VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: மன அமைதி
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • சிறுகதைகள்
  • புத்தகப் பார்வை
  • கட்டுரைகள்
  • விண்மீன் மின்னிதழ்
  • கவிதைகள்
  • தொடர்கள்
  • எழுத்தாளர்கள்
  • நேர்காணல்
  • திரைப் பார்வை
  • நிகழ்ச்சிகள்
  • ஆசிரியர் பக்கம்
  • About
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > கட்டுரைகள் > மன அமைதி
கட்டுரைகள்

மன அமைதி

ஜெஸிலா பானு
Last updated: May 24, 2026 3:46 pm
By
ஜெஸிலா பானு
Published: June 18, 2025
1 View
Share
4 Min Read
மன அமைதி
SHARE

நம் மனம், துடுப்பில்லாத படகுபோல் நடுக்கடலில் சிக்கியதற்கு ஒத்தது.

வேலைக்குச் செல்லும் போது எதிர்கொள்ளும் போக்குவரத்து, மேலாளர் அவருக்கு இருக்கும் பிரச்சனையைச் சம்பந்தமே இல்லாமல் நம் தலையை உருட்டுவது, கணவன் – மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும்போது பலவிதமான வெளி மன அழுத்தத்தை வீட்டில் கொண்டு வந்து கொட்டுவது, இப்படி மன அமைதியின்மைக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

சிறு குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று சமயங்களில் நமக்குப் புரிந்து கொள்ள முடியாதே, அதேபோல் சில நேரங்கள் என்னவென்றே புரியாமல் நமக்குக் கோபம் வரும், எரிந்து விழுவோம். ஏதோ ஒருவித எண்ணற்ற பாரம் குடி கொண்ட உணர்வு எழும். குழப்பமான மனநிலைக்குத் தள்ளப்படுவோம்.

“இன்னும் இவ்வளவு பணி இருக்கா முடிக்க?”, “ஏன் எதுவுமே சரியாக நடக்கவில்லை?”, “ஏன் இப்படி நடந்தது?” என்று சிந்திப்பதும், நண்பர் ஒரு சிறிய தவறு செய்தால் அதற்குப் பெரும் மனச்சோர்வு கொள்வதும், சின்ன விஷயமோ பெரிய விஷயமோ அதற்கு மீளவே முடியாது என்பதாகச் சோகம் சூழ்வது, என்று உணர்வுகளின் சிக்கல்களில் நாம் மாட்டிக் கொள்கிறோம்.

எது எதற்கோ திறன் வளர்க்கும் பயிற்சிக்குச் செல்கிறோம். அல்லது இணையத்தில் தேடி தேவையானவற்றைத் தெரிந்து கொள்கிறோம், கற்க முயற்சிக்கிறோம். அதுபோல் மன சுமைகளுக்கு இடையில் மன அமைதியை நிலைநிறுத்துவதும் நமக்குத் தேவையான திறமைதான். அது நம் மனதை நிம்மதி நிறைந்த ஓய்வுக்குக் கொண்டு செல்லும்.

அன்றாட வாழ்க்கை உதாரணங்கள்:

  • மாலை நேரம், வீட்டிற்குப் போகும் போது: ஒரு கடுமையான நாளை கழித்த சோர்வில், வீட்டுக்கு நீங்கள் செல்கிறீர்கள். குழந்தைகள் வீட்டுப் பாடத்தில் உதவி கேட்டு நிற்கின்றனர். மனைவியும் உங்களிடம் தன் அலுவலக வேலை சுமை பற்றிப் பேசுகிறார். இதனால் உங்கள் மனதில் பதட்டமும் சலனமும் அதிகமாகிறது. அப்படியில்லாமல் இந்தப் பொழுதை நீங்கள் சீராக்க முயற்சி செய்யலாம். சில நிமிடங்கள் மூச்சை ஆழமாக இழுத்து விட்டு, கண்களை மூடி, “இதுவும் கடந்து போகும்” என்று மனதை நிம்மதியாக்கலாம். மூச்சு பயிற்சி மனதை சாந்தமாக்கும் ஒரு முக்கியப் பயிற்சி.

  • அடர்த்தியான போக்குவரத்தில் நின்று கொண்டிருக்கும்போது: விரைவில் சென்று சேர வேண்டிய இடம் இருப்பினும், நெரிசல் காரணமாக நின்று கொண்டிருக்கிறீர்கள். மனதில் அன்றைய அழுத்தங்கள் அலைப்பாயும், வேலை பற்றிய சிந்தனைகள் மனதில் தடுமாறும். அந்த நேரத்தில் நம் சிதறிய எண்ணத்தில் கவனம் செலுத்தி. அது அன்றாட நிகழ்வுதானே என்று ஏற்றுக்கொண்டு, “இப்போது இது என்னுடைய நேரம், இதில் நமக்கு மகிழ்ச்சி தரும் செயலைப் பற்றி சிந்திப்போம்” என்று தன்னைத்தான் ஆற்படுத்துவதும் ஒருவித கலைதான்.

  • ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் நம்மை புரிந்து கொள்வதில் தாமதம் ஏற்படும் போது: அதனால் நம் மனதில் இன்னல் புகும், ஏதோ ஒரு வகையான சோர்வு உண்டாகும். ஆனால் “நான் அவர்களை மாற்ற முடியாது, ஆனால் என் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முடியும்” என்று எண்ணுவது மிகவும் முக்கியம்.

