VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: சொடலி
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > புத்தகப் பார்வை > சொடலி
புத்தகப் பார்வை

சொடலி

‘சொடலி’ கதை வெறும் பழிவாங்கல் கதையல்ல.

சு பொ அகத்தியலிங்கம்
Last updated: June 2, 2026 12:47 pm
15 Views
Share
2 Min Read
சொடலி
SHARE

சொடலி

இந்நூலைப் பற்றி ‘ அருவாள் தேசத்திலிருந்து…’ என்ற தன்னுரையில் வசந்தி முனீஸ் சரியாகச் சொல்கிறார் ; “ எங்கள் ஊர் இருட்டுக்கடை அல்வாவை எல்லோரும் சப்புக் கொட்டிச் சுவைத்திருப்பீர்கள் .ஆனால் , எங்கள் அருவாள் தேசத்தின் அட்டூழியங்களையும் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் அத்துமீறல்களையும் தோலுரித்துக் காட்டுவாள் என் ‘சொடலி’. “

இப்படி தன் பிறந்த மாவட்டத்தை சுயவிமர்சனமாய்ச் சொல்ல –அதுவும் ‘அருவாள் தேசமென..’ தலைப்பிலேயே சொல்ல ; மனோ தைரியம் ரொம்ப வேண்டும் . ஆழமான சமூகக் கோபம் இருக்க வேண்டும். வசந்தி முனீஸூக்கு இவை அதிகமாக உள்ளது. நூலை வாசித்தால் புரியும்.

“ ‘சொடலி’ கதை வெறும் பழிவாங்கல் கதையல்ல ; அது ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கூட்டு மனசாட்சியின்வெடிப்பு.” என்கிறார் அணிந்துரையில் பிறைமதி குப்புசாமி . இது கவனத்தில் கொள்ள வேண்டிய அவதானிப்பு .


எட்டு கதைகள் . எட்டு கொடுமைகளை தோலுரிக்கிறது .எதுவும் வெறும் கற்பனையின் படைப்பல்ல . நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு கதாசிரியர் ஓர் கதை வடிவம் கொடுத்து ஒரு கோவப் பார்வையை வீசி இருக்கிறார் .

ஆணவக்கொலை ,சாதிவெறி .ஆணாதிக்கம் இவற்றையும் மதநல்லிணக்கம் , மனிதம் ,பேரன்பு இவைகளையும் உரக்க வெளிப்படுத்துகிற கதைகள் இவை .சொடலி , வரிப்பணம் , முனியாண்டிக்கு ஸ்தோத்திரம் போன்ற கதைகள் என்னை பெரிதும் ஈர்த்தன . நாட்டார் தெய்வங்களின் வரலாற்றுக் கதை நூலாசிரியருக்கு மிகவும் பிடித்த ஒன்று என நினைக்கிறேன் . சொடலி அதன் வெளிப்பாடுதானோ !

சமூகக் கோபம் நியாயம் . கிராமத்து மொழி நன்று . தொடர்ந்து எழுத்துப் பணியில் ஈடுபட்டுவருபவர் வசந்தி முனீஸ் . ‘விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை ‘ என்கிற பாரதிதாசன் வரிகளையும் உள்வாங்கி , சிறந்த கதை சொல்லியாய் காலவெளியில் பரிணமிப்பார் என்பதில் ஐயமில்லை .

சொடலி : சிறுகதைத் தொகுப்பு , 

ஆசிரியர் : வசந்தி முனீஸ் ,

கேலக்ஸி நூல் பதிப்பகம் & விற்பனையகம் ,

தொடர்புக்கு : galaxybs2022@gmail.com , 99944 34432 ,
பக்கங்கள் : 125 , விலை : ரூ.165 

சுபொஅ.
28 /06 /26

 

PrevPreviousநீளிரா
Nextஇரண்டறக் கலந்து நிற்கும் இயற்கை இளையராஜா…Next

You Might Also Like

செம்மீன்
காஃப்டா
அசைவுகளின் அர்த்தங்கள்
தூப்புக்காரி
ஜமா
TAGGED:நூல் அறிமுகம்புத்தகப் பார்வைபுத்தகம்விமர்சனம்
Previous Article நீளிரா
Next Article இரண்டறக் கலந்து நிற்கும் இயற்கை இளையராஜா…
2 Comments
  • வசந்திமுனீஸ் says:
    May 29, 2026 at 10:11 pm

    கேலக்ஸி பதிப்பகத்தாருக்கும் கேலக்ஸி விண்மீன் மின்னிதழ் ஆசிரியர் குழுவிற்கும் அன்பு அண்ணன் பாலாஜி பாஸ்கரன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻💙💙💙

    Reply
  • வசந்திமுனீஸ் says:
    May 29, 2026 at 10:16 pm

    ஐயா, சுபொஅ அவர்களுக்கு அன்பும் நன்றியும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💙💙💙💙

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (14) கட்டுரைகள் (22) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (76) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (13) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (14)

பதிவுகள்

  • July 20268
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?