VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: அந்த மாலை – யார் நீ
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > தொடர்கள் > அந்த மாலை – யார் நீ
தொடர்கள்

அந்த மாலை – யார் நீ

ஸ்ரீராம்
Last updated: June 18, 2026 1:26 pm
10 Views
Share
4 Min Read
SHARE

யார் நீ

 

“உங்க ரசனையைதான் பார்க்கறேனே…   எனக்கு நீங்க பொண்ணு பார்க்க வேணாம்…   பழம் பழமா பார்ப்பீங்க..   நானே பார்த்துக்கறேன்…  இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்…”

வினோத் சத்தமாக பேசினான்.

“இப்படியே சொல்லு…  நாலு வருஷமா கேட்டுக்கிட்டிருக்கோம்…   பொண்ணு கிடைக்கறது அவ்வளவு சுலபம்னு நினைச்சியா?  இப்படியே போனா கல்யாணமே ஆகாதுடா…”  மூர்த்தியும் எரிச்சலுடன் கொஞ்சம் சத்தமாகவே பேசினார்.  அது அவர் இயல்புக்கு மாறானது.

“அப்படியே இருந்துட்டுப் போறேன் போ…”  

ஸ்வாமி முன் அமர்ந்து ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருந்த ரேணு மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அப்படியே கணவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஸ்லோகத்தில் கவனமானாள்.

“எப்படியோ உன் அக்கா இந்துவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டோம்…  உங்க ரெண்டு பேரோட பெரிய பாடா இருக்கு…   ச்சே….”

மூர்த்தி வெளியேறினார்.  வாரத்தில் மூன்று நாட்கள் அவர் அந்தத் தெரு முனையில் இருக்கும் உணவகத்துக்குச் செல்வார்.  அங்கு கிடைக்கும் பொங்கலும், இட்லி சாம்பாரும் அவருக்கு அவர் பழைய நாட்களை நினைவு படுத்துகிறதாம்.  அங்கே ஆற அமர அமர்ந்து சாப்பிட்டு விட்டு மெதுவாகத்தான் வருவார்.  ஓய்வுபெற்று ஒரு வருடம் ஆன நிலையில் இது சமீப காலங்களின் வழக்கம் ஆகிப் போயிருந்தது.

அதுவும் இது மாதிரிப் பேச்சுகள் சமீப காலமாய் வீட்டில் அதிகமாகி இருந்தன.  ‘அவர்கள் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள்.  நீங்கள்தான் பார்க்கவேண்டும், முடிக்க வேண்டும்‘ என்று நண்பர்களும் உறவினர்களும் சொல்லிக் கொண்டிருக்க, அவர்களுக்கு தன் வீட்டின் நிலை தெரியவில்லையே என்று நினைத்துக் கொள்ளுவார் மூர்த்தி.  பிடிவாதக்கார மகன்.  ‘உனக்கு முடிச்சுட்டுதான் சின்னவனுக்குப் பார்க்கவேண்டும்‘ என்று சொன்னால் கூட, ‘ஓ..  அப்படி எமோஷனல் பிளாக்மெயில் செய்கிறீர்களா?’  என்பவனை என்ன சொல்வது?

இந்துவிடம் சொல்லிப் பேசிப்பார்க்கச் சொன்னார்.  அவளும் முயன்று பார்த்து “அப்பா…   பேச்சை எடுத்தாலே கத்தறான்..” என்று விட்டாள்.

ஹோட்டல் வந்து விட்டது.  உள்ளே நுழையும்போதே கல்லாவில் இருப்பவர் புன்னகைத்து, தலையசைத்து வரவேற்பை வெளிப்படுத்தினார்.  உள்ளே பார்த்தார்.

ஏ ஸி அறையினுள் நுழைந்து இருப்பதிலேயே கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டார்.  அப்படி அமர்ந்தால் பரிமாறுபவர் மெதுவாகத்தான் அவர் இருப்பிடம் வருவார்.  அது அவர்களுக்குள் உடன்பாடு.  மெதுவாய் யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்.  வருபவர்கள் போகிறவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்.  சமயங்களில் கையில் டைரியோடு வருவார்.  எதையாவது எழுதிக் கொண்டிருப்பார்.  