 

மன அமைதிக்கான சில வழிகள்:

1. தன்னைக் கவனித்துக்கொள்ளுதல்
உங்கள் மனம் சோர்வு அடைந்தால், அதன் அடிப்படை காரணத்தை உணர்ந்து, அதிலிருந்து மீண்டுவிட்டாலே, அந்தச் சிந்தனையிலிருந்து விடுபட்டாலே பேருதவி. சிறிது நேரம் உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்கலாம். அல்லது நீங்கள் விரும்பிய பொழுதுபோக்கில் மனம் கரையலாம். நூல் வாசிக்கும் பழக்கமிருந்தால் அதில் மூழ்கலாம். இது உங்கள் மனதிற்குச் சிறிய ஓய்வைப் பெற்றுத் தரும்.

2. அன்றாட நன்றி உணர்வு
சின்ன வெற்றி, ஒரு சிறு புன்னகை, அன்பான வார்த்தை போன்றவற்றுக்கு நன்றி கூறுங்கள். உதாரணமாக, காலை எழுந்ததும் “இன்று என் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கிறது” என்று நினைத்து மகிழுங்கள். காலை உணவு சுவையாக இருந்தால், பாராட்டி நன்றி தெரிவியுங்கள். இரவில் உறங்க செல்லும் முன் அன்று நடந்த நல்லவற்றை நினைத்து மன ஆறுதல் பெறுங்கள்.

3. எதிர்பார்ப்புகளைக் குறைத்தல்
“அவர்களிடமிருந்து முழுமையான புரிதலை எதிர்பார்க்கமாட்டேன்” என்று நினைத்தாலே போதும், மன சுமை குறையும். நீங்கள் செய்த உதவிக்குப் பிரதிபலம் எதிர்பார்க்காமல், உதவியாக இருந்தது குறித்து நினைத்தாலே மனம் மகிழும்.

4. நிம்மதியான மூச்சுப் பயிற்சி
சோர்வான, பதட்டமான நேரங்களில் மூச்சை ஆழமாக இழுத்து விட்டாலே. நிமிடங்களில் மனதில் அமைதி தரும்.

5. தியானம்
மதியம் சாப்பிட்ட பின், 5 நிமிடம் கண்களை மூடி அமைதியாக அமருங்கள். அன்றாட எளிய முயற்சி தான் நம் மனதை வலுப்படுத்தும்.

நிறைவாக…

நம் மன சுமைகள் ஒரு மாலை அசுவாசமோடு வீசும் காற்றுப்போல, அதுவும் தளர்ந்து போகும். ஆனால் அதற்கிடையில் நாம் மனதில்  அமைதியைத் தாங்கிக்கொள்வது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் சவால்கள் மற்றும் சந்தோஷங்கள் எல்லாம் நமது மனதிற்குள் ஒரு சமநிலை உருவாக்கும் வரை பயிற்சி தொடர வேண்டும்.

“அமைதி என்பது வெளியில் காண்பது அல்ல, உள்ளே உணர்வது.”

நாம் நம் உள்ளார்ந்த அமைதியோடு வாழும் போது, வெளியுலகின் குழப்பங்களும் நமக்குப் பெரிதாய் தாக்காது. அந்த அமைதி தான் நம் மனதில் உண்மையான மகிழ்ச்சியையும், சோர்வு இல்லாத ஓய்வையும் கொடுக்கும்.

PrevPreviousசாபத்தின் சாட்சிகள்
Nextசிந்தனைகள் கூண்டுக்குள்ளேNext

You Might Also Like

அறியப்படாத தமிழகம்
ஜப்பானிய ஹைக்கு 
கன்னத்தில் முத்தமிட்டாள்
உரையாடல்கள்
மனம்
TAGGED:articlesessaysகட்டுரைகள்விண்மீன் ஜூன் 2025
SOURCES:rubynews.comtimenews.com
VIA:ThemeRubyMarsNews
Previous Article சாபத்தின் சாட்சிகள் சாபத்தின் சாட்சிகள்
Next Article சிந்தனைகள் கூண்டுக்குள்ளே சிந்தனைகள் கூண்டுக்குள்ளே
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

கட்டுரைகள் (14) கவிதைகள் (12) சிறுகதைகள் (46) திரைப் பார்வை (6) தொடர்கள் (9) நிகழ்ச்சிகள் (3) நேர்காணல் (6) புத்தகப் பார்வை (18) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • May 202616
  • April 20261
  • March 20261
  • February 20261
  • January 20261
  • December 202511
  • November 202515
  • October 202517
  • September 202513
  • August 202515
  • July 202517
  • June 202517
  • August 20211

பிரிவுகள்

articles (14) essays (14) Interview (6) Poems (12) Series (9) Short Stories (46) இளையராஜா (1) கட்டுரை (5) கட்டுரைகள் (14) கவிதைகள் (12) குறுங்கதை (14) கேலக்ஸி (1) சினிமா (6) சிறுகதைகள் (52) திரை விமர்சனம் (6) துபை (1) தொடர்கள் (9) நாவல் (7) நிகழ்ச்சி (3) நிஸ்வா (5) நூல் அறிமுகம் (18) நூல் வெளியீடு (2) நேர்காணல் (6) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (18) புத்தகம் (18) பேட்டி (6) மதுரை (1) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (1) விண்மீன் அக்டோபர் 2025 (17) விண்மீன் ஆகஸ்ட் 2025 (15) விண்மீன் ஏப்ரல் 2026 (1) விண்மீன் செப்டம்பர் 2025 (13) விண்மீன் ஜனவரி 2026 (1) விண்மீன் ஜுலை 2025 (17) விண்மீன் ஜூன் 2025 (17) விண்மீன் டிசம்பர் 2025 (11) விண்மீன் நவம்பர் 2025 (15) விண்மீன் மார்ச் 2026 (1) விண்மீன் மே 2026 (1) விமர்சனம் (24) வெண்பா (2)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?