VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: அந்த மாலை – வினோத் – வினோதினி
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > தொடர்கள் > அந்த மாலை – வினோத் – வினோதினி
தொடர்கள்

அந்த மாலை – வினோத் – வினோதினி

ஸ்ரீராம்
Last updated: June 18, 2026 1:31 pm
6 Views
Share
5 Min Read
SHARE

 வினோத் – வினோதினி

 

“அவன் பேர் வினோத்.  என் பேர் வினோதினி.  இந்த விஷயமே எங்களை ஒருவரை ஒருவர் பார்க்க வச்சுது அங்கிள்…”

 

“…………………..”

 

“என்ன அங்கிள்…   நல்லா பேசுவீங்கன்னு வினோத் சொன்னான்.  சும்மாவே இருக்கீங்க…  எங்களுக்குள்ள முதல்ல சண்டைதான்  வந்து கொண்டிருந்தது.  ஒரே மாதிரி பேர்ங்கறதால பிரெண்ட்ஸ் கிண்டல் அடிச்சாலும் இவன் ஒதுங்கி ஒதுங்கிப் போனான்.  போகப்போக அண்டர்ஸ்டேண்டிங் வந்துடுச்சு…”

 

அண்டர்ஸ்டேண்டிங்கா?  அப்படீன்னா?

 

அவளையே பார்த்தார் மூர்த்தி.  “வினோத் ஒண்ணும் சொன்னதே இல்லையே…  கல்யாணமே வேண்டாம்னுதான் சொல்றான்…நீ யாரையாவது பார்த்திருந்தா சொல்லுன்னு கூட கேட்டுப் பார்த்தும் இல்லைன்னுதானே சொன்னான்?”

 

“பொய் அங்கிள்…   நாங்க ஒரு வருஷமா பழகறோம்..”

 

“ஏன்  பொய் சொல்லணும்?  நாங்க அவனுக்கு கல்யாணம் பண்ணணும்னுதான துடிச்சுக்கிட்டிருக்கோம்…  வேற ஏதாவது சொல்லக் கூடாத பிரச்னை இருக்கா?”

 

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை அங்கிள்…   நீங்களும் லவ் மேரேஜ்னு வினோத் சொல்லி இருக்கான்.  நீங்க உங்க மேட்டரை உங்க அப்பாம்மா கிட்ட ரொம்ப வித்தியாசமா ப்ரசண்ட் பண்ணினீங்களாம்…  இவனுக்கு நீங்க கேட்டும் கூட உங்களிடம் சொல்ல என்னவோ தயக்கம்…   என்ன இருந்தாலும் இதற்கு எல்லாம் பேரன்ட்ஸ் கிட்ட சொல்ல ஒரு தயக்கம் நேச்சுரலாவே இருக்கும்தானே?  அவனே பார்த்தா கூட உங்க ஜாதியிலேயே பாருன்னு சொன்னீங்களாமே…   சொன்னான்.   என்ன அங்கிள் அப்படிப் பார்க்கறீங்க…   நான் வேற ஜாதி இல்லை..  கவலைப்படாதீங்க..  ஓ..   அவன் இவன்னு சொல்றேனேன்னு பார்க்கறீங்களா…   அவர் இவர்னுல்லாம் உங்களுக்காக சொல்லலாம், இம்ப்ரஸ் பண்ணலாம்..   ஆனா நாங்க அப்படி பேசிக்கறதில்ல அங்கிள்…   எதுக்கு போலித்தனமா…  எனக்கு அதெல்லாம் பிடிக்காது…  இப்போ கூட படபடன்னு பேசிகிட்டீங்களாமே…  கல்யாணமே வேண்டாம்னு சொன்னானாமே…  ரொம்பக் கவலை ஆயிட்டீங்க போல…”

 

திடீரென வந்து எதிரே உட்கார்ந்து படபடவென பேசும் அந்தப்  பெண்ணை நிதானமாகப் பார்த்தார் மூர்த்தி. 

 

என்ன பெண் இவள்…   நிஜம் பேசுகிறாளா?  பொய்யா?  இப்படிக் கூட வந்து பேசுவார்களா? சற்றுமுன் நடந்ததைக் கூடச் சொல்கிறாளே…

 

“என்ன அங்கிள்..  இப்படியெல்லாம் பேசறாளேன்னு பார்க்கறீங்களா…   வினோத்திடம் விஷயத்தை விட்டா இழுத்தடிச்சுடுவான் அங்கிள்…  அவன் எப்பவுமே அப்படிதான்…   உங்களுக்குத் தெரியாதா?   வயசாவுது இல்ல…  சட்டுபுட்டுனு விஷயத்தை ஓபன் பண்ணுடான்னா கேட்க மாட்டேங்கறான்…  ஸாரி அங்கிள்… நான் அவன் இவன்னு சொல்றது பழக உங்களுக்கு கொஞ்ச நாளாகும்…”

 

