VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: வேர்களின் சாவி
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > குறுநாவல் > வேர்களின் சாவி
குறுநாவல்

வேர்களின் சாவி

சில உண்மைகள் புதைந்திருப்பதே நல்லது.

கங்கா
Last updated: May 28, 2026 1:04 pm
Share
12 Min Read
வேர்களின் சாவி
SHARE

வேர்களின் சாவி

 

–      கங்கா (காங்கேயன் பசுபதி),

கலிபோர்னியா

1

நியூயார்க் — 2002, மார்ச்

 

மூன்று வயதில் தாத்தா இறந்தார். நினைவில் இருப்பது ஒன்றே ஒன்று — அவர் கை. பெரிய, கரடுமுரடான கை. என் சிறிய விரல்களைப் பற்றிய அந்தக் கை, இருபத்தாறு வருடம் கழித்து மீண்டும் என்னைத் தொட்டது.

 

வாய்ஸ்மெயில்.

 

“காவ்யா, புதுச்சேரியிலிருந்து வக்கீல் விஸ்வநாதன். உங்கள் தாத்தாவின் வீடு இடிக்கப்படுகிறது. ஒரு சாவி உங்களிடம் இருக்கிறது. நீங்கள் வர வேண்டும்.”

 

சாவி…?

 

நியூஜெர்சியில் இருக்கும் அப்பாவுக்குப் போன் செய்தேன்.

 

“அப்பா, புதுச்சேரியிலிருந்து—”

 

“போகாதே.” குரல் கத்தியின் கூர்மை.

 

“ஏன்?”

 

“உன் தாத்தா ஒரு துரோகி காவ்யா. அந்த வீட்டை இடிச்சா நல்லது.”

 

சொடுக்.

 

என் கை நடுங்கியது. அப்பா தாத்தா பற்றிப் பேசுவதே இல்லை. இப்போது திடீரென்று — துரோகி?

 

அன்றிரவு தூக்கம் வரவில்லை.

 

2

நியூ ஜெர்சி

 

மறுநாள் அப்பா வீட்டுக்குப் போனேன்.

 

அவர் இல்லை. அம்மா சொன்னாள்: “ஆபீஸ் போயிருக்கார்.”

 

நான் நேராக அவர் அறைக்குப் போனேன். பழைய அலமாரி. அதன் மூலையில் ஒரு மரப்பெட்டி. பிரெஞ்சில் எழுதியிருந்தது: “Ne jamais ouvrir.”

 

ஒருபோதும் திறக்காதே.

 

திறந்தேன்.

 

உள்ளே — நான்கு இதழ் வடிவ வெண்கலச் சாவி. அதன் பிடியில் ஆறு எழுத்துக்கள்: LVEDLR.

 

கூடவே ஒரு மஞ்சள் காகிதம். தாத்தாவின் கையெழுத்து:

 

“இந்தச் சாவி ஒரு கதவைத் திறக்கும். ஆனால் அந்தக் கதவைத் திறந்தால், குடும்பத்தின் உண்மை வெளிவரும். தற்போது சில உண்மைகள் புதைந்திருப்பதே நல்லது.”

 

அப்போது கதவு திறந்தது. அப்பா.

 

பெட்டியைப் பார்த்தார். முகம் வெளிறியது.

 

“நீ… இதைத் திறந்தியா?”

 

“அப்பா, என்ன இது?”

 

அவர் சுவரில் சாய்ந்தார். கண்களை மூடினார்.

 

“உன் தாத்தா துரோகி மட்டுமில்ல காவ்யா…”

 

நிறுத்தினார்.

 

“என்ன அப்பா?”

 

“அவர் அதைவிடப் பயங்கரமான ஒன்றைச் செய்தார்.”

 

அவர் அறைக்குள் போய் கதவை சாத்திக்கொண்டார்.

 

3

புதுச்சேரி — ரூ டூப்ளே

 

இரண்டு நாள் கழித்து. சென்னை விமான நிலையம். டாக்சியில் புதுச்சேரி.

