உடல்நலத்தை கவனிக்கத் தூண்டுவது எது?
– ஜெஸிலா பானு
பணம், பதவி, புகழ், அதிகாரம் – இவை எல்லாம் இருந்தாலும், மன அமைதியும் உடல் ஆரோக்கியமும் இல்லையென்றால் அவற்றின் மதிப்பு குறைந்துவிடுகிறது.
வாழ்க்கையில் சில நேரங்களில் நான் மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களை நினைத்துப் பார்ப்பேன். எவ்வளவு அழகான துறுத்துறுப்பான நடிகையாக வலம் வந்தார்கள். அளவில்லா புகழ், அதிகாரம், செல்வாக்கு எல்லாம் கொண்டவர். அவர்கள் நினைத்திருந்தால் தனக்கான உடற்பயிற்சி பயிற்சியாளரையும், உணவியல் ஆலோசகரையும் அருகில் வைத்துக் கொண்டு தன்னை அப்படியே பேணியிருக்கலாம்.
அவர் வாழ்க்கை எனக்கு உணர்த்துவது, என்னதான் வாழ்க்கையில் உயரங்களை அடைந்தாலும், அந்தப் பயணத்தில் தங்களுடைய உடல்நலத்தை கவனிக்க மறந்துவிடுகிறார்கள். உடலை கவனிப்பதற்கு நேரமும் வசதியும் மட்டும் போதாது, அதற்கான மனநிலையும், வாழ வேண்டும் என்ற உந்துதலும் தேவை.
அந்த உந்துதல் எங்கிருந்து வருகிறது?
நம்மை நேசிக்கும் மனிதர்களிடமிருந்து…
நம்மை நம்பி இருக்கும் உறவுகளிடமிருந்து…
நம்முடைய இருப்புக்கு மதிப்பு கொடுக்கும் மனிதர்களிடமிருந்து…
வாழ்க்கையில் அமைதி இருந்தால் உடல் ஆரோக்கியம் இருக்கும். உடல் ஆரோக்கியம் இருந்தால் உழைக்க முடியும். உழைத்தால் வெற்றியும், செல்வமும், புகழும் தானாகவே வந்து சேரும்.
அதனால் வாழ்க்கையின் மிகப் பெரிய சொத்து பணமோ புகழோ அல்ல… மன அமைதியும் உடல் ஆரோக்கியமும்தான்.
நம்மை நாமே கவனித்துக்கொள்வதற்கும், தொடர்ந்து முன்னேறுவதற்கும் உங்களுக்கு என்ன உந்துசக்தியாக இருக்கிறது?
உங்கள் கருத்து என்ன?
*****