“உன்னைப்பற்றி சொல்லு“

 

“நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு…  நோ சிஸ்டர்ஸ்… நோ பிரதர்ஸ்… எங்கப்பா போன மாசம்தான் ரிடையர் ஆனார்.  அவர் என்னிடம் ரொம்பப் பிரியமா இருப்பார்.  என்ன பார்க்கறீங்க…   அவருக்குத் தெரியுமான்னு கேட்க நினைக்கறீங்க…   கரெக்ட்டா?  தெரியும் அங்கிள்…   வினோத் மாதிரி இழுத்தடிக்க விரும்பலை நான்.  முன்னாடியே சொல்லிட்டேன்.  ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா அங்கிள்… எனக்கும் வினோத்துக்கு மூணு மாசம்தான் வயசு வித்தியாசம்…   பயப்படாதீங்க…   நான் மூணு மாசம் சின்னவள்!”  சிரித்தாள் வினோதினி.

 

“உன் நட்சத்திரம்?” 

“உத்திரம் அங்கிள்…  உங்க பையன் புனர்பூசம் இல்லையா…  பொருந்தும்.  கவலைப்படாதீங்க..   வேற கோத்ரம்தான்.  அதுவும் பிரச்னை இல்லை. ஜாதகத்துல பத்துக்கு ஏழு பொருத்தம் இருக்கு..  நானே பார்த்துட்டேன்.”

 

“உனக்கு ஜாதகம் பார்க்கத் தெரியுமா? “

 

“தெரியும் அங்கிள்…  கத்துக்கிட்டேன்“

 

“உங்கப்பாவுக்கு இதில் முழு சம்மதமா?  அவருக்கு ஒண்ணும் வருத்தமில்லையா?”

 

“வருத்தம் ஆரம்பத்துல இல்லாம இருக்குமா?  இருந்தது.  அப்புறம் சமாதானமாயிட்டார்…  யு நோ அங்கிள்..   அம்மா இல்லைங்கறதால நான் அவருக்கு ரொம்ப செல்லம்.  இருந்தாலும், இருங்க…  அவரையே கேட்டுடலாமே…” போனை எடுத்தவள் அப்பாவின் பெயரைத் தெரிவு செய்து கால் செய்தாள்.

 

“வேண்டாம்.. வேண்டாம்..   அவர் கூட நான் இப்போ பேச விரும்பலை“

 

போனைக் கீழே வைத்து விட்டாள் வினோதினி.  மூர்த்தி விட்ட பெருமூச்சு முடியும் முன் அந்த அறைக்குள் நுழைந்தவரைப் புன்னகையுடன் வரவேற்றாள் வினோதினி.

 

“அப்பா…” என்று மூர்த்தியைப் பார்த்தவள், அப்பாவிடம்  “அங்கிள்” என்றாள்.

 

“தெரியுமே…  போட்டோ காமிச்சுருக்கியே..” என்று புன்னகைத்தார் அவர்.  “ஐயம் பாலாஜி” என்றார் இவருக்காய் கைநீட்டி.

 

அவர் விரல்களைத் தொட்டு கையை இழுத்துக் கொண்டவர்  “ஃபோட்டோவா?” என்றார்.

 

“அப்பா… ”  என்று அவரைப் பார்த்தவள், ‘ஓ…  கமான் அங்கிள்…   நாங்க ஒரு வருஷமா பழகறோம்…   உங்க ஃபோட்டோ என்கிட்டே இருக்காதா?”

 

மூர்த்தி புன்னகைக்கவில்லை.

 

பாலாஜியைப் பார்த்தார்.  “உங்களுக்கு இதில் சம்மதமா?  வருத்தம் ஒன்றும் இல்லையா?  என் பையன் பற்றி உங்களுக்குத் தெரியுமா?”

 

“ஓ…   நல்லாத் தெரியும்…   சில ஜோசியர்கள் உங்க பையன் ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொல்வாங்கன்னு கூட தெரியும்.  ஆனால் அதெல்லாம் இல்லை.  எங்களுக்கு பிரச்னையும் இல்லை.  என்ன பிரச்னை இருந்தால்தான் இனிமேல் என்ன செய்ய முடியும்?  ரெண்டு பேரும் முடிவு பண்ணிட்டாங்க…”

 

“செவ்வாய் தோஷமா?  என் பையனுக்கா?”

 

“அப்பா..  கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா?  கிரேஸி மோகன் டிராமால வர்ற கேரக்டர் மாதிரி வார்த்தைக்கு வார்த்தை ஏதாவது போட்டுக் கொடுத்துகிட்டே இருப்பீங்களா?   அதெல்லாம் ஒண்ணும் இல்லை அங்கிள்…”

 

“அம்மா..   நீ ரொம்ப வேகமா இருக்கே…   இது விளையாட்டில்லம்மா…   என் பையன் கொஞ்சம் முன்கோபி..”

