VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: முன்பனியும் பின் மறையும்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • சிறுகதைகள்
  • புத்தகப் பார்வை
  • கட்டுரைகள்
  • விண்மீன் மின்னிதழ்
  • கவிதைகள்
  • தொடர்கள்
  • எழுத்தாளர்கள்
  • நேர்காணல்
  • திரைப் பார்வை
  • நிகழ்ச்சிகள்
  • ஆசிரியர் பக்கம்
  • About
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > புத்தகப் பார்வை > முன்பனியும் பின் மறையும்
புத்தகப் பார்வை

முன்பனியும் பின் மறையும்

பாலமுருகன். லோ
Last updated: May 24, 2026 4:53 pm
By
பாலமுருகன். லோ
Published: August 18, 2025
1 View
Share
2 Min Read
மழையில் நனையாத குடை
மழையில் நனையாத குடை
SHARE

கேலக்ஸி பதிப்பக வெளியீடான, எழுத்தாளர் இத்ரீஸ் யாக்கூப் அவர்களின் ‘மழையில் நனையாத குடை’ நூலிலிருந்து ‘முன்பனியும் பின் மறையும்’ என்னும் சிறுகதை குறித்து எனது வாசிப்பனுபவம் இது. 

கமீலா மற்றும் அமீர் குடும்பங்களைச் சுற்றி வரும்படி கதாபாத்திரங்களை உருவகப்படுத்தியிருப்பார் கதையாசிரியர். இருவர் வீட்டிலும் ஆட்களின் எண்ணிக்கை அதிகம்.

 

அமீருடைய நண்பன் சிராஜ், இவனைச் சுற்றித்தான் கதை நகர்கிறது. சிராஜ் தனது சொந்த ஊருக்குப் போக வேண்டி, பேருந்தில் ஏறி சன்னல் ஓர இருக்கையாகப் பார்த்து அமருகிறான். அந்தச் சமயத்தில் பேருந்து நிலையத்தில் தேநீர்க் கடை தொடங்கி, பூக்கடை, மிட்டாய்க் கடை, பேக்கரி, உணவகம், அங்கும் இங்குமாக நடமாடும் மனித கூட்டம், அதுமட்டுமா பாதசாரி வியாபாரிகள் தங்களது தலையில் தின்பண்டங்களைச் சுமந்து கொண்டு பேருந்தினுள் ஏறியும், இறங்கியும் அவர்களது வியாபாரத்தை மேற்கொள்கிற அழகையெல்லாம் தெளிவாக உள்வாங்கித் தன் எழுத்தின் மூலம் வெளிக்கொணர்ந்திருப்பார் ஆசிரியர்.

 

நிறத்தை வைத்துப் பாகுபடுத்திப் பெண்களைப் பார்க்கும் கும்பல் இன்னும் இவ்வுலகில் வலம் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது வாழ்வு இவ்வுலகி நிலைத்து நிற்கிறதா அல்லது சின்னாபின்னமாக மாறி விடுகிறதா என்பதைப் பேசுவதுதான் கதையின் களம். இதில் என்ன வேதனையான விஷயமென்றால் காசு பணத்திற்கு ஆசைப்பட்டு ஒருத்தியைக் கல்யாணம் கட்டிக்கொண்டு அவனது வீட்டிற்குக் கூட்டிவந்த பிறகு அவளுக்கு இழைக்கப்படும் துன்பங்களைச் சொல்லும் கதையாய் நகர்வதுதான்.

 

“கொட்டிய வார்த்தை அள்ள முடியாது” என்பதற்கு ஏற்ப அமீரின் தாய், கமீலாவை தினம் தினம் வார்த்தைகளால் கொன்று தீர்ப்பாள். மேலும் அமீர் கல்யாணம் செய்து கூட்டிக்கொண்டு வந்த நாட்களிலிருந்து கமீலாவை இரவு தேவைகளுக்கு மட்டும் உபயோகப்படுத்தும் ஒரு போதைப் பொருளாகத்தான் வைத்திருப்பான். அவன் அவளைத் தன் மனைவியாக ஒரு நாளும் சிந்தித்ததில்லை.

