நினைவுகள்
இத்தனை நாள்
எனக்குக் கிடைத்த
மரியாதையெல்லாம்
என்னால் தான்
கிடைத்ததென நினைத்தேன்!
அத்தனை மரியாதையும்
உன்னால் தான் கிடைத்தது எனப்
பின்னாலில் தான்
தெரிந்து கொண்டேன்!
இன்னாளில் நீயுமில்லை
எனக்கந்த மரியாதையுமில்லை!
மனம் சோர்ந்திருந்தப்
போதெல்லாம் என்னைச்
சுறுசுறுப்பாக்கித்
துள்ளியெழ வைத்தது நீ தானே!
மற்றொரு தாயாக – என்
மனைவியாக மந்திரியாக!
என்னை இடித்துரைத்து இடித்துரைத்து
எந்திரமாய் செயல் படவைத்ததும் நீதானே!
இன்று என்னிடம் இருப்பது
உன் நிழல் படமும்
உன் நினைவுகளும் மட்டும் தானே!
போடி – வினோ


