உன்மத்தம்
ஒரு கலைஞனின் மனப்போராட்டத்தை நம் கண்முன் காட்சிப்படுத்துகிறது இந்நாவல். இக்கதையின் முக்கியக் கதாபாத்திரமாக இருக்கும் ராஜவேலு சில காரணங்களாலும் நாடக நடிகனான மூத்த மகன் விபத்தில் இறந்த துக்கத்தாலும் தான் விரும்பி ஏற்றுக் கொண்ட கலையை விட்டொழிக்கிறார்
ஒற்றைச் சிறகு ஓவியா
விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய இந்நூல் அவருக்கு பால புரஸ்கார் விருதைப் பெற்றுத் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விகடன் குழுமத்தில் பணி புரிந்தவர் ஆவார். இந்நூல் இவருடைய இரண்டாவது நாவல்.
அறியப்படாத தமிழகம்
வண்ணம் என்ற சொல் அழகு, இசை, ஒழுங்கு என்ற பொருள்களைத் தந்தது. ஆனால் அதுவே இக்காலத்தில் நிறவெறியாக உருவெடுத்துள்ளது. கறுப்பின மக்கள் வெள்ளைக்கார மக்களிடம் பெற்ற அவமானங்களை இது நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.