 

ECR சாலை. வலதுபுறம் கடல். இடதுபுறம் சுண்ணாம்பு சுவர்கள். காற்றில் உப்பு வாசனை.

 

புதுச்சேரி எல்லை.

 

திடீரென்று எல்லாம் மாறியது. சாலை குறுகியது. வீடுகள் மஞ்சள் நிறம். பால்கனிகளில் பூச்செடிகள். தெரு விளக்குகள் பிரெஞ்சு ஸ்டைல்.

 

இது இந்தியாவா? பிரான்ஸா?

 

ரூ டூப்ளே தெரு. வக்கீல் விஸ்வநாதன் அலுவலகம்.

 

வெள்ளை வேஷ்டி. வெள்ளைச் சட்டை. எழுபது வயது.

 

“வாங்க காவ்யா. உங்க தாத்தா பத்தி நிறைய கேள்விப்பட்டிருப்பீங்க.”

 

“ஒன்னும் தெரியாது சார். அப்பா பேசவே மாட்டார்.”

 

அவர் பெருமூச்சு விட்டார்.

 

“1954. புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த வருடம். அந்த இரவு என்ன நடந்ததோ… உங்க தாத்தா மேல பழி விழுந்தது.”

 

“என்ன பழி?”

 

“ஆளுநர் லூசியனைக் கொன்னதா சொன்னாங்க.”

 

என் மூச்சு நின்றது.

 

அப்போது வெளியே ஒரு கார் நின்றது. இறங்கியவர் — வெள்ளைக்காரப் பெண். அறுபது வயது. நீலக் கண்கள்.

 

நேராக என்னிடம் வந்தாள்.

 

“நீங்கள் மகாதேவனின் பேத்தியா?”

 

“ஆமா…”

 

“நான் மேரி. பியர் லூசியனின் மகள். புதுச்சேரியின் கடைசி பிரெஞ்சு ஆளுநரின் மகள்.”

 

அவள் கண்களில் நெருப்பு. விஸ்வநாதன் அங்கிள் நீங்கள் இங்கு வருவதாகக் கூறினார்.

 

“என் தந்தை இறக்கும்போது உங்கள் தாத்தாவுடன் தான் கடைசி நிமிடங்களை கழித்ததாகக் கூறுகிறார்கள். அவர் சாவில் எனக்கு பல கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை”

 

 

4

ஸ்ரீ அரபிந்தோ ஆசிரமம்

 

மறுநாள் காலை.

 

ஆசிரமத்தின் வாசல். வெள்ளைச் சுவர்கள். நடுவில் சமாதி — பூக்கள் குவிந்திருந்தன. மௌனம் காற்றில் கலந்திருந்தது.

 

மேரி என்னுடன் வந்திருந்தாள்.

 

ஆர்க்கைவ்ஸ் அறை. பழைய கோப்புகள். தூசி படிந்த வரலாறு.

 

ஒரு புகைப்படம் கிடைத்தது. தாத்தா அன்னையுடன் நிற்கிறார். பின்னால் ஒரு பிரெஞ்சு அதிகாரி.

 

“என் தந்தை,” மேரி கண்ணீருடன் சொன்னாள்.

 

கோப்பில் ஒரு குறிப்பு: “M — trusted by both sides. Double agent suspected.”

 

இருபக்கமும் நம்பப்பட்டவர்? டபுள் ஏஜென்ட்?

 

“தேடுறது கிடைச்சுதா?”

 

திரும்பினேன்.

 

எழுபது வயதுக் கிழவர். வெள்ளை முடி. ஆழ்ந்த கண்கள்.

 

“நான் ரவி. உங்க தாத்தாவோட மாணவன்.”

 

அவர் கண்களில் பழைய வலி.

 

“1954 நவம்பர் 1 இரவு. அந்த நாளை என்னால் மறக்க முடியாது. ஆனால் இங்கே சொல்ல முடியாது. நாளை ஆரோவில் வாங்க.”

