VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: தலைவருன்னா சும்மாவா!
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > தலைவருன்னா சும்மாவா!
சிறுகதைகள்

தலைவருன்னா சும்மாவா!

பாலமுருகன். லோ
Last updated: May 26, 2026 3:10 pm
36 Views
Share
7 Min Read
தலைவருன்னா சும்மாவா!
SHARE

காலை சரியாக எட்டு மணி ஆக இன்னும் ஐந்து நிமிடம் இருந்தது.

“வின்சென்ட், கிளம்பு, மார்னிங் மார்க்கெட்டுக்குப் போகணும்,” என்றார் விக்டர்.

மார்னிங் மார்க்கெட் என்பது நிறுவனத்தில் நேற்றைய நிறைகுறைகளை விரிவாகப் பேசும் ஒரு இடம். இரண்டு மூன்று டேபிள்களில் அந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்த பாகங்களை, குறிப்பாகக் கஸ்டமர் கம்ப்ளைன்ட் வந்த உதிரிப் பாகங்களை அங்கு வைத்திருப்பார்கள். அந்த இடத்தில் ‘Achieve 5S’, ‘The Customer is Our First Priority’, ‘Achieve Zero Rejection’, ‘Unity is Our Strength’ போன்ற பெயர் பலகையெல்லாம் தொங்கவிடப்பட்டிருக்கும். இது அங்கு நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு எப்போதும் நினைவூட்டும் விதமாக இருக்க வேண்டும் என்று மேலிடம் பிரத்தியேகமாக அந்தப் பெயர் பலகைகளைத் தொங்கவிடச் செய்திருந்தனர்.

“இதோ, இன்னும் ரெண்டு நிமிடத்தில் அங்கு இருப்பேன் சார்,” என்றான் வின்சன்ட். விக்டரின் சப்பார்டினேட்.

“இல்லப்பா, நம்ம தலைவர் சூடாகிடுவாரு, அதான் சொன்னேன்.”

“புரியுது சார், அவர் வர்றதுக்கு முன்னதாகவே அங்க இருப்பேன்.”

“நீ இங்கு வரும்போது பாஸ்கரையும், லோகேஷையும், முக்கியமா மெயின்டனன்ஸ் கிஷோரையும் அழைச்சுக்கிட்டு வந்துடு. ஏன்னா கஸ்டமர் கம்ப்ளைன்ட் வந்திருக்கு. தலைவர் போனிலேயே கொஞ்சம் காட்டமாத்தான் பேசுனாரு. என்னை லெஃப்ட் ரைட்டுன்னு போனிலேயே வாங்கிட்டாரு.”

“என்ன சார் சொல்றீங்க, போனிலேயா!”

“அட ஆமாம்பா, போனிலேயே சும்மா கிழி கிழின்னு கிழிச்சிட்டாரு. அவர் பேசுனதையெல்லாம் வெளியில சொன்னா வெட்கக்கேடு.”

நிறுவனத்தின் காலை எட்டு மணி ஓசை. அவரவர் வேலையைத் தொடங்கலாம் என்று அறிவுறுத்தும் ஒரு பலத்த ஒலி. சரியாக எட்டு மணி ஆனவுடன் சங்கு ஊதியது. “ஊவ்வு… ஊவ்… ஊவ்… ஊவ்…ஊவ்வு….”

சங்கு சத்தம் கேட்டவுடன், இயந்திரங்களின் அலறல் சத்தம் காதைக் கிழிக்கும். ஏனென்றால், அனைவரும் ஒருசேர அவரவருக்கு உண்டான இயந்திரத்தை இயக்க ஆரம்பித்துவிடுவர்.

மார்னிங் மீட்டிங்கில் தலைவரைச் சுற்றி அனைவரும் இருந்தனர்.

மல்கோத்ரா, “வணக்கம் அனைவருக்கும்” என்றார்.

“வணக்கம் சார்” என்றனர் அனைவரும்.

“சரி என்னப்பா விக்டர், சொல்லு. ஏன் நாம கஸ்டமருக்கு அனுப்பியதில் கம்ப்ளைன்ட் வந்தது? யாருடைய தவறு? ஆப்பரேட்டருடைய தவறா? இல்ல இயந்திரத்தின் கோளாறா? என்னன்னு கொஞ்சம் விளக்கலாமே. எல்லாரும் இருக்கிறாங்கல்ல?”

