ஹபீபி’ திரைப்படம் – ஒரு பார்வை
– புவி
இயக்குநர் மீரா கதிரவன், காதலை மட்டும் மையமாகக் கொள்ளாமல், குடும்ப உறவுகள், சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் கலாச்சார அடையாளங்கள் குறித்தும் இப்படத்தில் பேசியிருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் கைத்தறித் தொழில் செய்து வருபவர் அபுவின் தந்தை யூசுப். இயந்திரங்களின் வருகையால் கைத்தறித் தொழில் நலிவடையத் தொடங்குகிறது. அதே நேரத்தில், வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் பலரும் வளைகுடா நாடுகளை நோக்கிச் செல்லும் சூழல் உருவாகிறது. இத்தகைய சூழலிலும், தன் மகன் அபு குடும்பத் தொழிலையே தொடர்ந்து செய்வான் என்று யூசுப் நம்புகிறார்.
ஆனால், அபுவின் மனதோ சிறுவயது முதலே அதே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் நிலோபரின் மீது காதல் கொள்கிறார்.
காலப்போக்கில், வேறு வழியின்றி அபுவின் குடும்பமும் கைத்தறித் தொழிலைக் கைவிட்டு, வெளிநாட்டுச் சம்பாத்தியத்தை நோக்கித் தங்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பும் அபு, பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணத்துக்குச் சம்மதிக்கிறார். ஆனால், தான் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்த இடத்தில் ஏமாற்றப்படுவதால், அவரது திருமணம் நின்றுபோகிறது.
இந்த ஏமாற்றமும், விரக்தியும் ஒருபுறம் இருக்க, மீண்டும் வளைகுடா நாட்டுக்குச் செல்லும் பயணத்தில் எதிர்பாராத விதமாக நிலோபரைச் சந்திக்கிறார் அபு. இந்தச் சந்திப்பு அவர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது? அபுவின் காதல் நிறைவேறியதா? என்பதே ‘ஹபீபி’ திரைப்படத்தின் கதை.
Sony live OTT தளத்தில் வெளியாகி உள்ளது கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்…