 

5

ஆரோவில் — மாத்ரு மந்திர்

 

மாலை நேரம்.

 

சிவப்பு மண் பாதை. முந்திரி மரங்கள். பச்சைப் புல்வெளி.

மாத்ரு மந்திரின் தங்க நிறக் கோளம் சூரியனில் ஜொலித்தது. பன்னிரண்டு இதழ்கள் போன்ற கட்டிடங்கள் அதைச் சுற்றி.

 

ஆல மரத்தின் நிழலில் ரவி காத்திருந்தார்.

 

“1954 நவம்பர் 1…” அவர் ஆரம்பித்தார். “புதுச்சேரி இந்தியாவுக்குப் போகும் இரவு. துறைமுகத்தில் ஒரு கப்பல். பிரெஞ்சுக்காரர்கள் பெட்டிகளை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.”

 

“என்ன பெட்டிகள்?”

 

“சோழர் கால ஓலைச்சுவடிகள். தாமிரப் பட்டயங்கள். ஆயிரம் வருஷ வரலாறு. கடத்த முயன்றார்கள்.”

 

“தாத்தா?”

 

“தடுத்தார். ஆளுநர் லூசியன் உதவினார். ஆனால்…”

 

“ஆனால்?”

 

“இன்ஸ்பெக்டர் ராஜன். பிரெஞ்சுக்காரர்களிடம் லஞ்சம் வாங்கியவன். அவன் உங்க அப்பாவைக் கடத்திட்டான்.”

 

என் இதயம் நின்றது.

 

“என் அப்பாவை?”

 

“ஆறு வயசு பசுபதி. ராஜன் துப்பாக்கி காட்டி மிரட்டினான். ‘சுவடிகளை கொடு, இல்லன்னா இந்தப் பையனை…’ ஆளுநர் இடையில் வந்தார். தள்ளப்பட்டு விழுந்தார். Heart attack.”

 

மேரி அழுதாள்.

 

“ராஜன் பழியை உங்க தாத்தா மேல போட்டான். ‘வாயைத் திறந்தா பையனை விட மாட்டேன்’ என்று மிரட்டினான். உங்க தாத்தா வாய் மூடிக்கிட்டார். துரோகின்னு பழியை ஏத்துக்கிட்டார்.”

 

“மகனுக்காக..?” காவ்யா

 

“ஆமா… மகனுக்காக.” ரவி

 

6

மணக்குள விநாயகர் கோயில்

 

அன்று மாலை.

 

கோயிலின் யானை என் தலையைத் தொட்டு ஆசிர்வதித்தது. உள்ளே விநாயகர் சிலை. அமைதியான முகம்.

 

ரவி சொன்னார்: “உங்க அப்பா 1970-ல் அமெரிக்காவுக்கு ஏன் போனார்ன்னு தெரியுமா?”

“தெரியாது.”

 

“கல்லூரியில் பலர் சுற்றி வந்து கத்தினார்கள் — ‘துரோகியின் மகன்!, கொலைகாரனின் மகன்’ அன்று இரவு வீட்டை விட்டு ஓடினார். மகாதேவன் தேடி கண்டுபிடிச்சார். ஆனால் பசுபதி என்ன சொன்னார் தெரியுமா…?”

 

“என்ன?”

 

“நீங்க என் அப்பா இல்ல.”

 

என் நெஞ்சு வலித்தது.

 

“இரண்டு மாசத்தில் அமெரிக்கா போயிட்டார். திரும்பி வரலை. மகாதேவன் ஆறு வருஷம் தனியா இருந்தார். 1976-ல் மேலே போயிட்டார்.”

 

“ராஜன்?”

 

“1998-ல் செத்தான். உங்க தாத்தாவால அவன் உயிரோட இருந்த வரைக்கும் வாய் திறக்க முடியலை.”