“ஏம்பா பாஸ்கர், நீ சொல்லு. நீதானே லைன் சூப்பர்வைசர்? ஏன், உனக்குத் தெரியாதா என்ன செய்யணும்னு?”

“இல்ல சார், அந்த இயந்திரத்தில் குறிப்பா ஒரு பாகம் சீக்கிரமே பழுதடைஞ்சிடுது.”

“ஏன் நீங்க சப்ளையரைக் கேட்க மாட்டேங்கிறீங்க? அவர்கிட்ட இப்படி ஆகுது, இதுக்கு என்ன தீர்வுன்னு கேட்க வேண்டியதுதானே?”

கிஷோர் சரியான நேரத்தில், “சார், சப்ளையர் ஏற்கெனவே அதுக்குத் தகுந்த விளக்கத்தைக் கொடுத்துட்டார். நாமதான் சரியான நேரத்துல அந்தப் பாகத்தை மாத்துறது இல்ல,” என்று சொல்லிவிட்டு வின்சென்டின் கண்களை ஊடுருவினார். வின்சென்டும் அவர் சொன்னது சரிதான் என்பதற்குத் தலையசைத்தான்.

“ஏம்பா கிஷோர், நீயே சொல்லுப்பா. ஏன் அந்த வேலை சரியான நேரத்துல நடக்கல?”

“சார், எப்ப கேட்டாலும் அவசரம் அவசரம், இப்ப இயந்திரத்தை நிறுத்த முடியாதுன்னு சொன்னா எப்படிப் பழுதை சரி செய்யுறது?”

“ஏம்பா கிஷோர், உனக்கே தெரியும் மாசக் கடைசின்னா எந்த இயந்திரத்தையும் நிறுத்த முடியாதுன்னு. அப்படி இருக்க, பாஸ்கர்கிட்ட போய் நீ கேட்டா, அவன் எப்படி உனக்குப் பழுது பார்க்கத் தருவான்? கொஞ்சம் பிராக்டிகலா யோசிங்கப்பா. சரி, ஏன் வர்ற ஞாயிற்றுக்கிழமை எடுத்துக்கக் கூடாது?”

பாஸ்கர் உடனே, “சார், ஞாயிறு ஓவர் டைம் வச்சிருக்கேன் சார்” என்றார்.

“என்னப்பா இது? அப்ப எப்போதான் அந்தப் பழுதான பாகத்தை மாத்தப் போறீங்க? அதனால கஸ்டமர் கம்ப்ளைன்ட் வந்திருக்கு, நம்ம சும்மா இருந்திட முடியாது”

“கிஷோர், நீ என்ன பண்ணு, அவன்தான் பாஸ்கர், ஒரு ஷிஃப்டுதான் வைத்திருக்கிறான். நீ வேணா ஞாயிற்றுக்கிழமை மதியானத்துக்கு மேல அதை சரி செஞ்சுடுங்க” என்றார் மல்கோத்ரா.

“சரி சார்” என்று கிஷோரும் தலையை ஆட்டினார்.

மார்னிங் மீட்டிங் முடியும் முன்னர், “என்ன பாஸ்கர், உன்னோட ஆப்பரேட்டருக்கு சரியா டிரெய்னிங் கொடுத்துப் பழக்கப்படுத்து. சரியான நேரத்துல இயந்திரத்தோட பாகத்தைச் சரி செஞ்சிருந்தா, இப்ப இந்த கஸ்டமர் கம்ப்ளைன்ட் வந்திருக்குமா?”