 

கமீலா எப்படியெல்லாம் அமீரின் குடும்பத்தாருடன் போராடினாள் என்பதை விரிவாகத் தனது எழுத்துகள் மூலம் நமக்குத் தெரியப் படுத்தியிருப்பார் கமீலா அவளது வாழ்கையை மாற்றி அமைத்துக்கொண்டாளா? அல்லது அவளது வாழ்வை அந்தப் பாழும் கிணற்றில் விழுந்து தனது வாழ்வை மேலும் கஷ்டமாக்கிக் கொண்டாளா? என்பதை கதையை முழுமையாக வாசிக்கும் போது உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.

 

இந்த மழையில் நனையாத குடை தொகுப்பில் மொத்தம் ஒன்பது கதைகளை உள்ளது. ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒன்றை ஒன்று தழுவி இருக்காது, ஆசிரியரின் வர்ணிப்பு அழகாக அமைந்திருக்கிறது. ஆக மொத்தத்தில் கதைகள் யாவுமே படிப்பவரின் மனதைத் தொடும் என்பதில் எந்த வித ஐப்பாடுமில்லை. கதையைத் தேடித்தேடிப் படிப்பவருக்கு இந்த மழையில் நனையாத குடை ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கட்டாயம் ஏற்படுத்தும். ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

 

இந்தப் புத்தகத்தின் விலை 180 ரூபாய். இதை வாங்க வேண்டுமானால் கேலக்ஸி புக்ஸ் இணையத் தளப் பக்கத்தில் www.galaxybs.com என்ற இணையப் பக்கத்திலும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

PrevPreviousகுருட்டுக் கோழிகள்
Nextஆரச்சாலைNext

You Might Also Like

“கட்டுரையும் ஒரு சிறுகதையே; சிறுகதையும் ஒரு கட்டுரையே.”
உன்மத்தம்
ஆரச்சாலை
குருவிக்கூடு
ஒற்றைச் சிறகு ஓவியா
TAGGED:நூல் அறிமுகம்புத்தகப் பார்வைபுத்தகம்விண்மீன் ஆகஸ்ட் 2025விமர்சனம்
SOURCES:rubynews.comtimenews.com
VIA:ThemeRubyMarsNews
Previous Article குருட்டு கோழிகள் குருட்டுக் கோழிகள்
Next Article ஆரச்சாலை ஆரச்சாலை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

கட்டுரைகள் (14) கவிதைகள் (12) சிறுகதைகள் (46) திரைப் பார்வை (6) தொடர்கள் (9) நிகழ்ச்சிகள் (3) நேர்காணல் (6) புத்தகப் பார்வை (18) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • May 202616
  • April 20261
  • March 20261
  • February 20261
  • January 20261
  • December 202511
  • November 202515
  • October 202517
  • September 202513
  • August 202515
  • July 202517
  • June 202517
  • August 20211

பிரிவுகள்

articles (14) essays (14) Interview (6) Poems (12) Series (9) Short Stories (46) இளையராஜா (1) கட்டுரை (5) கட்டுரைகள் (14) கவிதைகள் (12) குறுங்கதை (14) கேலக்ஸி (1) சினிமா (6) சிறுகதைகள் (52) திரை விமர்சனம் (6) துபை (1) தொடர்கள் (9) நாவல் (7) நிகழ்ச்சி (3) நிஸ்வா (5) நூல் அறிமுகம் (18) நூல் வெளியீடு (2) நேர்காணல் (6) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (18) புத்தகம் (18) பேட்டி (6) மதுரை (1) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (1) விண்மீன் அக்டோபர் 2025 (17) விண்மீன் ஆகஸ்ட் 2025 (15) விண்மீன் ஏப்ரல் 2026 (1) விண்மீன் செப்டம்பர் 2025 (13) விண்மீன் ஜனவரி 2026 (1) விண்மீன் ஜுலை 2025 (17) விண்மீன் ஜூன் 2025 (17) விண்மீன் டிசம்பர் 2025 (11) விண்மீன் நவம்பர் 2025 (15) விண்மீன் மார்ச் 2026 (1) விண்மீன் மே 2026 (1) விமர்சனம் (24) வெண்பா (2)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?