 

அப்போது வெளியே சத்தம். ஒரு கார். இறங்கியவன் — கரும்புலி போன்ற உடல். அரசியல்வாதியின் புன்னகை.

 

“Bienvenue! அமெரிக்காக்காரப் பொண்ணே!”

 

“நீங்க யாரு?”

 

“பாண்டியன். MLA. இன்ஸ்பெக்டர் ராஜனோட பேரன்.”

 

என் ரத்தம் உறைந்தது.

7

48 மணி நேரம்

 

பாண்டியன் சிரித்தான்.

 

“உங்க தாத்தாவின் வீட்டை இடிப்பதற்கு எனக்கு அதிகாரம் இருக்கிறது”

 

“உங்க தாத்தா ஏதோ பொக்கிஷம் புதைச்சு வச்சிருக்காரு. அது எனக்குச் சொந்தம்.”

 

“உங்களுக்கு எப்படி?”

 

“என் தாத்தாவுக்கு உங்க தாத்தா கொடுக்க வேண்டியது.”

 

நான் நேராகப் பார்த்தேன்.

 

“48 மணி நேரம் கொடுங்க.”

 

“என்ன?”

 

“48 மணி நேரம். அதுக்குள்ள உண்மை கண்டுபிடிக்கிறேன். இல்லன்னா வீட்டை இடிங்க.”

 

பாண்டியன் சிந்தித்தான்.

 

“சரி. 48 மணி நேரம். அதுக்குப் பிறகு இந்த வீட்டை தரைமட்டமாக்குவேன்.”

 

அவன் போனான்.

 

கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். 47:59:58.

 

கவுண்ட்டவுன் தொடங்கியது.

 

8

ரொமன் ரோலாண்ட் நூலகம்

 

இரவு 11 மணி.

 

36 மணி நேரம் மட்டுமே.

நூலகம். பழைய புத்தகங்களின் வாசனை. மஞ்சள் விளக்கு வெளிச்சம்.

 

சாவியைப் பார்த்தேன். LVEDLR.

 

“இது என்ன code?” மேரி கேட்டாள்.

 

லத்தீன் அகராதி புரட்டினேன். பிரெஞ்சு புத்தகங்கள். எதுவும் பொருந்தவில்லை.

 

ரவி யோசித்தார்.

 

“உங்க தாத்தா ஒரு வாக்கியம் அடிக்கடி சொல்வார். ‘La vérité est dans les racines.'”

 

“அர்த்தம்?”

 

“உண்மை வேர்களில் உள்ளது.”

 

திடீரென்று புரிந்தது.

 

“L-V-E-D-L-R! La Vérité Est Dans Les Racines! ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்து!”

 

மேரி கண்கள் விரிந்தன.

 

“வேர்கள்… அடித்தளம்!”

 

9

ரகசிய அறை

 

தாத்தாவின் வீடு. ரூ சஃப்ரன் தெரு.

 

அடித்தளத்தில் இறங்கினோம். ஒரு மூலையில் சுவர் வித்தியாசமாக இருந்தது.

 

ஆறு கல் பொத்தான்கள். L, V, E, D, L, R.

 

சுவரில் ஒரு சிறிய படம் — மரம், அதன் வேர்கள் கீழே.

 

“வேர்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்!” ரவி சொன்னார். “கீழிருந்து மேலே — R-L-D-E-V-L!”

 

அழுத்தினேன்.

 

சுவர் நகர்ந்தது.

 

உள்ளே சிறிய அறை. நடுவில் இரும்புப் பெட்டி. வெண்கலச் சாவிக்கான பூட்டு.

சாவியைச் செருகினேன்.

 

திறந்தது.

 

தங்கம் இல்லை. வைரம் இல்லை.

 

ஆனால் — ஓலைச்சுவடிகள். தாமிரப் பட்டயங்கள். சோழர் கால கல்வெட்டுப் பிரதிகள்.

 

ஒரு ஒலிப்பதிவு நாடா.

