என்னவென்று
தெரியவில்லை
ஏமாற்றங்கள் மட்டும்
என்னை
எப்பொழுதும்
ஏமாற்றுவதே இல்லை..!
இம்முறை
ஏமாற்றத்தை
திசை திருப்ப
எதிர்மறையை
எதிர்பார்ப்பது
போலிருந்தேன்…
அப்பொழுதும்
என்னை
ஏமாற்றாமல்
ஏமாற்றியது
ஏமாற்றம்..!
இப்பொழுது
எது வருகினும்
எதிர் நிற்பேன்
என்ற நிலை
எடுக்க,
பாவம்! என்ன
செய்யப் போகிறது
அது..?


