VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: இந்தியர் வீதி – அத்தியாயம் 1
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > தொடர்கள் > இந்தியர் வீதி – அத்தியாயம் 1
தொடர்கள்

இந்தியர் வீதி – அத்தியாயம் 1

”இந்த நாட்டுல தேனும் பாலும் ஓடுது. நாம் தான் உபயோகித்துக் கொள்ள வேண்டும் “

கண்ணன் விஸ்வகாந்தி
Last updated: September 4, 2026 10:28 am
8 Views
Share
12 Min Read
இந்தியர் வீதி - அத்தியாயம் 1
SHARE

இந்தியர் வீதி

அத்தியாயம் – 1

கண்ணன் விஸ்வகாந்தி

எனக்கு அது பகலா இரவா என்று சற்றே குழப்பமாக இருந்தது. லூப்தான்சா விமானத்தில் நெதர்லாந்து நோக்கி, முப்பதாயிரம் அடி உயரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். தலை சற்றே வலித்தது. மீண்டும் காபி கேட்டால் கொடுப்பார்களா என்று தயக்கம். இதுதான் எனது முதல் விமானப் பயணம்.

சற்று நேரத்திற்கு முன்பு தான், சாப்பாடு என்ற பெயரில் ஏதோ கொடுத்தார்கள். டிக்கெட் புக் செய்யும் போதே, சைவம் என்று சொன்னதால் தப்பித்தேன். முன் சீட்டில் இருந்து டிரேவை விரித்து விட்டு, சிறிய பொட்டலத்தை சின்னக் கரண்டியால் சாப்பிடுவது, ஏறக்குறைய யோகா செய்வதற்குச் சமம். பக்கத்தில் இருப்பவரை இடிக்காமலும், கீழே சிந்தாமலும் சாப்பிடுவதை, ஒரு சர்க்கஸ் விளையாட்டுக்கு ஒப்பிடலாம். ஆரம்பத்தில் ஜூஸையும் குடித்து விட்டு, முடிக்கையில் காபியும் குடித்ததால் வயிறு வேறு ஒரு மாதிரி இருந்தது.

இன்னும் நான்கைந்து மணி நேரத்தில், நெதர்லாந்ததலுள்ள ஆம்ஸ்டர்டம் விமான நிலையத்தில் இறங்கி, ஹுஸ்டன் செல்லும் விமானத்தைப் பிடிக்க வேண்டும். அது வேறு சற்று பயத்தைக் கொடுத்தது.

இதற்கெல்லாம் என்னுடன் வேலை செய்த குமார் தான் காரணம். நானும் குமாரும் சென்னை மவுண்ட் ரோடிலிருந்த ஒரு கணினி மென்பொருள் டிரெயினிங் சென்ட்டரில், பயிற்றுநர்களாக வேலை செய்து வந்தோம். இரண்டாயிரமாவது ஆண்டில் கணினித் துறையில், ஒய்டூகே என்னும் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருந்தது. அதனால் புதிய வேலை வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.

“கண்ணா, அப்ளை பண்றோம். ரெண்டு பேரும் யுஎஸ் போறம்” என்றான். எனக்கு ஏனோ அந்தளவுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசையும், கனவும் இருந்தது அவனுடன் சேர்ந்து, புரபைல் அப்டேட் செய்து எல்லா வாய்ப்புகளுக்கும் விண்ணப்பிக்க ஆரம்பித்தோம்.

திடீரென ஒரு நாள், அமெரிக்கா செல்வதற்கு நேர்காணலுக்கு வருமாறு, அழைப்புக் கடிதங்கள் வந்திருந்தன. அது ஒரு அமெரிக்கக் கம்பெனி. பெயர் அமெரிஒன். சென்னை தேனாம்பேட்டையில் அதற்கு நேரடியான கிளை அலுவலகம் இருந்தது.

சென்னையில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்த போது, பல முறை, சென்னை விமான நிலையம் வழியாக சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்குள்ளேயே சொல்லிக் கொள்வேன்: “நிச்சயமாக ஒரு நாள், இங்கிருந்து விமானத்தில் பயணம் செய்வேன்”. அந்த சமயத்தில், சுய முன்னேற்ற நூல்களை நிறைய வாசிப்பேன். ஈர்ப்பு விதி பற்றியும், நேர்மறை எண்ணங்கள் பற்றியும் நிறைய வாசித்ததில், என் கனவு என்றாவது ஒரு நாள் நிச்சயமாக நிறைவேற்றும் என்று உறுதியாக நம்பினேன்.