 

ஒரு கடிதம்.

 

ஒரு புகைப்படம் — ஆறு வயசு பசுபதி, கண்களில் பயம், ராஜன் பக்கத்தில் துப்பாக்கியுடன்.

 

10

தாத்தாவின் குரல்

 

நாடாவை ஓடவிட்டோம்.

 

ராஜனின் குரல்: “சுவடிகளை கொடு, இல்லன்னா இந்தப் பையனை…”

 

தாத்தாவின் குரல்: “பசுபதி! பயப்படாதே கண்ணா!”

 

ஒரு சத்தம். ஆளுநரின் கத்தல். விழும் சத்தம்.

 

ராஜன்: “இது உன் தப்பு மகாதேவன். நீ என்னைத் தடுத்திருக்கக் கூடாது. இப்போ உன் மேல பழி போடப்போறேன். வாயைத் திறந்தா பையன் போயிடுவான்.”

 

பதிவு முடிந்தது.

 

கடிதத்தைப் படித்தேன்:

 

“என் அன்பு பேத்தி காவ்யா,

 

இதை எழுதும்போது உனக்கு மூன்று வயது. நீ படிக்கும்போது நான் இருக்க மாட்டேன் என்று தெரியும்.

 

ராஜன் இன்னும் உயிருடன் இருக்கிறான். அவன் இருக்கும் வரை என்னால் வாய் திறக்க முடியாது. உன் அப்பாவை அவன் விட மாட்டான்.

 

உன் தந்தை என்னை வெறுக்கிறான். அமெரிக்கா போய்விட்டான். அவனிடம் உண்மை சொல்ல முடியவில்லை — சொன்னால் அவன் ராஜனைத் தேடிப் போவான். அவன் உயிருக்கு ஆபத்து.

 

நான் துரோகி இல்லை. ஆனால் என் மகனைக் காப்பாற்ற அந்தப் பழியை ஏற்றுக்கொண்டேன். ஒரு தந்தையின் கடமை என்ன? தேசமா? மகனா? நான் மகனைத் தேர்ந்தெடுத்தேன்.

 

பசுபதியிடம் சொல் — நான் அவனை நேசித்தேன். என் உயிரை விட அதிகமாக.

 

உன் தாத்தா, மகாதேவன்”

 

என் கண்களில் நீர் வழிந்தது.

 

11

விடியலின் நீதி

 

48 மணி நேரம் முடிந்தது.

 

பாண்டியன் வந்தான். இடிப்புக் குழுவுடன்.

 

ஆனால் நான் தயாராக இருந்தேன்.

 

என்னுடன் — மாவட்ட ஆட்சியர். அருங்காட்சியக இயக்குநர். பத்திரிகையாளர்கள். பிரெஞ்சு தூதரக அதிகாரி.

 

“இந்தப் பெட்டியில் தங்கம் இல்லை,” நான் அமைதியாகச் சொன்னேன். “ஆனால் நம் தேசத்தின் வரலாறு இருக்கிறது.”

 

ஒலிப்பதிவை ஓடவிட்டேன்.

 

ராஜனின் குரல் ஒலித்தது. மிரட்டல். கொலை.

 

பாண்டியனின் முகம் வெளிறியது.

 

“இது… இது…”

“உன் தாத்தா ஒரு கொலைகாரன் பாண்டியன். திருடன். என் தாத்தா இல்லை.”

 

கேமராக்கள் சுழன்றன.

 

பாண்டியன் ஓடினான்.

 

போலீஸ் துரத்தியது.

 

12

அருங்காட்சியகம்

 

அடுத்த நாள்.

 

பாண்டிச்சேரி அருங்காட்சியகம். வெள்ளை நிற பிரெஞ்சுக் கட்டடம். முன்பக்கம் காந்தி சிலை.

 

இயக்குநர் டாக்டர் ராமச்சந்திரன் ஓலைச்சுவடிகளைப் பார்த்தார். அவர் கைகள் நடுங்கின.

