ஆசிரியர் குறிப்பு:
**********************
ராம்பிரசாத் , தமிழக அரசின் விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். கணிணியில் பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முது நிலைப் பட்டமும் பெற்றவர். மயிலாடுதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 2014லிருந்து கணிணி மென்பொருள் துறையில் அமெரிக்காவில் பணியில் இருக்கிறார். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் புனைவுகள் எழுதி வருகிறார். 2009லிருந்து தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் இவர், தமிழ் இலக்கிய உலகில் கணிதப்புனைவுகள், அறிவியல் புனைவுகளுக்காக அறியப்படுபவர்.
தமிழில் ஆனந்த விகடன், கணையாழி, குமுதம், குங்குமம், ராணி, ராணிமுத்து, பாக்யா, தேவியின் கண்மணி, கல்கி, உயிர்மை, சொல்வனம், வாசகசாலை, கனலி, பதாகை, விண்மீன் ஆகிய இலக்கிய இதழ்களில் இவரது கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஆங்கிலத்தில் Protocolized, AntipodeanSF, L. Ron Hubbard Writer's of the Future Contest 2024, Aphelion SF&F, Metastellar, Alternate Reality, Allegory SF&F, Literary Yard, Readomania, Boston Literary Magazine, Madswirl, QuailBell Magazine, ஆகிய தளங்களில் இவரது சிறுகதைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
விருதுகள்/அங்கீகாரங்கள்:
*****************************
1. அமெரிக்காவைச் சேர்ந்த உலகளாவிய அறிவியல் புனைவு எழுத்தாளர்களுக்கான அமைப்பான SFWAல் (Science Fiction & Fantasy Writer's Association) உறுப்பினர் அந்தஸ்து பெற்றிருக்கிறார். இவரது சிறுகதையான Mismatch 2026ம் ஆண்டுக்கான Nebula விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.
2. 2020ல் வெளியான இவரது 'வாவ் சிக்னல்' விஞ்ஞானப் புனைவுச் சிறுகதைகள் தொகுதி நூலுக்கு தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த சிறுகதை நூல் விருது அளித்து கெளரவித்திருக்கிறது.
3. இவரது 'சோஃபியா' சிறுகதை 2022ம் ஆண்டுக்கான ஜீரோ டிகிரி இலக்கிய விருது பெற்றிருக்கிறது.
4. 2022ம் ஆண்டு இவர் பொறியியல் பயின்ற ஜெரூசலேம் பொறியியல் கல்லூரி இவரது இலக்கிய பணிகளை கருத்தில் கொண்டு 'சிறந்த முன்னாள் மாணவர்' விருது வழங்கி சிறப்பித்திருக்கிறது.
5. L. Ron Hubbard, Writers of the Future, has honored his work with an 'Honorable Mention' in the 41st International Writers of the Future Contest 2024.
6. ALLEGORY SF&F magazine has honored his work with an 'Honorable Mention' in Vol 46/73, 2024.
முக்கிய நூல்கள்:
*******************
1. வாவ் சிக்னல் - படைப்பு பதிப்பகம் (2020)
2. மரபணுக்கள் - படைப்பு பதிப்பகம் (2024)
3. தீசஸின் கப்பல் - படைப்பு பதிப்பகம் (2024)
4. கம்ப்யூட்டா - படைப்பு பதிப்பகம் (2025)