அது ஒரு சனிக்கிழமை. நானும் குமாரும், நேர்காணலுக்குத் தயாரானோம். இருந்ததிலேயே நல்ல உடையும், டையும் அணிந்து கொண்டு, ஆட்டோவில பயணம் செய்து, தேனாம்பேட்டையில் இறங்கினோம். குமாருக்கு அந்த ஏரியா ஓரளவுக்குப் பரிச்சயமான ஒன்றாக இருந்தது. “இங்க பக்கத்தில தான்டா, நடிகர் ராதாரவியின் வீடு இருக்கிறது” என்றான். பேசியபடியே நேர்காணல் நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். வரவேற்பறையில் பல இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். அங்கிருந்த இளம்பெண் ஒவ்வொருவரையாக அழைத்துக் கொண்டு இருந்தாள்.

நாங்களும் எங்கள் பெயரைப் பதிவு செய்து விட்டு அமர்ந்தோம். முதலில் குமாரை உள்ளே அழைத்தார்கள். “குமார், நல்லா பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட்” என்றேன். எனக்கு நன்றி சொல்லி விட்டு, உள்ளே சென்றான். இருபது நிமிடங்களுக்கு மேல் ஆயிற்று. வெளியே வரவில்லை. எனக்கு சற்றே பயமாக இருந்தது. அரை மணிநேரம் கழித்து, வெளியே வந்தான். “நேர்காணல் எப்படிடா இருந்தது? இவ்வளவு நேரம்? ரொம்ப கடினமோ?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினேன். “ஈஸிதான். நம்ம புரபைலிலிருந்து தான் கேள்விகள்” என்றான்.

அடுத்து எனது முறை. எனது பெயரை அழைத்ததும், தயங்கியபடியே உள்ளே சென்றேன். மூவர் கொண்ட குழு. இருவருக்கு எங்களை விட சற்று வயது அதிகமிருக்கும். மூன்றாவது நபருக்கு ஐம்பது வயதிருக்கும்.

இருவரும் பெரும்பாலும் எனது புரபைலில் இருந்த புராஜக்ட்களைப் பற்றியே கேட்டதால், பதில் சொல்வது எளிதாக இருந்தது. விஷுவல் பேசிக்கில் சற்றே தடுமாறினாலும், ஆரக்கிள் பற்றிய கேள்விகளில் சிறப்பாக பதிலளித்தேன். ஏற்கனவே பலமுறை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது என்பதால், தயக்கமின்றி, நம்பிக்கையுடன், நேர்மறையாக பதிலளித்தேன்.

இருபது நிமிடங்கள் போனதே தெரியவில்லை. கடைசியில் மேலாளர் போன்று தோற்றமளித்தவர் கேள்விகளை ஆரம்பித்தார். பெரும்பாலும் நான் டெக்னிகலாகவே இருந்தது. சற்று நேரம் கழித்து, ”தங்களின் நேரத்திற்கு நன்றி. வெளியே அமருங்கள். அரை மணிநேரத்தில் ரிசல்ட் சொல்லி விடுகிறோம்” என்றார். நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தேன்.

“எப்படிடா இருந்தது?” என்றான் குமார். “விஷுவல் பேசிக்கில் ஒன்றிரண்டு தவிர, அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்தேன். அரைமணி நேரம் காத்திருக்கச் சொன்னார்கள்” என்றேன்.

‘சரி வா, பக்கத்தில டீ சாப்பிட்டுட்டு வரலாம்” என்று அழைத்தான். ஐந்து நிமிட நடையில், ஒரு டீக்கடை தென்பட்டது. “கெடச்சிட்டா நல்லா இருக்கும். வீட்டுக்கு உதவியாக இருக்கும்” என்றேன். “ஆமாடா. அப்பா, அம்மா ரொம்ப சந்தோஷப் படுவாங்க” என்றான்.

