VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: உதாரணம்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > கட்டுரைகள் > உதாரணம்
கட்டுரைகள்

உதாரணம்

ஒரு பொருளின் அழகையோ அல்லது குணத்தையோ விளக்க மற்றொரு பொருளோடு ஒப்பிடுவது.

கமலா. ரா
Last updated: August 13, 2026 6:50 pm
8 Views
Share
2 Min Read
உதாரணம்
SHARE

உதாரணம்

கமலா ராகவேந்திரன்

ஒரு செயலை கையாள்வதற்கு முன்பே அதன் வடிவங்களை எடுத்துரைப்பதன் பெயர் உதாரணம் எனலாம். ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகப் புரிய வைப்பதற்காகச் சொல்லப்படும் ஒரு சான்று அல்லது முன்மாதிரியே உதாரணம் என அழைக்கப்படுகிறது. ஒரு கடினமான கருத்தை எளிமையாக்க நாம் ஒரு கதையையோ அல்லது நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு செயலையோ சுட்டிக்காட்டும்போது அது உதாரணமாகிறது.

இந்த உதாரணத்தின் பல வடிவங்கள் உவமை, எடுத்துக்காட்டு, நிகர், காட்சி, சாட்சி, ஆதாரம், உருவகம், ஒப்புமை, மாதிரிக்காட்டு, விளக்கக்காட்சி, நிகழ்வுக்காட்டு என்ற கோணங்களில் சூழலுக்கேற்ப வரிகளுடன் உறவாடுகின்றன.

வார்த்தைகள் சில நேரங்களில் மனதைத் தொடாமல் போகலாம். ஒரு நல்ல உதாரணம் மனதில் ஆழமாக பதிந்து விடும். பாடங்களில் பயன்படுத்தப்படும் சூத்திரங்கள் மற்றும் வழிமுறைகள் இந்த சூத்திரம் நிஜ வாழ்க்கையில் இப்படிப் பயன்படும் என்று சொல்லும் ஒரு செயல்முறைதான் உதாரணம். இது புரிதலை மேம்படுத்துகிறது.

ஒரு பொருளின் அழகையோ அல்லது குணத்தையோ விளக்க மற்றொரு பொருளோடு ஒப்பிடுவது. இந்த ஒப்பிடுதலின் நூலில் பயணமாகும் அறிவின் விளிம்பில் உதாரணத்தின் சரியான பொருளை நம்மால் உணர முடிகிறது.

சமூக மாற்றங்களும் உதாரணங்களால் தான் உருவாகின்றன. ஒரு நபர் தன்னலமின்றி செயல்பட்டால், மற்றவர்கள் அதனால் ஈர்க்கப்பட்டு அதே பாதையைத் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு ஒரு சிறிய உதாரணம் கூட பெரிய மாற்றத்திற்கு விதையாக அமையும்.

ஒரு சிறந்த உதாரணம் ஆயிரம் உபதேசங்களை விட மேலானது. மனிதன் சொல்லால் கற்பதை விட, செயலைப் பார்த்து கற்பதே அதிகம்.

வழி தவறும் மனதிற்கு சரியான வழிகாட்டியாக சரியான உதாரணங்கள் அமையும். அது வீட்டில் இருந்து அப்பா, அம்மா இப்படி துவங்கலாம். ஒரு குருவிடமிருந்தும் துவங்கலாம். “வார்த்தைகள் தூரத்திலிருந்து பேசும், உதாரணங்கள் இதயத்திற்கு மிக அருகில் பேசும்.”

உலகம் இன்று போற்றும் மகாத்மா காந்தி, அன்னை தெரசா, அப்துல் கலாம் போன்றவர்கள் வெறும் பேச்சால் உயர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் தங்களை ஒரு உதாரணமாக மாற்றிக்கொண்டார்கள். காந்தியடிகளின் ‘அகிம்சை’ ஒரு சொல்லாக இருந்தபோது யாரும் அதைக் கவனிக்கவில்லை; ஆனால் அவர் அதையே தன் வாழ்க்கையாக மாற்றியபோது, அது ஒரு தேசத்தையே விடுதலைக்கு இட்டுச் சென்றது.

மனிதர்கள் மட்டுமன்றி, இயற்கையும் நமக்குச் சிறந்த உதாரணங்களை வழங்குகிறது.

மரம்: கல்லெறிபவர்களுக்கும் அல்லது வெட்டி சாய்ப்பவர்களுக்கும் கனிகளைத் தந்து ‘சகிப்புத்தன்மைக்கு’ உதாரணமாகிறது.

எறும்பு: விடாமுயற்சிக்குச் சான்றாகத் திகழ்கிறது.

சூரியன்: பிரதிபலன் பாராமல் கடமையைச் செய்வதற்கு உதாரணமாகிறது.

நாம் ஒவ்வொருவரும் ஒருவருக்கு முன்மாதிரியாக இருக்கிறோம். ஒரு அண்ணன் தம்பிக்கும், ஒரு ஆசிரியர் மாணவனுக்கும், ஒரு நண்பன் இன்னொரு நண்பனுக்கும் உதாரணமாகத் திகழ்கிறான். எனவே, நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் மற்றவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது.

வாழ்க்கைப் பயணத்தில் நாம் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழலாம், அல்லது ஒரு சிறந்த வழிகாட்டியின் நிழலில் நடக்கலாம். இரண்டுமே அழகானதுதான். வெறும் வார்த்தைகளால் ஆன கோபுரங்களை விட, அமைதியான செயல்களே உலகை அதிகம் வசீகரிக்கின்றன. நம்முடைய அன்றாடச் செயல்பாடுகள் ஒருவருக்கு மெல்லிய நம்பிக்கையைத் தந்தால் கூட, அதுவே நாம் இந்த உலகிற்கு விட்டுச் செல்லும் ஆகச்சிறந்த அடையாளமாகும்.

*

You Might Also Like

நல்லதை விதைப்போம்
நிழல் நீங்கிய நிலா!
உடல்நலத்தை கவனிக்கத் தூண்டுவது எது?
சிந்தனைகள் கூண்டுக்குள்ளே
ஜப்பானிய ஹைக்கு 
TAGGED:essaysகட்டுரைகள்விண்மீன் ஜூலை 2026
Previous Article கேட்கமறந்தோம்
Next Article மொழித்தவம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (14) கட்டுரைகள் (23) கவிதைகள் (30) குறுநாவல் (1) சிறுகதைகள் (81) திரைப் பார்வை (8) தொடர்கள் (17) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (13) புத்தகப் பார்வை (40) விண்மீன் மின்னிதழ் (14)

பதிவுகள்

  • July 202617
  • June 202620
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?