VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: சேஷராயர் மண்டபம்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • சிறுகதைகள்
  • புத்தகப் பார்வை
  • கட்டுரைகள்
  • விண்மீன் மின்னிதழ்
  • கவிதைகள்
  • தொடர்கள்
  • எழுத்தாளர்கள்
  • நேர்காணல்
  • திரைப் பார்வை
  • நிகழ்ச்சிகள்
  • ஆசிரியர் பக்கம்
  • About
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > கட்டுரைகள் > சேஷராயர் மண்டபம்
கட்டுரைகள்

சேஷராயர் மண்டபம்

வெங்கட் நாகராஜ்
Last updated: May 24, 2026 3:42 pm
By
வெங்கட் நாகராஜ்
Published: June 18, 2025
2 Views
Share
5 Min Read
SHARE

திருவரங்கம் கோவில் 

 சேஷராயர் மண்டபம்

தமிழகம் வரும்போதெல்லாம் எங்கள் வீடு இருக்கும் திருவரங்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று பெரிய பெருமாளை பார்த்து வருவது என்பதை பொதுவாக நான் கடைபிடிப்பதில்லை. இங்கே எப்போதும் பக்தர்கள் கூட்டம் தான்.  

அதுவும் இந்த ஜனவரி மாதத்தில் மகர ஜோதி பார்த்து விட்டு வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும், மேல்மருவத்தூர் சென்று திரும்பும் அல்லது செல்லும் பக்தர்களின் கூட்டமும் அதிகமாக இருக்கும்.  இதைத் தவிர வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகம்.  எப்போதும் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

திருவரங்கம் முழுக்க இப்படியானவர்களை அதிகமாக பார்க்க முடியும்.  ஒவ்வொரு பயணத்திலும் இப்படியான சிலருடன் பேச வேண்டிய சந்தர்ப்பமும் ஏற்படுவது உண்டு – அவர்கள் வழிகேட்டுச் சொல்ல, ஹிந்தியில் பேசி தகவல்களை தெளிவாகச் சொல்ல என பல முறை பேசியிருக்கிறேன்.  

கூட்டம் அதிகம் இருப்பதன் காரணமாகவே கோவிலுக்குச் செல்ல கொஞ்சம் யோசனை வரும். அப்படியே சென்றாலும், பெரிய பெருமாளை கவனிக்காமல், நேரடியாக தாயார் சன்னதி சென்று தாயாரை தரிசனம் செய்துவிட்டு, “நான் வந்து சென்ற தகவலை உங்களவரிடம் சொல்லி விடுங்கள் தாயே”, என்று சொல்லி விட்டு வருவதும், சக்கரத்தாழ்வாரை தரிசித்து திரும்புவதும் என்று தான் நடக்கும்.  

ஆனால் ஒவ்வொரு திருவரங்கம் பயணத்திலும் ஒன்றிரண்டு தினங்கள் கோவிலுக்குச் சென்று ஆயிரங்கால் மண்டபம் அருகிலேயோ, அல்லது மணல் வெளியிலேயோ அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என அமர்ந்து கொண்டிருந்து விட்டு வீடு திரும்புவது வழக்கம்.  

சென்ற ஞாயிற்றுக் கிழமை அன்று கூட மாலை நேரம் வீட்டிலிருந்து பொடி நடையாக நடந்து வடக்கு வாசல் வழி கோயிலுக்குள் புகுந்து நேரடியாகச் சென்று அமர்ந்த இடம் ஆயிரங்கால் மண்டபம் எதிரே இருக்கும் சேஷராயர் மண்டபத்தின் ஒரு தூண் அருகே சேஷராயர் மண்டபத்தில் இடது புற ஓரம் வரிசையாக இருக்கும் தூண்களில் தசாவதாரச் சிற்பங்கள் உண்டு.  அந்த வரிசையில் கடைசியாக இருக்கும் தூண் அருகே அமர்ந்து கொண்டு அந்தத் தூணில் இருக்கும் சிற்பங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன்.  நடுநடுவே நான் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே வந்த சில பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலும் சொல்ல வேண்டியிருந்தது. 

ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்த ஒரு நபர் என்னிடம் வந்து கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் கோவில் பற்றிக் கேட்க, நான் அவருக்கு ஹிந்தியில் பதில் சொன்னேன்.  அவருக்குத் தெரிந்த பாஷையில் பேசியதும் அவருக்கு மகிழ்ச்சி.  

