VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: இரண்டாம் ஆண்டில் இனிதே…!
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > ஆசிரியர் பக்கம் > இரண்டாம் ஆண்டில் இனிதே…!
விண்மீன் ஜூன் 2026
ஆசிரியர் பக்கம்

இரண்டாம் ஆண்டில் இனிதே…!

விண்மீன் மின்னிதழ் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடுவதுடன் இரண்டாவது வயதில் இனிதே பயணிக்க இருக்கிறது.

பரிவை சே. குமார்
Last updated: June 29, 2026 11:30 am
10 Views
Share
2 Min Read
இரண்டாம் ஆண்டில் இனிதே…!
SHARE

இரண்டாம் ஆண்டில் இனிதே…!

வணக்கம்.

நம் எண்ணத்தில் உதிக்கும் விதை ஒன்றை செயல்படுத்தினால் மட்டுமே அது முளைத்து விருட்சமாகும். பெரும்பாலும் நமக்குள் விதைகளாய் குவிந்திருக்கும் ஆயிரம் கனவுகளில்   அனைத்தும் முளைப்பதுமில்லை, விருட்சமாய் வளர்வதுமில்லை. சொல்லப்போனால் பல விதைகளை நாம் விதைப்பதேயில்லை, இன்று நாளையென நாளைக் கடத்தி அதை வீரியமற்றதாக ஆக்கிவிடுகிறோம்.

மின்னிதழ் என்பது கேலக்ஸியின் பல வருடக் கனவு, அது செயல்படுத்தப் படாமல் கனவாகவே இருந்த நிலையில் பாலாஜி அண்ணன் மற்றும் சென்பாலனின் ஒரு சிறு சந்திப்பு அந்த விதையை விதைக்க வைத்தது, வீரியமாக இருக்கும் அதன் வளர்ச்சி விருட்சமாகும் என்ற நம்பிக்கையோடு, எம்மால் இயன்றளவு மிகச் சிறப்பாகப் பயணித்து முதல் அடியில் இருந்து இரண்டாவது அடிக்கு நகர்ந்திருக்கிறோம். ஆம், விண்மீன் மின்னிதழ் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடுவதுடன் இரண்டாவது வயதில் இனிதே பயணிக்க இருக்கிறது.

ஏதோ ஆரம்பித்தோம்… பயணிப்போம் என்றில்லாமல் எதற்காக ஆரம்பித்தோமோ அந்த இலக்கை நோக்கி வேகமாக முன்னோக்கிச் செல்கிறோம் என்பதிலேயே எங்களது விண்மீன் வெற்றி பெற்றுவிட்டது. கடந்த பனிரெண்டு இதழ்களில் 86–க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பலர் புதிய எழுத்தாளர்கள் என்பதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. எங்களது எழுத்தாளர்கள் இல்லையேல் நாங்கள் இல்லை என்பதே உண்மை. மாதாமாதம் புதியவர்களின் படைப்புக்கள் அதிகம் வருவதிலேயே விண்மீன் பரவலாய் தன் ஒளியைப் பாய்ச்சியிருக்கிறது என்பதை உணர்ந்து நகர்கிறோம் உங்களது அரவணைப்போடு.

வளரும் எழுத்தாளர்களின் நேர்காணல் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்து முதல் இதழிலிருந்து செயல்படுத்தியும் வருகிறோம். இதுவரை வந்த பனிரெண்டு நேர்காணல்களில் ஒரிருவர் மட்டுமே அறிந்த எழுத்தாளர்கள், மற்றவர்கள் எல்லாருமே அறிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர்களே. அந்த வகையில் தனக்கு முந்தைய தலைமுறையின் கதையை எந்தவிதப் பூச்சுமின்றி எழுதும் எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்களின் பேட்டி இரண்டாம் ஆண்டின் தொடக்க இதழை அலங்கரிப்பது விண்மீனுக்குப் பெருமை.

விண்மீனின் வெற்றிக்கு வித்திட்ட எங்களின் எழுத்தாளர்களுக்கும், பல்வேறு பணிகளில் இருந்தாலும் வேலைப்பளூவுக்கு இடையே இதழுக்கான வேலைகளையும் செய்து முடிக்கும் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி.

தொடர்ந்து பயணிப்போம்.

விண்மீன் ஜூன் 2026 பதிவிறக்கம் செய்ய

You Might Also Like

தடம் புரண்ட தருணம்
அமெரிக்க சுதந்திர தினம்
வரலாறு
மலைக் கிராமங்கள்!!!  நிஸ்வா – பகுதி 11
ஆறறிவு..?!
TAGGED:ஆசிரியர் பக்கம்தலையங்கம்விண்மீன் ஜூன் 2026
Previous Article விண்மீன் ஜூன் 2026 விண்மீன் ஜூன் 2026 மின்னிதழ்
Next Article மெழுகுவர்த்திகள்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?