டீ சாப்பிட்டு விட்டு, மீண்டும் கம்பெனிக்குச் சென்று, வரவேற்பறையில் அமர்ந்தோம். சிறிது நேரத்தில், மேலாளர் வெளியே வந்தார். என்னையும் சேர்த்து மூவரை உள்ளே அழைத்தார்கள். இப்போது வேறு இருவர், மேலாளருடன் அமர்ந்திருந்தனர். “கங்கிராட்ஸ். மூவரும் அமெரிக்க வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளீர்கள். சற்று நேரம் காத்திருந்து, தங்களின் அப்பாயிண்ட்மெண்ட் கடிதத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அடுத்து அமெரிக்க எம்பஸியில் விசா. பிறகு டிக்கெட் வழங்கப்படும்” என்று அருமையான ஆங்கில உச்சரிப்புடன் தெரிவித்தார். எனக்கு கனவா, நனவா என்று புரியவில்லை. அமர்ந்திருந்த மூவருக்கும் நன்றி சொல்லி விட்டு, வெளியே வந்தேன்.

அப்போது தான், குமார் தேர்வு செய்யப்படவில்லை என்பது உறைத்தது. குமாரே ஆரம்பித்தான்: “என்னடா சொன்னாங்க?” என்றான். “நானும் மற்ற இருவரும் செலக்ட். அடுத்து விசா. அப்புறம் பிளைட்” என்று பதிலளித்தபின், “சாரிடா. எங்கள் மூவரையும் விட, நீ தான்டா மிகவும் தகுதியானவன். ஏன் செலக்ட் ஆகவில்லை என்று தெரியவில்லை. மே பி, டிகிரி கூட ஒரு காரணமாக இருக்கலாம்” என்றேன். “ஆமாடா. நீங்க எல்லாம் என்ஜினியரிங். நான் எம்சிஏ. அது கூடக் காரணமாக இருக்கலாம். பரவாயில்லை”.

“நீ பாரு. ரெண்டே வாரத்தில், ஒனக்கு வேற ஆஃபர் கெடச்சிடும். ஒண்ணும் கவலப்படாத“ என்றேன்.

இரண்டே வாரங்களில் அவனுக்கு லண்டன் கம்பெனியிலிருந்து ஆஃபர் கிடைத்து விட்டது.

இதன் பிறகு, இருவருமே மிகவும் பிஸியாகி விட்டோம். ஆன்லைனில் அப்ளை செய்து, விசா இன்டர்வியூக்கு தேதி கிடைத்தது. கம்பெனியிலிருந்து எல்லா டாக்குமெண்ட்களும் கொடுத்தார்கள். அந்த நாளும் வந்தது. பதினோரு மணிக்கு எனக்கு நேரம் ஒதுக்கி இருந்தார்கள். அண்ணாசாலையில் இருக்கும் புகழ்பெற்ற அமெரிக்க எம்பஸி வாசலில், ஒரு நீண்ட வரிசையில் நானும் நின்று கொண்டு இருந்தேன். மிகவும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளுடன் எப்போதும் பாதுகாப்புக்கு ஆட்கள் இருந்தனர்.

சிலர் அதிகாலையில் இருந்தே வரிசையில் நிற்க ஆரம்பித்தனர். வரிசையில் நிற்க, சிலர் பணம் வாங்கிக் கொண்டு பிறருக்காக இடம் பிடித்தனர் என்றெல்லாம் வதந்திகள்.

மெதுவாக வரிசை நகர ஆரம்பித்தது. பலத்த செக்யூரிட்டி சோதனைகளுக்குப் பிறகு, உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது. நிறைய கவுண்டர்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் ஒரு இமிக்ரேஷன் ஆபிஸர் இருந்தார்.

என்னுடைய முறை வந்தது. வாழ்நாளில் முதன்முறையாக ஒரு அமெரிக்கருடன் பேச வாய்ப்பு கிடைத்தது. அவருடைய ஆங்கில உச்சரிப்பு புரிந்து கொள்ள சற்று சிரமமாக இருந்தது. சில அடிப்படை கேள்விகளைக் கேட்டார். எதற்காக அமெரிக்கா செல்கிறீர்கள்? அங்கு என்ன வேலை? எவ்வளவு நாட்கள் தங்கி இருப்பீர்கள்? எங்கு தங்குவீர்கள்? மிகவும் நேர்மையாக பதிலளித்தேன். நீண்ட நாட்கள் தங்கி இருக்கும் எண்ணமேதும் இல்லை. விசா முடிந்தவுடன், இந்தியாவுக்கே திரும்பி விடுவேன் என்றேன். பிறகு சில டெக்னிக்கல் கேள்விகள் இருந்தன. எல்லாக் கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்தேன். அவருடைய முகத்தில் திருப்தியின் அறிகுறிகளை உணர்ந்தேன். பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டு, “you will receive your passport with the VISA stamped within couple of weeks” என்றார். நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தேன். பறக்க வேண்டும் போலிருந்தது. சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தேன்.