 

“சோழர் காலம்… ராஜராஜன் காலத்து கல்வெட்டுப் பிரதி… ஆயிரம் வருஷம் பழமை…”

 

“இதோட மதிப்பு?” மேரி கேட்டாள்.

 

“மதிப்பா?” அவர் சிரித்தார். “பணத்தில் அளக்க முடியாது. இது தமிழ்நாட்டின் ஆன்மா.”

 

பத்திரிகையாளர்கள். கேமராக்கள். ஒளிவெள்ளம்.

 

“இந்த வரலாற்றுச் சின்னங்களை அருங்காட்சியகத்துக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறேன்.”

 

சுவரில் தாத்தாவின் புகைப்படம் மாட்டப்பட்டது.

 

கீழே:

 

“மகாதேவன் முதலியார்(1924-1976) தமிழ்ப் பாரம்பரியத்தின் காவலர்”

 

அப்பாவுக்குப் போன் செய்தேன்.

 

“அப்பா, தாத்தா பேரு அருங்காட்சியகத்தில் இருக்கு.”

 

மறுமுனையில் மௌனம்.

 

பிறகு அவர் குரல். உடைந்த குரல்.

 

“போட்டோ… போட்டோ எடுத்து அனுப்பு காவ்யா.”

 

13

வேர்களும் கிளைகளும்

 

விமான நிலையம். சென்னை.

 

அப்பா வந்திருந்தார்.

 

முப்பத்திரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் கால் வைத்தார்.

 

அவர் கண்களில் நீர்.

 

“காவ்யா…”

 

“தெரியும் அப்பா. எல்லாம் தெரியும்.”

 

“என்னால் மன்னிக்க முடியலை. அவரை. என் வாழ்நாள் முழுக்க வெறுத்தேன்.”

 

“அவர் உங்களுக்காக எல்லாத்தையும் இழந்தார் அப்பா. பேரை இழந்தார். மகனை இழந்தார். தனியா செத்தார்.”

அவர் அழுதார். என் அப்பா அழுவதை முதல்முறையாகப் பார்த்தேன்.

 

மேரி என் பக்கத்தில் வந்தாள்.

 

“என் தந்தையைக் கொன்றது யார்னு இப்போ தெரியும். நன்றி காவ்யா.”

 

ரவி என் தோளைத் தொட்டார்.

 

“உங்க தாத்தா இப்போ நிம்மதியா இருப்பார்.”

 

விமானம் புறப்பட்டது.

 

ஜன்னல் வழியே பார்த்தேன். மஞ்சள் வீடுகள். நீலக் கடல். சிவப்பு மண்.

என் வேர்கள்.

 

சாவியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன்.

 

14

முடிவுரை

 

2026 — இருபத்தி நான்கு வருடங்கள் கழித்து சென்னை புத்தகக் கண்காட்சி.

 

மேடையில் பெரிய போஸ்டர்:

 

“வேர்களின் சாவி” — காவ்யா பசுபதி

 

கூட்டம் நிரம்பியிருந்தது.

 

மைக்கின் முன் நின்றேன்.

 

“இது என் தாத்தாவின் கதை. துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட தியாகியின் கதை. தன் மகனுக்காக எல்லாவற்றையும் இழந்த தந்தையின் கதை.”

 

முதல் வரிசையில் அப்பா உட்கார்ந்திருந்தார்.

 

எழுபத்தெட்டு வயது. சக்கர நாற்காலி. ஆனால் கண்களில் — முதல்முறையாக — பெருமை.

 

புத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதியிருந்தேன்:

 

“என் தாத்தா மகாதேவனுக்கு — மௌனமாக வாழ்ந்து, மௌனமாக மறைந்த வீரனுக்கு.”

 

“என் அப்பா பசுபதிக்கு — இப்போதாவது உண்மை தெரிந்ததற்கு.”

 

அப்பா என்னைப் பார்த்தார். மெல்ல தலையசைத்தார்.

