அபுல் கலாம் ஆசாத் – ஓர் உரையாடல்
உடல் வடிக்கும் ஒருவன் கதாநாயகனாக இருப்பதால் நாவலில் உடற்பயிற்சிகளையும், ஆணழகன் போட்டிகள் தொடர்பானவற்றையும் விவரமாக எழுதினேன். சென்னையில் மட்டுமல்லாமல், துபாயிலும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு இருக்கும் வேலைவாய்ப்பை நாவலின் வழியாகச் சொன்னேன்.
“கட்டுரையும் ஒரு சிறுகதையே; சிறுகதையும் ஒரு கட்டுரையே.”
உங்களைப் பற்றி எழுதுங்கள்; உங்களைச் சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையை உற்றுக் கவனித்துப் பார்த்து எழுதுங்கள். ஒவ்வொரு மனிதனின் மனதுக்குள்ளும் ஆயிரம் ஆயிரம் அனுபவ அலைகள் தத்தளிக்கின்றன; அவற்றுக்கு எழுத்து வடிவம் கொடுங்கள் போதும்.
கதையின் போக்கில் பயணிக்கும் பயணி
“ஊர் திருவிழா நேரத்துல "தெரிசை இளைஞர்கள்னு" பேரு போட்டு பேனர் வைக்கிறது பெரிய கௌரவமா தோணும். என் ஊர் பேரை எப்போதும் நினைவில் வைக்கனும் நெனச்சேன். அதுக்காக என் பேரோட சேர்த்து ‘தெரிசை’ன்னு சேர்த்தேன். ஆனா இப்ப அதுவே என்னோட பிராண்டாக…