செலவுகளுக்கு அப்பா எப்படியோ கடன் வாங்கிக் கொடுத்தார். சென்னையில் அறை நண்பர்களுடன் பர்ச்சேஸ் செய்ததில், பட்ஜெட்டை விட, ஐம்பதாயிரம் ரூபாய் அதிகம் செலவாகியிருந்தது.

இரண்டு வாரங்களில் பாஸ்போர்ட் வீட்டுக்கு கொரியரில் வந்து சேர்ந்தது. கம்பெனியைத் தொடர்பு கொண்டு, விஷயத்தைத் தெரிவித்தேன். மேலாளரே போனை எடுத்தார். வாழ்த்து சொல்லி விட்டு, ஏர் டிக்கெட் அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார். மூன்று நாட்களில் ஏர் டிக்கெட் கிடைத்தது. சென்னையில் இருந்து நெதர்லாந்து. பிறகு அங்கிருந்து ஹுஸ்டன். இரண்டாம் வகுப்பு டிக்கெட். சென்னையில் இருந்து விமானம். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி ஆகியோர் விமான நிலையம் வந்திருந்தனர்.

“கண்ணா, குடும்பமே ஒன்னயத் தான் நம்பியிருக்குது. உடம்ப கவனிச்சிக்கோ. போய் சேர்ந்ததும், போன் பண்ணு” என்றார் அப்பா. நான் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட மனநிலையில் இருந்தேன். குடும்பத்தைப் பிரிந்து இவ்வளவு தூரம் செல்வது இதுவே முதல் முறை. அதுவே ஒரு பயத்தை ஏற்படுத்தியது. அப்பா சொன்ன எல்லாவற்றுக்கும் சரி, சரி என்று தலையாட்டினேன். விசிட்டர் ஏரியாவைத் தாண்டி, உள்ளே செல்ல ஆரம்பித்தேன். எனக்கு அழுகையாக வந்தது. அப்பா, அம்மா எல்லோரும் கையாட்டியதைப் பார்த்தபடியே உள்ளே நுழைந்தேன். குடியுரிமைச் சோதனைக்கு பெரிய வரிசை இருந்தது. இரும்புக் குச்சிகளை நட்டு, அவற்றில் நீல நிறப் பட்டைகள் கட்டப் பட்டிருந்தன. முடிவே இல்லாமல் வளைந்து வளைந்து சென்று கொண்டேயிருந்தது.

சக்கரம் வைத்த சிறிய மற்றும் பெரிய சூட்கேஸ்களைத் தள்ளியபடியே கவுண்டரை நெருங்கினேன். இடுப்பில் பையுடன் கூடிய ஒரு பெல்ட் இருந்தது. அந்தப் பையில் பாஸ்போர்ட், டிக்கெட், கம்பெனி வழங்கிய ஆஃபர் கடிதம் எல்லாம் இருந்தது. பல கவுண்டர்களில், ஒரு கவுண்டரைத் தேர்ந்தெடுத்து நின்றேன். எனது முறை வந்தவுடன், பாஸ்போர்ட்டை எடுத்து நீட்டினேன். மீண்டும் ஒரு அந்நிய முகம். அதே அடிப்படைக் கேள்விகள். விசாவிலிருந்த எனது போட்டோவுடன் எனது முகத்தை சரிபார்த்து, டக்கென்று பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தி, “ஆல் த பெஸ்ட். ஹேவ் ய நைஸ் டிரிப்” என்று பாஸ்போர்ட்டைத் திருப்பி கொடுத்தார். நன்றி சொல்லி விட்டு, லூப்தான்சா விமான கவுண்டருக்குச் சென்றேன். கவுண்டர் பெண்மணி பாஸ்போர்ட்டை வாங்கிப் பார்த்து விட்டு, லக்கேஜ்களை அருகில் இருந்த கன்வேயரில் வைக்கச் சொன்னார். எடை சரியான அளவில் இருந்ததால் தப்பித்தேன். டிக்கெட்டை வாங்கிக் கொண்டு, இரண்டு விமானங்களுக்குமான போர்டிங் பாஸ்களைக் கொடுத்து விட்டு, ‘you can collect your luggages at your destination. Have a nice trip” என்றார். நன்றி சொல்லி விட்டு, சரியான டெர்மினலுக்குச் சென்று, காத்திருந்தேன். சற்று நேரத்தில் போர்டிங் தொடங்கியது.

