து மகிழ்ந்தேன். நீங்களும் வாசிக்க வேண்டும்.

 

ஒரு விசயத்தை கலை நோக்கோடு அணுகி வாழ்வியலோடு கலந்து நாளடைவில் வெற்றிகரமாக அமைத்துக் கொடுக்கும் எழுத்து பாணி கொண்ட எழுத்தாளர் பரிவை சே. குமார் அவர்களின் எழுத்தில் உருவான ‘உன்மத்தம்’ ஒரு தகவல் களஞ்சியம் என்றுதான் சொல்ல வேண்டும். நாம் அறிந்திராத பல செய்திகளை உள்ளடக்கி கலையின் உச்சத்தைத் தொட்டு நிற்கும் புத்தகத்தை உங்களுக்காக இந்தக் கட்டுரையின் வாயிலாகப் பரிந்துரைக்கிறேன்.

 

கூத்து பற்றித் தெரிந்தவர்கள் மட்டுமின்றி, அதைத் தெரியாதவர்களும் இந்நாவலை வாசித்தால் அது குறித்து அறிந்து கொள்ள முடிவதுடன் ஒரு தீராத் தாகம் கொண்ட கலைஞனுடன் ‘உலக சயனா சரணம்’ என அவன் பாடும் மேடையில் அமர்ந்து ரசித்த மகிழ்வைப் பெற முடியும்.

 

நன்றி.

PrevPreviousவாசிப்பும் எழுத்தும்
Nextநந்தனின் நாலு கட்டு வீடுNext

You Might Also Like

களம்காவல் (மலையாளம்)
பகிர்வு
புதிய தொடக்கம்…
ஸெரிப்ரம்
இன்னொரு சாவி
TAGGED:சிறுகதைகள்நாவல்நூல் அறிமுகம்புத்தகப் பார்வைபுத்தகம்விண்மீன் செப்டம்பர் 2025விமர்சனம்
Previous Article Vinmeen August 2025 வாசிப்பும் எழுத்தும்
Next Article நந்தனின் நாலு கட்டு வீடு நந்தனின் நாலு கட்டு வீடு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?