VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: முண்டாசு கவியும் புரட்சி கவிஞரும்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > கட்டுரைகள் > முண்டாசு கவியும் புரட்சி கவிஞரும்
கட்டுரைகள்

முண்டாசு கவியும் புரட்சி கவிஞரும்

"சாதி களைந்திட்ட ஏரி - நல்ல தண்டமிழ் நீரினை ஏற்கும்!

ருக்மணி வெங்கட்ராமன்
Last updated: June 18, 2026 2:48 pm
4 Views
Share
3 Min Read
முண்டாசு கவியும் புரட்சி கவிஞரும்
SHARE

பாரதியார் தமிழ்ச் சமூகத்தில் சுதந்திர உணர்வையும் சமத்துவ சிந்தனைகளையும் விதைத்த பெரிய கவிஞர். அந்த சிந்தனைகளால் ஆழமாக ஈர்க்கப்பட்டவர் பாரதிதாசன். பாரதியாரின் கவிதைகளும் கருத்துகளும் பாரதிதாசனின் வாழ்க்கையையும் இலக்கியப் பயணத்தையும் மாற்றியது. அதனால் பாரதிதாசனுக்கு பாரதியார் மீது மிகுந்த பற்று உருவானது. 

பாரதிதாசனின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 

புதுச்சேரியில் வாழ்ந்த சுப்புரத்தினம் சிறுவயதிலிருந்தே தமிழ்மொழி மற்றும் இலக்கியங்களில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்.  அந்த காலத்தில் புதுச்சேரி தேசிய உணர்வு வளர்ந்த ஒரு முக்கிய நகரமாக இருந்தது. 

இந்தியா , ஆங்கிலேயரின் ஆட்சியில் இருந்ததால் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் புதுச்சேரிக்கு வந்து தங்கியிருந்தனர். அவர்களில் ஒருவர் பாரதியார். அவர் எழுதிய கவிதைகள் மக்களிடையே சுதந்திர உணர்வை ஏற்படுத்தின. 

இளம் வயதில் இருந்தே சுப்புரத்தினம், பாரதியாரின் பாடல்களையும் உரைகளையும் கேட்டு மிகவும் கவரப்பட்டார். பாரதியார் பாடிய கவிதைகள் நாட்டுப்பற்று, வீர உணர்வு, மனிதநேயம் போன்றவற்றை எடுத்துரைத்தன. “நம்முடைய நாடு சுதந்திரமாக இருக்க வேண்டும்”, “அனைத்து மனிதர்களும் சமம்” போன்ற கருத்துகளை அவர் தனது பாடல்களில் வலியுறுத்தினார். 

இந்த உயர்ந்த சிந்தனைகள் இளம் கவிஞரின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

பாரதியார் பற்றி பாரதி தாசனின் பாடல்:

“பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!

குவிக்கும் கவிதைக் குயில் இந்நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!

நீடு துயில்நீக்கப் பாடிவந்த நிலா!

காடு கமழும் கற்பூரச் சொற்கோ!” 

புதுச்சேரியில் கனகசுப்புரத்தினத்திற்கு பாரதியாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்திப்பு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. 

பாரதியார் பேசும் விதம், அவருடைய தைரியம், சமூகப் பற்றுள்ள சிந்தனைகள் ஆகியவை சுப்புரத்தினத்தை மிகவும் ஈர்த்தன. 

பாரதியார் சாதி வேறுபாடுகளை கடுமையாக எதிர்த்தார். 

“சாதி களைந்திட்ட ஏரி – நல்ல

தண்டமிழ் நீரினை ஏற்கும்!

சாதிப் பிணிப்பற்ற தோளே – நல்ல

தண்டமிழ் வாளினைத் தூக்கும்!” 

பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்றும், பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அந்த காலத்தில் இது மிகவும் முன்னேற்றமான சிந்தனையாக இருந்தது. 

அவரது ‘குடும்ப விளக்கு’ நூல், ஒரு பெண் கல்வி கற்று அறிவாற்றலுடன் குடும்பத்தையும் சமூகத்தையும் உயர்த்தும் விதத்தை அழகாகச் சித்தரிக்கிறது. 

‘கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்” என்ற வரிகள் பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் அவரது மிகப்பிரபலமான பாடல் வரிகள். 

