VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: ‘கண்’காட்சி
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > ஆசிரியர் பக்கம் > ‘கண்’காட்சி
Vinmeen Nov 2025
ஆசிரியர் பக்கம்

‘கண்’காட்சி

பல புத்தக வெளியீடுகள் நடக்கின்றன. எல்லாவற்றுக்கும் அரைமணி நேரம்தான் ஒதுக்கீடு

பரிவை சே. குமார்
Last updated: May 27, 2026 12:20 pm
Share
4 Min Read
‘கண்’காட்சி
SHARE

‘கண்’காட்சி

 

மக்களிடம் புத்தகங்களைப் பரவலாகக் கொண்டு சேர்க்கும் செயலைச் செய்வதில் புத்தகக் கண்காட்சிக்கு முக்கியமான இடம் உண்டு. முன்பெல்லாம் புத்தகக் கண்காட்சி என்பது ஏதோ ஒரு சில இடங்களில் மட்டுமே நடத்தப்படும். குறிப்பாக சென்னையில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிக்கு தென் மாவட்டங்களில் இருந்தெல்லாம் வந்து செல்வது என்பது முடியாத காரியம். அப்போது தென் மாவட்டங்களில் எல்லாம் புத்தகக் கண்காட்சி என்பது அரிதான விசயம்தான்.

 

இப்போது பெரும்பாலான ஊர்களில் வருடத்தின் பாதி மாதங்கள் தொடர்ந்து புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. பதிப்பாளர்களுடன் நெருக்கமான நட்பு இருப்பதாலும் நாமும் புத்தகம் போட்டிருக்கிறோம் என்பதாலும் கண்காட்சி நடக்கும் போது நண்பர்களுடன் எப்படிப் போகிறது எனக் கேட்பதுண்டு. குறிப்பாக கடந்த மூன்று வருடங்களில் பெரும்பாலான இடங்களில் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை என்பதுதான் உண்மை என்றாலும் நிகழ்வு முடிந்த பின் கோடிகளில் விற்கப்பட்டன என்ற செய்தி எல்லாப் பத்திரிக்கைகளையும் அலங்கரிக்கும். இந்தக் கோடிகள் புத்தகங்களைச் சுமந்து ஊர் ஊராய் போகும் பதிப்பகத்தாருக்கு மட்டுமே வெளிச்சம்.

 

தற்போது வாசிப்பு என்பது பிடிஎப் மற்றும் இணைய வழி என்றாகிவிட்ட நிலையில் இப்போதும் அதுவும் இன்னும் சுலபமாக, அதாவது நடந்து போதல், சைக்கிளில் போதல் எல்லாம் தேவையில்லை என ஆளாளுக்கு மின்சார வண்டிகளில் நின்று கொண்டே பயணிப்பது இப்போது அதிகமாகி வருவதைப் போல் ஒலி வடிவில் கதைகளை – புத்தகத்தை அப்படியே வாசிப்பது – பலர் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதைக் கேட்டு இந்த இந்தப் புத்தகத்தை எல்லாம் முடித்து விட்டேன் எனச் சொல்கிறது இப்போதைய தலைமுறை. வாசிப்பில் கிடைக்கும் மகிழ்ச்சி, கேட்பதில் கிடைத்து விடுமா என்ன..?

 

சரி விஷயத்துக்கு வருவோம், உள்ளூர் புத்தகக் கண்காட்சிகளிலேயே விற்பனை என்பது சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்ற நிலையில் வெளிநாடுகளில் நடக்கும் புத்தக விழாக்களில் எப்படி இருக்கும்..? வெளிநாடுகளில் இருக்கும் ஆட்களுக்கு கண்காட்சிக்குச் செல்ல, புத்தகங்களை வாங்கி வாசிக்க இங்கு நேரம் இருக்குமா..? என்பதையெல்லாம் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

 

சென்ற வாரத்தில் ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. 1982-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் புத்தகக் கண்காட்சி இப்போது உலகின் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக உயர்ந்திருக்கிறது. இதில் பல நாட்டுப் பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. ஒரு புத்தகக் கண்காட்சி நிகழ்வை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம். பல புத்தக வெளியீடுகள் நடக்கின்றன. எல்லாவற்றுக்கும் அரைமணி நேரம்தான் ஒதுக்கீடு, நேர மேலாண்மையை அவ்வளவு சிறப்பாக கடை பிடிப்பார்கள். நம்ம ஊரைப் போல் ஐயா வந்திருக்காங்க பேசட்டும் என்பதெல்லாம் இல்லை. எவ்வளவு பெரிய மனிதர் என்றாலும் கொடுத்த நேரத்தில் முடித்து அடுத்த நிகழ்வுக்கு அரங்கைக் கொடுத்தே ஆக வேண்டும்.