வாழ்நாளில் முதன்முறையாக ஒரு விமானத்தில் நுழைகிறேன். பயணிகள் அனைவரும் ஏறியதும், விமான ஓட்டி யின் குரலில், விமானம் மேலேறும் அறிவிப்பு. விமான பணிப்பெண்களின் பாதுகாப்பு குறித்த அறிவிப்பு முடிந்ததும், பெல்ட் அணிந்து கொண்டேன். விமானம் ரன் வேயில் வேகமாக ஓடி, ஒரு கணத்தில் ஜிவ்வென்று விண்வெளிக்குத் தாவியது. சிறிது சிறிதாக மேலேற ஆரம்பிக்க, வயிற்றில் பட்டாம்பூச்சி. சற்று பயமாகவும் இருந்தது. சிறிது நேரத்தில் ஆசுவாசம். பிறகு உணவு பரிமாறியதும் சற்று நேரம் உறங்கி விட்டு, நெதர்லாந்தில் இறங்குவதற்கு காத்திருந்தேன். இயங்குவதற்கான அறிவிப்பு வந்ததும் சீட் பெல்ட் அணிந்து, தயாரானேன். விமானத்தில் இறங்கும் நேரம், ரங்க ராட்டினம். வயிற்றை இழுத்து பிடிப்பது போலிருந்தது. ஒரு கழுகைப் போல, வட்டமிட்டு சிக்னல் கிடைத்ததும், ஓடு பாதையில் இறங்கி, சற்று தூரம் ஓடி, தனது கேட் அருகே நின்றது.

அடுத்த விமானம் ஏற, இரண்டு மணி நேர இடைவெளி இருந்தும், ஏர்போர்ட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதி இல்லை.

இங்கு மற்றும் ஒரு குடியுரிமை சோதனை. இந்த சோதனைகள் எப்போதும் எனக்கு ஒவ்வாமையைக் கொடுத்தன.

குளிர் தாங்கும் அளவுக்கு இருந்தது. ஏராளமான டியூட்டி ஃப்ரீ கடைகள் கண் சிமிட்டின. தலைக்கு மேலிருந்த சைன் போர்டுகளைப் பார்த்தபடியே, நடந்தும், வாக்வேயில் நின்றும் கடந்து, ஹூஸ்டன் செல்லும் விமான டெர்மினலை அடைந்தேன்.

இன்னும் முக்கால் மணி நேரமிருந்தது. போரடித்தது. எல்லோரும் நடந்து கொண்டே இருந்தனர். கடைகளிலும் நிறைய கூட்டமிருந்தது. கண்ணில் பட்ட புத்தகக் கடையில் நேரம் செலவழித்தேன். நிறைய சுய முன்னேற்ற நூல்கள் இருந்தன.

நெதர்லாந்து பற்றிய நிறைய புத்தகங்கள், மேப்கள், பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிய தகவல்கள் கொட்டிக் கிடந்தது. மனசு ஒவ்வொரு புத்தக விலையையும் ரூபாயில் மாற்றி யோசித்து எதையும் வாங்க விடாமல் செய்தது. மிதமான வெப்ப நிலை கொண்ட, யூரோ நாணயம் புழங்கும், ஒரு ஐரோப்பிய நாடு நெதர்லாந்து என்ற அளவில் எனது ஞானம் இருந்தது.

