VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – தமிழ்க்காதலன்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > புத்தகப் பார்வை > ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – தமிழ்க்காதலன்
புத்தகப் பார்வை

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – தமிழ்க்காதலன்

2025 வாசித்த புத்தகங்களில் கவர்ந்தது எது..? ஏன்..?

தமிழ்க்காதலன்
Last updated: June 18, 2026 2:40 pm
5 Views
Share
1 Min Read
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
SHARE

தற்போது படித்த ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – ஜான் பெர்க்கின்ஸ் என்ற நூலிலிருந்து உங்களுடன் பகிர உண்மைகளும், என் உணர்வும் இங்கே தமிழில் தருகிறேன். 

நாம் வாழும் புவியில் வளர்ந்த நாடுகளின் (வல்லரசுகள்) பொருளாதார நிலைத்தன்மையை நீண்டகாலம் நீட்டிப்பதற்கும், பொருளாதாரத்தின் மூலங்களாக திகழும் முதலாளித்துவமும் கைக்கோர்த்துக் கொண்டதன் விளைவாக இந்த உலகம் எந்த வகையான சூழலுக்கும், இழிநிலைக்கும் தள்ளப்படும் சூழ்ச்சிக்குள் சிக்கி இருக்கிறோம் என்பது தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இயற்கை வளங்களுக்காவும், உலகின் 10% மேட்டுக்குடிகளின் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் பேரரசு எவ்வாறு கொடூரமாக திட்டமிட்டு, உலக தலைவர்களின் கொலைகள், சொந்த மண்ணுக்காக போராடுபவர்களின் தலைமறைவு, அல்லது கொலைகள், பொம்மை அரசாங்கங்கள் உருவாக்கப்படுதலும், உலக மக்களை தொடர்ந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளி, உழைப்பாளர்களாகவே வைத்து அவர்களின் உழைப்பை சுரண்டுவதையும், நாடுகளுக்கு கடன்களை கொடுத்து மீளமுடியா அடிமைத் தன்மைக்குத் தள்ளி அதன் மூலம் வளங்களைச் சுரண்டி பெரும் இலாபத்தை அடைவதைத் துல்லியமாக உலக பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் குறிக்கோளாக வைத்துக்கொண்டு செயல்படுகின்றன என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறார்.

சமூக வாழ்வியல் பண்பாடுகளின் மீது நவீனம் என்ற பெயரில் கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகளை தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தி மக்களின் வாழ்வியலை சிதைத்து, சிந்திக்க முடியாதவண்ணம் தொடர்ந்து பொருளாதாரத்தை நோக்கி மக்களை ஓட வைக்கும் சதிகளையும் தோலுரித்துக் காட்டியுள்ளார். மொத்த உலகையும் அடிமைபடுத்துவதே பேரரசின் பெரும் நோக்கமாக இருக்கிறது.

மக்களுக்கு இயற்கையாக கிடைத்துக் கொண்டிருந்த வாழ்வாதாரங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகியவற்றின் கதவுகளை அடைத்து எல்லாவற்றுக்கும் விலை வைத்து விற்பதன் மூலம் கொள்ளையடிக்கும் நுட்பத்தையும், அறிவியல் வளர்ச்சி என்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளின் மூலம் மக்களை முட்டாளாக்கும் திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்ற சதிவலையையும் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். நம்மை விழிப்படைய வைக்கும் வாக்குமூலத்தை நீங்களும் படித்து நல்ல உலகம் உருவாக உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன்

PrevPreviousவாடியது கொக்கு – ஸ்ரீராம் பாலசுப்ரமணியன்
Nextபசித்த மானுடம் (1978) – சதீஷ்குமார்Next

You Might Also Like

அஹிம்சை என்பது என்ன?
கதாவிலாசம்
அகத்தின் வண்ணம்
வரலாறு
சுந்தரபவனம்
TAGGED:நூல் அறிமுகம்புத்தகப் பார்வைபுத்தகம்விண்மீன் ஜனவரி 2026விமர்சனம்
Previous Article வாடியது கொக்கு – ஸ்ரீராம் பாலசுப்ரமணியன்
Next Article பசித்த மானுடம் (1978) – சதீஷ்குமார்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?