 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எத்தனை அதி அற்புதமான சிற்பங்களைச் செதுக்கி இருக்கிறார்கள்! அதுவும் ஒரே கல்லில் அமைந்த தூண், அந்தத் தூணில் பகுதி பகுதியாகச் சிற்பங்களை, பெரிதும், சிறிதுமாக அமைத்து இருப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு சிற்பமும் எத்தனை நேரம் எடுத்து செதுக்கி இருப்பார்கள், எத்தனை பேர் இந்த ஒரு தூணை செதுக்கி இருப்பார்கள், அல்லது ஒரே சிற்பியே பல நாட்கள் தனது உளியின் துணையோடு நகாசு வேலைகள் செய்து இந்த தூணை, தூணில் இருக்கும் சிற்பங்களை உருவாக்கி இருப்பார் என்ற எண்ணங்கள் மனதுக்குள் மோத சிற்பங்களை கவனித்துக் கொண்டிருந்தேன். 

 

 

அவ்வப்போது சில பக்தர்கள் செய்யும் செயல்கள் தொல்லைகளைத் தந்தாலும் – எனது கவனத்தினை சிற்பங்களிலிருந்து அகற்றி அவர்கள் செய்யும் விஷயங்களை (ஹிந்தியில் இப்படிச் செய்வதற்கு notanki नौटंकी என்று ஒரு வார்த்தை உண்டு) பார்க்க வைத்தாலும், அதிலிருந்து மீண்டு, மீண்டும் சிற்பங்களில் மூழ்கி இருந்தேன்.  ஒரே ஒரு தூணில் இத்தனை வேலைப்பாடுகள் என்றால், சேஷராயர் மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொரு தூணையும் உன்னித்து கவனித்தால் எத்தனை விஷயங்கள் பார்க்க முடியும்.  

 

 

அதிலும் ஒவ்வொரு சிற்பமும் ஏதோ ஒரு கதையையும் (நிகழ்வினையும்) சொல்லும் விதமாக அமைத்த அந்த சிற்பிகளின் திறனை நினைத்து பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.  உதாரணத்திற்கு இந்த ஒரு தூணில் இருந்த ஒரு காட்சி – முதலையின் வயிற்றுக்குள் இருக்கும் அனுமனின் சிற்பம் – அந்த சிற்பம் சொல்லும் கதை என மனதுக்குள் நிறைய விஷயங்கள் வந்து போனது.  அந்தக் கதை என்ன என்பது உங்களுக்குத் தெரியும் தானே? தெரியாதவர்களின் வசதிக்காக இங்கே சொல்லி வைப்போமே!

மூர்ச்சையாகி விழுந்து கிடைக்கும் லக்ஷ்மணனைக் காப்பாற்ற சஞ்சீவினி மூலிகையை எடுத்துவரச் செல்லும் அனுமனை எப்படியேனும் தடுத்து நிறுத்தும்படி இராவணன் விடுத்த கட்டளையின் பேரில் காலநேமி எனும் அரக்கன் ஒரு முனிவர் வேடம் கொண்டு வழியில் ஹநுமனைப் பார்த்து அங்கே இருக்கும் குளத்தில் குளித்து வந்தால் தான் பல விஷயங்களை சொல்லுவதாக சொன்னாராம் (தண்ணீர் கேட்ட ஹநுமனுக்கு அந்தக் குளத்தில் நீர் அருந்தும் படிச் சொன்னதாகவும் சில கதைகள் உண்டு!)

 

அந்தக் குளத்தில் சாபத்தினால் முதலையாக இருந்த இருந்த கந்தர்வ கன்னிகை ஹநுமனை விழுங்க, முதலையின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு தனக்கு எந்த வித சேதாரமும் இல்லாமல் வெளியே வந்தாராம்! சாபம் நீங்கப் பெற்ற அந்த கந்தர்வ கன்னிகையும் இந்தச் சிற்பத்தில் இருக்கிறார்.  சாபம் நீங்கிய அந்த கன்னிகை முனிவர் கபட வேடம் அணிந்தவர் என்பதையும் சொல்லிவிட, காலநேமி என்கிற அந்த அரக்கரையும் அழித்து பின்னர் சஞ்சீவினி மூலிகையை மலையுடன் கொண்டு வந்து இலக்குவனை காப்பாற்றினார் என்று போகிறது அந்தக் கதை. அந்தக் காட்சியை அப்படியே சிற்பத்தில் வடித்து இருக்கும் சிற்பியின் திறமையை என்னவென்று சொல்வது. 