 

“ஐயோ…   கொஞ்சமா…?   வார்த்தைக்கு வார்த்தை எதிர்வாதம் பண்ணுவான்…எதையும் லேசுல ஒத்துக்க மாட்டான்…”

 

மூர்த்தி ஆச்சர்யமானாலும் அவள் குறிக்கிட்டதைத் தடை செய்து தொடர்ந்தார்.

 

“கொஞ்ச நாள் கழிச்சு எங்களுக்குள்ள ஒத்துவரல்ல…  நாங்க பிரியறோம்னுல்லாம் சொல்லக் கூடாது..   நல்லா யோசிச்சு முடிவெடுக்கணும்.  என்னைப்பொறுத்தவரை இந்தக் காலத்துப் பொண்ணுங்க, பையனுங்க எல்லாம் கல்யாண விஷயத்துல பொறுப்பு இல்லைன்னுதான் தோணுது….”

 

“அங்கிள்…  அந்தக் கவலை எல்லாம் உங்களுக்கு வேணாம்…  இன்னிக்கு எல்லாம் முடிவு செய்துடலாம்.  நீங்க பேசறதைப் பார்க்கும்போது உங்களுக்கு சம்மதம்னு தெரியுது…கரெக்ட்டா?”

 

வினோத்தும் வார்த்தைக்கு வார்த்தை “கரெக்ட்டா?” என்று கேட்பது நினைவுக்கு வந்தது. 

 

இவளாகவே முடிவு செய்து கொள்கிறாளே…   அவர் மௌனம் தொடர,

 

வினோதினி ஃபோனை எடுத்து விட்டு வைத்தாள்.

 

வினோத் உள்ளே நுழைந்தான்.  “அதுக்குள்ற என்னைக் கூப்பிட்டுட்டே..” என்றான் விநோதினியைப் பார்த்து.  “அப்பா” என்று புன்னகைத்தான்.

 

மூர்த்தி செயலற்று அமர்ந்திருந்தார்.  ‘சற்றுமுன்தான் என்னுடன் வார்த்தையாடினான்….’

 

சர்வர் இந்தப் பக்கமே நீண்ட நேரமாய் வரவில்லை.  தூரமாய் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.  மூர்த்திக்கு சந்தேகமாய் இருந்தது.

 

(தொடரும்)

PrevPreviousநிஸ்வா என்றொரு பழமையான நகரம்… நிஸ்வா – பகுதி 1
Nextவிண்மீன் ஆகஸ்ட் 2025 மின்னிதழ்Next

You Might Also Like

ஆரச்சாலை
புரிந்தது
கோட்டையும் குட்டிச் சுவர்களும்… நிஸ்வா – பகுதி 3
நிஸ்வா என்றொரு பழமையான நகரம்… நிஸ்வா – பகுதி 1
வாசிப்பும் எழுத்தும்
TAGGED:Seriesதொடர்கள்விண்மீன் ஆகஸ்ட் 2025
Byஸ்ரீராம்
செங்கல்பட்டில் பிறந்து குடந்தை, தஞ்சை, மதுரை என்று வளர்ந்ததற்கு அப்பாவின் அரசாங்க வேலை காரணம். 1991 முதல் சென்னையில் செட்டிலானது என் வேலை காரணமாக. தொழில்முறைக் கல்வி படித்து, அரசாங்க வேலை ஒன்றில் இணைந்து, 35 ஆண்டு பணி நிறைவுக்குப் பின் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றேன். எனது கவிதை ஒன்று 90 களின் பிற்பகுதியில் கல்கியில் வெளிவந்தது. அச்சுப் புத்தகத்துக்கு நான் அதற்குப் பின் படைப்பு எதுவும் அனுப்ப ஏனோ முயற்சிக்கவில்லை . இருபது வயதில் ஒருமுறை மதுரை வானொலி நிலையத்தில் இளையபாரதம் நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளேன். நிறையபேர்களைப் போல நானும் ஒரு கையெழுத்துப் பத்திரிகை என் பதின்ம பருவத்தில் நடத்தியிருக்கிறேன். நூலகத்தில் சுற்றுக்கு விடுவேன். எனது முதல் கதை 'எங்கள் Blog' எனும் எங்கள் வலைப்பக்கத்தில்தான் இடம் பெற்றது. கடந்த தீபாவளிக்கு என் கதை ஒன்று மின்புத்தகமான தேன்சிட்டு தீபாவளி மலரில் வெளிவந்தது. என் பாட்டி, அப்பா ஆகியோர் வீட்டில் புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளிலும் பைண்ட் செய்து வைத்திருந்ததாலும், நூலகங்களாலும் என் படிக்கும் பழக்கம் சிறுவயது முதலே வலுவாயிருந்தது.
Previous Article Oman நிஸ்வா என்றொரு பழமையான நகரம்… நிஸ்வா – பகுதி 1
Next Article Vinmeen August 2025 விண்மீன் ஆகஸ்ட் 2025 மின்னிதழ்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?