பாரதியாரின் கவிதைகளின் எளிமையும் வலிமையும் பாரதிதாசனை மிகவும் கவர்ந்தன. சிக்கலான கருத்துகளையும் அவர் எளிமையான தமிழில் அழகாகக் கூறினார். 

“தமிழால் பாரதி தகுதி பெற்றதும்

தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்”

என்கிறார். அவர் பாடிய வரிகள் பாரதிதாசனுக்கும் பொருந்தும். பாரதிதாசனால் தமிழுக்குப் பெருமை. 

பாடல்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை பாரதிதாசன் பாரதியாரிடமிருந்து கற்றார். இதனால் பாரதிதாசனும் சமூக மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு கவிதைகள் எழுதத் தொடங்கினார். 

“புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” 

பாரதியாரின் சிந்தனைகள் பாரதிதாசனின் மனதில் ஆழமாக பதிந்ததால் அவர் தனது வாழ்க்கையை அந்த சிந்தனைகளுக்கே அர்ப்பணிக்க முடிவு செய்தார். பாரதியாரின் மீது கொண்ட அன்பும் மரியாதையும் காரணமாக சுப்புரத்தினம் என்ற‌‌ தனது பெயரை “பாரதிதாசன்” என்று வைத்துக் கொண்டார். “பாரதியின் தாசன்” என்று பொருள் தரும் இந்தப் பெயர் அவருடைய குருவின் மீது கொண்ட பற்றை வெளிப்படுத்துகிறது. 

பாரதிதாசன் தனது படைப்புகளில் சமூக சீர்திருத்த கருத்துகளை வலியுறுத்தினார். பெண்கள் கல்வி பெற வேண்டும், சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும், தமிழ்மொழி வளர வேண்டும் என்று பல கவிதைகள் மற்றும் நாடகங்கள் எழுதினார். 

அவர் எழுதிய படைப்புகள் தமிழ்ச் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தின. இதனால் பாரதிதாசன் “புரட்சிக் கவிஞர்” என்று அழைக்கப்பட்டார். 

பாரதியார் விதைத்த சிந்தனை விதைகள் பாரதிதாசனின் படைப்புகளில் வளர்ந்து பெரிய மரமாக மாறின. அவர் தனது குருவின் பாதையில் நடந்து தமிழுக்கும் சமூகத்திற்கும் பெரும் சேவை செய்தார். பாரதியாரின் தாக்கம் இல்லையெனில் பாரதிதாசன் என்ற பெரிய கவிஞர் உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்று பலர் கூறுகின்றனர். 

தமிழ் இலக்கிய வரலாற்றில் புரட்சித் தலைவர் பாரதிதாசன் காலத்தை வென்றவராக வாழ்கிறார்.

PrevPrevious‘முட்கள் நிறைந்த பாதையில் பயணம்’  – எழுத்தாளர் ஆர்.வி.சரவணன்
Nextசுத்தம்…Next

You Might Also Like

சுவரின்றி சித்திரமா?
தலைவருன்னா சும்மாவா!
தாவணி கோவிலில் காவடி சிந்துகள்
அமெரிக்க சுதந்திர தினம்
எதார்த்தத்தின் வலிமை நிறை படைப்பாளி பாத்திமா ஸுபா தல்ஹா
TAGGED:essaysகட்டுரைகள்விண்மீன் ஏப்ரல் 2026
Byருக்மணி வெங்கட்ராமன்
விருப்ப ஓய்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியை. இதுவரை பேக்கிடேர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் எழுத்தாளர்கள் உடன் இணைந்து 40 சிறுகதை தொகுப்பு நூல்களையும், நான்கு தனி நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது சிறுகதை கொலுசு, பண்புடன், இரவி இலக்கிய இதழ், ஆனந்த சந்திரிகை, தமிழ் நெஞ்சம், நேர் பட பேசு போன்ற இணைய இதழ்களில் வெளிவந்துள்ளது. இவரது கட்டுரை கேலக்ஸி விண்மீன், உரத்த சிந்தனை போன்ற இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கொலுசு, ஆனந்த சந்திரிகை இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் நிலை பரிசு பெற்றுள்ளார். நேர்பட பேசு இதழில் இவரது கதை முதல் பரிசு பெற்றது..
Previous Article ‘முட்கள் நிறைந்த பாதையில் பயணம்’  – எழுத்தாளர் ஆர்.வி.சரவணன்
Next Article சுத்தம்…
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?