உடனே செல்ல வேண்டும் என்றால் முன்னாலேயே அமர்ந்து சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவார்.   ஆனால் அங்கு எந்த வேளைகளிலும் நெருக்கும் கூட்டம் எப்போதுமே இருக்காது. 

இவர் அமர்ந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் உள்ளே நுழைந்த ஒரு இளம்பெண் அங்குமிங்கும் பார்த்துவிட்டு, போன் பேசியபடியே இவர் இருக்கைக்கு வந்தாள்.  சின்ன குரலில் பேசியபடியே எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.  அழகாக இருந்தாள்.

அவள் வந்ததால் அருகே வந்தார் சர்வர்.  வந்தவள் ஃபோனை அமர்த்திவிட்டு “ஸ்டார்ட்டர் என்ன இருக்கு?” என்று கேட்க, அவளிடம் மெனு கார்டை கொடுத்துவிட்டு இவரைப் பார்த்தார் சர்வர்.  

“சாம்பார் இட்லியா?  கொண்டுவந்து விடவா?”  

தலையாட்டினார் மூர்த்தி.  சர்வர் அகன்றார்.

நேரம் ஊர்ந்தது.

அவள் ஓரிருமுறை இவரைப் பார்ப்பதும், ஏதோ யோசிப்பதுமாக இருந்தாள்.  ஏதோ ஒரு தவிப்பு அலலது ஆயத்தம் தெரிந்தது அவளிடம்.  வேறு இருக்கைக்கு மாறலாமா என்று யோசித்தார் மூர்த்தி.  நல்ல யோசனை என்று தோன்றவே எழ ஆயத்தமானார்.

இவரைப்பார்த்து புன்னகைத்தாள் அந்தப்பெண்.  “குட் ஈவினிங் அங்கிள்…   ரொம்பக் கவலையாய் இருக்கீங்க போல..”

‘அதைப்பற்றி உனக்கென்ன‘ என்பது போல  ஆச்சர்யத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தவர் நெற்றியைச் சுருக்கினார்.  “என்னையா கேட்கிறாய்?” என்றது நெற்றிச் சுருக்கம்.

“என் பெயர் வினோதினி அங்கிள்…  இன்ஃபோசிஸ்ல வேலை பார்க்கறேன்.  இப்போதைக்கு 70,000  தர்றாங்க…”

“இதை எல்லாம் ஏன் என் கிட்ட சொல்றீங்க?”

“நீன்னே சொல்லலாம் அங்கிள்…     சின்னப் பொண்ணுதான் நான்..”

அதற்குள் சர்வர் அவளுக்கு அவள் கேட்ட மஷ்ரூம் சூப் கொண்டுவந்து கொடுக்க, அவளை அதை எடுத்து ஸ்பூனால் அளைந்தாள்.  எதிரில் இருந்த சிறு டப்பாவிலிருந்து பெப்பர் எடுத்து சூப்பில் தெளித்துக்கொண்டாள்.

‘பெயர் விநோதினியா?  என் பையன் பெயர் வினோத்…  என்ன பொருத்தம்! இப்படிப் பேர் இருந்தாலே அனா பினாவா இருப்பாங்க போல‘

“ஸாரி அங்கிள்…   அதிகப்ரசங்கி போல பேசறேனா?  உங்க ஏகாந்தத்தைக் கெடுக்கறேனா?”  புன்னகையுடன் கேட்டாள் அந்தப் பெண்.  