 

வேதனையான விஷயம்:

இப்படி சிற்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த சமயம் கோவிலில் பார்த்த விஷயம் மனதுக்கு மிகவும் வேதனையைத் தந்தது.  பழமையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்பதை அரசாங்கமும் பொதுமக்களும் எப்போது தான் புரிந்து கொள்ளப்போகிறார்கள் என்று புரியவில்லை. பல வெளிநாடுகளில் ஐம்பது நூறு ஆண்டுகள் பழமையான விஷயங்களைக் கூட பொக்கிஷமாக பாதுகாக்கும்போது, நம் நாட்டில் பல நூறு ஆண்டுகள் கடந்த விஷயங்களை பாதுகாக்க கொஞ்சம் கூட அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என்பது வேதனையான உண்மை.

  

சேஷராயர் மண்டபம் அருகே ஒரு சரிவுப் பாதை அமைத்து அந்தப் பாதை வழி, அதாவது சேஷராயர் மண்டபத்தின் உள்ளேயே ட்ராக்டர் ட்ராலி போன்ற கன ரக வாகனங்களை அதிக எடையோடு செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.  ஒரே சமயத்தில் அப்படியான இரண்டு வாகனங்களை அங்கே நான் இருந்த சமயம் பார்க்க முடிந்தது.

 

இத்தனை பழமையான ஒரு கட்டிடம் – பெரிய வாகனங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளை எப்படித் தாங்கும் என்பதைக் கூட சிந்திக்க மாட்டார்களா சம்பந்தப்பட்டவர்கள்?  கொஞ்சம் அசந்தால் கூட அந்த வாகனம் தூண்களின் மீது இடித்து சிற்பங்கள் சிதிலப்படக் கூடும் என்பதைக் கூட சிந்திக்கவில்லையே! ஏற்கனவே காலத்தின் ஓட்டத்தில் எத்தனை சிற்பங்கள் பாழ்பட்டுவிட்டன…  இப்படியான நிறைய வேதனை தரும் விஷயங்களை கோவில் உள்ளே பார்க்கும்போது மனதில் வேதனையே அதிகம் மிஞ்சியது.  

நன்றி : படங்கள் திரு. வெங்கட் நாகராஜ்

PrevPreviousபூவார் சென்னி மன்னன்
Nextவிண்மீன் – வாழ்த்துப் பாNext

You Might Also Like

தோரணமும் மாக்கோலமும்
தாவணி கோவிலில் காவடி சிந்துகள்
மன அமைதி
காஃப்டா
விண்மீன் ஜூன் 2025 மின்னிதழ்
TAGGED:articlesessaysகட்டுரைகள்விண்மீன் ஜூன் 2025
SOURCES:rubynews.comtimenews.com
VIA:ThemeRubyMarsNews
Previous Article பூவார் சென்னி மன்னன்
Next Article விண்மீன் – வாழ்த்துப் பா
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

கட்டுரைகள் (14) கவிதைகள் (12) சிறுகதைகள் (46) திரைப் பார்வை (6) தொடர்கள் (9) நிகழ்ச்சிகள் (3) நேர்காணல் (6) புத்தகப் பார்வை (18) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • May 202616
  • April 20261
  • March 20261
  • February 20261
  • January 20261
  • December 202511
  • November 202515
  • October 202517
  • September 202513
  • August 202515
  • July 202517
  • June 202517
  • August 20211

பிரிவுகள்

articles (14) essays (14) Interview (6) Poems (12) Series (9) Short Stories (46) இளையராஜா (1) கட்டுரை (5) கட்டுரைகள் (14) கவிதைகள் (12) குறுங்கதை (14) கேலக்ஸி (1) சினிமா (6) சிறுகதைகள் (52) திரை விமர்சனம் (6) துபை (1) தொடர்கள் (9) நாவல் (7) நிகழ்ச்சி (3) நிஸ்வா (5) நூல் அறிமுகம் (18) நூல் வெளியீடு (2) நேர்காணல் (6) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (18) புத்தகம் (18) பேட்டி (6) மதுரை (1) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (1) விண்மீன் அக்டோபர் 2025 (17) விண்மீன் ஆகஸ்ட் 2025 (15) விண்மீன் ஏப்ரல் 2026 (1) விண்மீன் செப்டம்பர் 2025 (13) விண்மீன் ஜனவரி 2026 (1) விண்மீன் ஜுலை 2025 (17) விண்மீன் ஜூன் 2025 (17) விண்மீன் டிசம்பர் 2025 (11) விண்மீன் நவம்பர் 2025 (15) விண்மீன் மார்ச் 2026 (1) விண்மீன் மே 2026 (1) விமர்சனம் (24) வெண்பா (2)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?