 

இங்கு தமிழ்ப் பதிப்பகங்கள் இல்லாதுதான் இருந்தது. சமீப வருடங்களாய்த்தான் தமிழ்ப் பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. அதிலும் சென்ற வருடம் வந்ததில் பாதி கூட இந்த வருடம் இல்லை என்பதுதான் வேதனையான உண்மை. மலையாள பதிப்பகங்கள்தான் அதிக இடங்களை ஆக்கிரமித்து இருக்கும். அவர்கள் குடும்பமாய் வருகிறார்கள். மொத்தமாகப் புத்தகங்களை அள்ளிச் செல்கிறார்கள் என்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

 

இந்த வருடம் நாங்கள் சென்ற விடுமுறை நாளில் தமிழ்ப் பதிப்பக அரங்குகள் காற்றாடின. பெரும்பாலும் ஆட்கள் வருவது என்பது அரிதாகிவிட்டது. கிடைக்கும் விடுமுறைநாளில் இந்த போக்குவரத்து நெரிசலில் போய் வர வேண்டுமா என்ற எண்ணம் ஒரு பக்கம் இருந்தாலும் நம் அரங்கில் விற்க்கப்படும் புத்தகங்களின் விலையும் வாங்க யோசிக்க வைக்கிறது என்பதே முக்கியமான் காரணி. மலையாளிகள் சற்று குறைத்தே கொடுக்கிறார்கள் என்பதுடன் அவர்களின் அரங்குகளில் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டு வருவோரிடமெல்லாம் பேசி எப்படியும் விற்று விடுகிறார்கள். தமிழரையும் மலையாளப் புத்தகங்களை வாங்க வைத்து விடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

ஒரு பதிப்பகத்தாரிடம் விலை அதிகமா இருக்கே என்று கேட்டபோது அவர் சொன்ன விசயங்கள் அந்த விலை நியாயமானதே என எண்ண வைத்தது என்றாலும் தங்களுக்கு அரசு உதவவில்லை, அப்படியே உதவினாலும் நாங்கள் செலவழித்துச் சென்ற பின்னரே கொடுப்பார்கள் என்றார். கொடுக்கிறார்கள்தானே… எப்படியும் உங்களின் செலவில் கொஞ்சமேனும் கிடைக்கும்தானே. அப்ப நீங்க கொஞ்சம் விலையைக் குறைத்து வைக்கலாமே என்ற கேள்விக்குப் பதில் இல்லை. மேலும் நமது எழுத்தாளர்கள் மலையாளிகளைப் போல அரங்கில் நின்று விற்பனை செய்ய நினைப்பதில்லை. எனது புத்தகம் இங்க இருக்கு பார்த்தியா..? எனப் போட்டு எடுத்துப் போட்டு விருப்பக்குறி வாங்குவதையே விரும்புகிறார்கள். இந்த முறை டிஸ்கவரி அரங்கில் பெண் எழுத்தாளர்கள் இருவர் நின்று விற்பனைக்கு உதவியதைப் பார்த்தபோது மகிழ்வாக இருந்தது.

 

இனி வரும் காலங்களில் புத்தக விலையை ஒரளவு குறைத்து, மலையாளிகளைப் போல் நாமும் இறங்கி வேலை பார்த்தால் தமிழ்ப் பதிப்பகங்களின் எண்ணிக்கையும், புத்தகத்தை வாங்குவோரின் எண்ணிக்கையும் கண்டிப்பாக உயரும்.

 

நடக்குமா..?

 

–பரிவை சே.குமார்.

PrevPreviousவிண்மீன் நவம்பர் 2025 மின்னிதழ்
Nextதெரியாத விசயத்தை எழுதுவதில்லைNext

You Might Also Like

ஒமான் அக்ராஸ் ஏஜஸ் மியூசியம்… நிஸ்வா – பகுதி 4
தர்மம்
விண்மீன் நவம்பர் 2025 மின்னிதழ்
வரலாறு
அஞ்சலியில் அரசியல்
TAGGED:ஆசிரியர் பக்கம்தலையங்கம்விண்மீன் நவம்பர் 2025
Previous Article Vinmeen Nov 2025 விண்மீன் நவம்பர் 2025 மின்னிதழ்
Next Article தெரியாத விசயத்தை எழுதுவதில்லை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (12) கட்டுரைகள் (18) கவிதைகள் (28) குறுநாவல் (1) சிறுகதைகள் (68) திரைப் பார்வை (8) தொடர்கள் (14) நிகழ்ச்சிகள் (4) நேர்காணல் (11) புத்தகப் பார்வை (34) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • June 20261
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (18) Interview (11) Poems (28) Series (14) Short Stories (69) ஆசிரியர் பக்கம் (12) இளையராஜா (2) கட்டுரை (11) கட்டுரைகள் (17) கவிதைகள் (28) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (2) சினிமா (8) சிறுகதைகள் (74) தலையங்கம் (12) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (14) நாவல் (7) நிகழ்ச்சி (4) நிஸ்வா (10) நூல் அறிமுகம் (34) நூல் வெளியீடு (3) நேர்காணல் (11) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (34) புத்தகம் (34) பெருங்கதை (1) பேட்டி (11) மதுரை (2) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (42) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?