“ஆமாம் சார், புரியுது. நான் ஆப்பரேட்டர்கிட்ட புரிய வைக்கிறேன்”

அவரவருக்கு அன்றைய டார்கெட் கொடுக்கப்படும். அந்த இயந்திரத்தின் மூலம் அவரவர் ஷிஃப்ட் முடிவதற்குள் அந்த டார்கெட்டை அடைந்திருக்க வேண்டும். ஒரு சிலர் டார்கெட்டைக் காட்டிலும் அதிகம் உற்பத்தி போட்டு பாராட்டைப் பெறுவர். வேறு சிலர் டார்கெட்டை அடைய முடியாமல் இயந்திரத்தின் மேல் பழியைப் போட்டுத் தப்பித்துக்கொள்வர். அப்படி ஆப்ரேட்டர் இயந்திரத்தின் மீது பழியைப் போடுகிறான் என்றால், “ஏன் அந்த இயந்திரம் அவ்வளவு நேரம் நின்றது?” என்ற கேள்வி எழும். அதற்கு யார் காரணம், ஏன் அவர் துரிதமாக வேலையை முடிக்கவில்லை என்று பல்வேறு கேள்விகளை அடுக்கிக்கொண்டே போவது தலைவரின் வேலை..

அந்த நிறுவனத்தில் மிக முக்கியப் பொறுப்பில் உள்ளவர்தான் மல்கோத்ரா. இவர் வட மாநிலத்திலிருந்து இங்கு வந்து பல வருடங்கள் கடந்துவிட்டன. நல்ல வட்டார வழக்கும் அவருக்குப் பேச வரும். ஆங்கிலம், லோக்கல் வட்டார வழக்கு, அவருடைய வட மாநிலத்து மொழி என மூணு மொழிகளிலும் புகுந்து விளையாடுபவர். மல்கோத்ரா அவரது கேபினில் உட்கார்ந்திருந்த சமயம் பார்த்து..

போன் ஒலித்தது. “யஹாங் மல்கோத்திரா ஹியர். May I know ஆப் கௌன் ஹை?” என்றார்.

“நான் மணீஷ் பேசுறேன்.”

“ஹலோ மணீஷ், ஹவ் ஆர் யூ டூயிங்? நான் நல்லா இருக்கிறேன். என்ன விஷயமாக போன் பண்ணுனீங்க?”

“மல்கோத்ரா, உடனே எங்க நிறுவனத்திற்கு வர முடியுமா?”

“ஏன், என்ன விஷயம்? ஏதாவது முக்கியமான விஷயமா?”

“ஆமாம்.”

“என்ன என்று தெரிந்தால் நான் ஓரளவுக்குத் தயார் நிலையில் வருவேன். ஏனென்றால் உங்க டைரக்டரெல்லாம் இருப்பாங்க. அவங்க கேட்கிற கேள்விக்கு ஓரளவுக்கு பதில் சொல்லணும்ல.”

“நீங்க சப்ளை செஞ்ச உதிரிப்பாகம் ஒண்ணு ஃபீல்டு கிளைம்ல மாட்டிக்கிச்சு. இப்ப உங்களுக்குப் புரிஞ்சிருக்கும் இந்த மீட்டிங்குடைய சீரியஸ்னஸ் பற்றி”

“சரி மணீஷ், நானும் விக்டரும், அதான் தரக்கட்டுப்பாட்டு இன்சார்ஜும், இன்னும் அரை மணி நேரத்தில உங்க நிறுவனத்தில் இருப்போம்” என்று போனைத் துண்டித்தார்.

இன்டர்காமைச் சுழற்றினார். “ஹலோ விக்டர், உடனே என் கேபினுக்கு வா!“ என்றார்.

விக்டரும் அடித்து பிடித்து மல்கோத்ராவின் கேபினுக்குச் சென்று, ‘உள்ளே வரலாமா சார்?’ என்றான்.

“வா, வந்து இப்படி உட்காரு. இன்னும் ஐந்து நிமிடத்தில் நாம கஸ்டமர் இடத்துக்குப் போகணும்”

விக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன சார், என்ன விஷயம்?” என்றான்.

“வேறு எதுக்கு கஸ்டமர் இடத்துக்குப் போவோம்? நீங்க அந்த லட்சணத்துல உதிரி பாகத்தைக் கஸ்டமருக்கு அனுப்பியிருக்கீங்க. ஃபீல்டு கிளைம் ஆயிடுச்சாம்”

“என்ன சார் சொல்றீங்க, ஃபீல்டு கிளைமா!”