ஒன்றும் பேசாமல் அவளை பார்த்துவிட்டு சர்வர் வருகிறாரா என்று பார்த்தார் மூர்த்தி.  ‘ஏதாவது ஏமாத்துப் பொண்ணோ?  பணம் கிணம் பறிப்பாளோ…   ஏதாவது ஏடாகூடம் ஆகிடுமோ…’

இட்லி சொல்லாமல் கிளம்பி இருக்கலாம் என்று தோன்றியது மூர்த்திக்கு.  இப்போதான் என்ன போச்சு?   கிளம்பி சர்வரிடம் போய் வேண்டாம்னு சொல்லிட்டு நடந்துடலாம்.  மறுபடியும் எழ நினைத்தார்.

அதற்குள் சிறு இட்லிகளை சாம்பாரில் குளிப்பாட்டிக் கொண்டுவந்து வைத்து விட்டு, ‘வடை வேணுமா?’ என்று கேட்டு விட்டு ஒரு அதிருப்தியான மறுப்பை பதிலாய்ப் பெற்றுக்கொண்டு நகர்ந்தார் சர்வர்.

ஸ்பூனால் இட்லிகளை யோசனையுடன் மெதுவாய்ச் சிதைத்து சாம்பாரில் ஊறவிட்டார் மூர்த்தி.  ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.

தொடர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் பார்வை சங்கடப்படுத்தியது.  சாம்பாரில் ஊறிய இட்லியின் ருசி கூட மனதில் பதியவில்லை.

“வினோத் ரொம்பப் படுத்தறானா அங்கிள்? 

சட்டென நிமிர்ந்தார் மூர்த்தி.  “யார் நீ?”

(தொடரும்)

PrevPreviousகதையின் போக்கில் பயணிக்கும் பயணி
Nextகுருட்டுக் கோழிகள்Next

You Might Also Like

விண்மீன் ஜூலை 2025 மின்னிதழ்
அந்த மாலை – கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
பச்சைமலை!!! நிஸ்வா – பகுதி 7
பாட்டியும் மஞ்சள் கொன்றையும்
கதையின் போக்கில் பயணிக்கும் பயணி
TAGGED:Seriesதொடர்கள்விண்மீன் ஜூலை 2025
Byஸ்ரீராம்
செங்கல்பட்டில் பிறந்து குடந்தை, தஞ்சை, மதுரை என்று வளர்ந்ததற்கு அப்பாவின் அரசாங்க வேலை காரணம். 1991 முதல் சென்னையில் செட்டிலானது என் வேலை காரணமாக. தொழில்முறைக் கல்வி படித்து, அரசாங்க வேலை ஒன்றில் இணைந்து, 35 ஆண்டு பணி நிறைவுக்குப் பின் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றேன். எனது கவிதை ஒன்று 90 களின் பிற்பகுதியில் கல்கியில் வெளிவந்தது. அச்சுப் புத்தகத்துக்கு நான் அதற்குப் பின் படைப்பு எதுவும் அனுப்ப ஏனோ முயற்சிக்கவில்லை . இருபது வயதில் ஒருமுறை மதுரை வானொலி நிலையத்தில் இளையபாரதம் நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளேன். நிறையபேர்களைப் போல நானும் ஒரு கையெழுத்துப் பத்திரிகை என் பதின்ம பருவத்தில் நடத்தியிருக்கிறேன். நூலகத்தில் சுற்றுக்கு விடுவேன். எனது முதல் கதை 'எங்கள் Blog' எனும் எங்கள் வலைப்பக்கத்தில்தான் இடம் பெற்றது. கடந்த தீபாவளிக்கு என் கதை ஒன்று மின்புத்தகமான தேன்சிட்டு தீபாவளி மலரில் வெளிவந்தது. என் பாட்டி, அப்பா ஆகியோர் வீட்டில் புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளிலும் பைண்ட் செய்து வைத்திருந்ததாலும், நூலகங்களாலும் என் படிக்கும் பழக்கம் சிறுவயது முதலே வலுவாயிருந்தது.
Previous Article கதையின் போக்கில் பயணிக்கும் பயணி கதையின் போக்கில் பயணிக்கும் பயணி
Next Article குருட்டு கோழிகள் குருட்டுக் கோழிகள்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?