விமானம் புறப்படும் கேட் விவரங்கள் சைன் போர்டுகளில் பளிச்சிட்டது. வேகமாக நடந்து கேட்டை அடைந்து, விமானம் புறப்படுவதற்காகக் காத்திருந்தேன். அறிவிப்பு வந்ததும், வரிசையில் நின்று, போர்டிங் பாஸ் சரி பார்க்கப் பட்டு, ஒரு கூண்டு போன்ற அமைப்பில் நுழைந்து, விமான வாயிலை அடைந்து, பணிப்பெண் வழிகாட்டலில், எனது இருக்கையை அடைந்தேன். விமானம் டேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில், பணிப்பெண் என்னிடம் வந்து, தூய ஆங்கிலத்தில், ”Can you please change your seat with that Lady?” என்றார். குழந்தையுடன் போட வேண்டிய சீட்டைத் தனியாக போட்டு விட்டார்கள். “Sure, I can“ என்று சொல்லி விட்டு, அவர் சொன்ன விண்டோ சீட்டுக்கு இடம் பெயர்ந்தேன். சிறிது நேரத்தில் அந்த அதிசயம் நடந்தது. பணிப்பெண் என்னருகில் வந்து, ”Just a small compliment. Thanks for your kind help” என்றார். நன்றி சொல்லி விட்டு, சீட்டில் அமர்ந்தேன். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன். வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு. மீண்டும் ஒரு நீண்ட விமானப் பயணம். ஏறக்குறைய பத்து மணி நேரம்.

தூக்கமும் விழிப்புமாக அவஸ்தையான நிலைமை. முன் சீட்டில் இருந்த குட்டி டிவியில் நிறைய படங்கள் லிஸ்ட் ஆகியிருந்தது. பிரௌஸ் செய்த படியே இருந்தேன். ஜாக்கி சான் நடித்த ஏதோ ஒரு படம் பார்த்து விட்டு, தூங்கி விட்டேன். சில மணி நேரங்களில், எழுப்பி விட்டு, உணவு கொடுத்தார்கள். மீண்டும் சர்க்கஸ். முதலில் வெல்கம் டிரிங்க் போல ஆரஞ்சு ஜூஸ். அடுத்து ஒரு பிரெட் துண்டு, அதற்கு வெண்ணெய். அலுமினியம் பாயிலில் சுற்றப்பட்ட கிச்சடி, அதிலேயே சிறிது சட்னி. சில பழத் துண்டுகள். முடித்தவுடன் காபி அல்லது டீ. ஹாட் டிரிங்க்ஸ் குடிப்பவர்களுக்கு. சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் தூக்கம்.

சில மணி நேரங்களில், கீழே இறங்கப் போகிறோம் என்ற அறிவிப்புடன் விழித்துக் கொண்டேன். பைலட்டின் சிறிய உரை முடிந்ததும், பெல்ட் அணிந்து, இறங்குவதற்கு தயாரானேன்.

எனது குடும்பத்தில் முதல் எஞ்ஜினியர் நான் தான். செல்லியம்மன் நகர் என்னும் சிறிய கிராமத்தில் இருந்து இன்று ஹூஸ்டன் பயணம். பிரமிப்பாகவும் பயமாகவும் இருந்தது.

அப்பா சொன்ன வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது: “கண்ணா, இந்த குடும்பமே ஒன்னயத் தான் நம்பியிருக்குது”.

அமெரிக்க நண்பன் அண்ணாமலை, ”இந்த நாட்டுல தேனும் பாலும் ஓடுது. நாம் தான் உபயோகித்துக் கொள்ள வேண்டும் “.

விமானம் சிறிது சிறிதாக இறங்க ஆரம்பித்து, ஓடு பாதையில் ஓட ஆரம்பித்து, என்னைப் போன்ற எத்தனையோ பேரின் கனவுகளைச் சுமந்து வந்து இறக்கிவிட்ட திருப்தியில், தனது டெர்மினலில் நின்றது.

(தொடரும்)

You Might Also Like

பச்சைமலை!!! நிஸ்வா – பகுதி 7
‘விமர்சனங்களே எழுத்துக்கு உரம்’ – எழுத்தாளர் கண்ணன் விஸ்வகாந்தி
மிஸ் பண்ணக் கூடாத மிஸ்ஃபாத்… நிஸ்வா – பகுதி 12
கலை
அந்த மாலை – கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
TAGGED:Seriesகட்டுரைதொடர்கள்நிஸ்வாவிண்மீன் ஆகஸ்ட் 2026
Previous Article நம்பிக்கை
Next Article சூரிய மலை!!! நிஸ்வா – பகுதி 13
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (16) கட்டுரைகள் (25) கவிதைகள் (31) குறுநாவல் (1) சிறுகதைகள் (84) திரைப் பார்வை (9) தொடர்கள் (20) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (14) புத்தகப் பார்வை (41) விண்மீன் மின்னிதழ் (16)

பதிவுகள்

  • September 20264
  • August 202612
  • July 202617
  • June 202620
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?