“யோவ், நான் என்ன உன்கூட விளையாடுறேனா? இப்பதான் மணீஷ் போன் போட்டுச் சொன்னான். ஏனையா, இவ்வளவு வசதி செஞ்சு கொடுத்தாலும் யாரும் சரியா வேலை செய்யுறதில்லை. இல்லாட்டி இப்படிப் போயிருக்குமா அந்த உற்பத்தி செஞ்ச பாகம்? சோத்துல உப்பைப் போட்டுத்தானே சாப்பிடுறீங்க?”

“சார்…” என்றான்.

“பிறகென்ன, இதைவிடக் கேவலமா திட்டப்போறான் அந்த நிறுவனத்துத் தலைவர். அப்ப நான் எங்க போய் என் மூஞ்சியை வெச்சுக்கிறது? நாக்கு மேல பல்லைப் போட்டுப் பேசுவானுங்க. ஒரு வார்த்தை கோவமா பேசக் கூடாது, அவ்வளவுதான், ஒண்ணும் இல்லாம செஞ்சுடுவானுங்க”

“உங்களுக்கு என்ன குறை வச்சேன்? பிறகு ஏன் இப்படி? சரியான நேரத்துல இன்கிரிமென்ட் கொடுக்கலையா? இல்ல, சரியான சாப்பாடு போடலையா? வந்து போக வசதி செய்து கொடுக்கலையா? என்னதான் செய்யல? அப்ப நீங்க எனக்குச் செய்ய வேண்டிய உபகாரம் ஒண்ணே ஒண்ணுதான். ஒழுங்கா, தப்பில்லாம அந்த உதிரி பாகத்தைத் தயார் செய்யணும். அவ்வளவுதான். இதைக் கூட ஒழுங்கா செய்ய முடியலைன்னா, அப்புறம் என்ன சொல்றது?”

காரில் விரைந்தனர் இருவரும் கஸ்டமர் இடத்திற்கு.

போகும் வழி நெடுக, இதற்கு ‘கௌன்டர் மெஷர்’ என்ன தரலாம், அதை அவங்க ஒத்துக்குவாங்களா இல்ல புறக்கணிப்பாங்களா, இனி நமது நிறுவனத்தின் நிலை என்ன, தொடர்ந்து ஆர்டர் வருமா என மல்கோத்ரா சிந்தித்துக்கொண்டே வந்தார்.

“கஸ்டமர் கம்ப்ளைன்ட் வந்தா அவங்க கத்தலாம், தவறில்லை. ஆனால் ஃபீல்டுல ப்ராப்ளம் வந்தால் ஒரு தடவைக்கு நூறு முறை கஸ்டமர் யோசிப்பார். மல்கோத்ரா அமைதியாக, ஒரு விதப் பயத்துடனும் விரக்தியுடனும் வேறு எதுவும் பேசாமல் வந்தார்.

அதுவரையில் விக்டருக்கு மல்கோத்திராவைப் பற்றிய புரிதல் என்னவென்றால், அவருடைய வேலையை எளிதில் பார்த்து விடலாம், என்ன, ஆட்களை மேய்ப்பது மட்டுமல்ல, நம்மை மாதிரி ‘மேனேஜ்மென்ட் ஸ்டாஃபை’யும்தான் என்று தன் மனதில் இருந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டான். மேலும் அவனது மனதில் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது: பரமசிவன் கழுத்தில் இருக்கும் வரைக்கும்தான் அந்தப் பாம்புக்குப் பயம் கலந்த மரியாதை. அதுபோலத்தான், தவறு இல்லாமல் நாம உதிரி பாகம் செய்யும் வரைக்கும்தான் மல்கோத்ரா போன்ற உயரிய பதவியில் உள்ள நபர்களுக்கு மரியாதை.

PrevPreviousசுத்தம்…
Nextஎதார்த்தத்தின் வலிமை நிறை படைப்பாளி பாத்திமா ஸுபா தல்ஹாNext

You Might Also Like

ஸெரிப்ரம்
தியாகம்
புரிந்தது
உலை வாய்
ஒரு மனிதனின் கவனக்குறைவு
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் ஏப்ரல் 2026
Previous Article சுத்தம்…
Next Article எதார்த்தத்தின் வலிமை நிறை படைப்பாளி பாத்திமா ஸுபா தல்ஹா
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?