 

புத்தகத்தின் கடைசி வரி:

 

“வேர்கள் மண்ணில் இருந்தாலும், கிளைகள் வானத்தைத் தொட வேண்டும். நீங்கள் எங்கே இருந்தாலும், உங்கள் வேர்களை மறக்காதீர்கள்.”

 

PrevPreviousகாதலுக்கு பிரபஞ்சம் ஒரு கைப்பிடி
Nextதொலைந்த சாவிNext

You Might Also Like

கொட்டு சத்தம்
ஓ.கே. கண்மணி
காதலுக்கு பிரபஞ்சம் ஒரு கைப்பிடி
ஜீவநதி
சுவரின்றி சித்திரமா?
TAGGED:Short Storiesகுறுநாவல்பெருங்கதைவிண்மீன் மே 2026
Byகங்கா
கங்கா (காங்கேயன் பசுபதி - Kangeyan Passoubady)
பாண்டிச்சேரியின் உப்புக் காற்றிலும் பிரெஞ்சுப் பண்பாட்டிலும் பிறந்து வளர்ந்த காங்கேயன் பசுபதி, இலக்கிய உலகில் ‘கங்கா’ என்ற புனைபெயரில் அறியப்படுகிறார். கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் தடம் பதித்து வரும் இவர், தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா வளைகுடாப் பகுதியில் (Bay Area) செய்யறிவு (AI) மற்றும் தன்னியக்கமாக்கல் (Automation) துறைகளில் வல்லுநராகப் பணியாற்றி வருகிறார்.
தொழில்நுட்ப உலகில் இருந்தாலும் இவரது உள்ளம் எப்போதும் அன்னைத் தமிழிலேயே ஒன்றிக் கலந்திருக்கிறது. வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (NATAWO) மற்றும் 'நடவு' காலாண்டு இதழின் ஆசிரியர் குழுவில் ஆக்கத்துடன் பங்காற்றி வருகிறார். தான் பெற்ற கணினி அறிவை அடுத்த தலைமுறைக்கும், குறிப்பாகத் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க 'கவின் பள்ளி' (Kavin School) என்ற அமைப்பை நிறுவிச் செயல்பட்டு வருகிறார்.
பழமையின் ஆழமும் புதுமையின் தேடலும் ஒருசேரக் கலந்த இவரது எழுத்துகள் நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் தனித்துவமானவை. கவிதை, சிறுகதைகள் எனத் தன் இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்து வரும் இவர், எளிய தமிழர்களுக்கும் அதிநவீனத் தொழில்நுட்பம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், 300-க்கும் மேற்பட்ட செய்யறிவு கலைச்சொற்களைப் பொருள்வாரியாகத் தொகுத்து "AI அலை: நீங்கள் தயாரா?" என்ற நூலையும் எழுதி வருகிறார்.
Previous Article காதலுக்கு பிரபஞ்சம் ஒரு கைப்பிடி
Next Article தொலைந்த சாவி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (12) கட்டுரைகள் (18) கவிதைகள் (28) குறுநாவல் (1) சிறுகதைகள் (68) திரைப் பார்வை (8) தொடர்கள் (14) நிகழ்ச்சிகள் (4) நேர்காணல் (11) புத்தகப் பார்வை (34) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • June 20261
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (18) Interview (11) Poems (28) Series (14) Short Stories (69) ஆசிரியர் பக்கம் (12) இளையராஜா (2) கட்டுரை (11) கட்டுரைகள் (17) கவிதைகள் (28) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (2) சினிமா (8) சிறுகதைகள் (74) தலையங்கம் (12) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (14) நாவல் (7) நிகழ்ச்சி (4) நிஸ்வா (10) நூல் அறிமுகம் (34) நூல் வெளியீடு (3) நேர்காணல் (11) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (34) புத்தகம் (34) பெருங்கதை (1) பேட்டி (11) மதுரை (2) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (42) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?