விதிவிலக்கற்ற 24
– நன்னு,
கூடுவாஞ்சேரி, சென்னை
என்றுமே மங்காத
இயற்கை வளமும்!
ஆற்றல் பெருகிய
உடலும் மனமும்!
அழியா இக்கொடையுடன்
அவனிதனில் வாழும் மனிதா..!
காலைக் கதிரவன்
மாலையில் மறைந்து
மறுநாள் உதித்திடும்
வேளை வரையினில்
அனைவருக்கும்…
பேதமே அல்லாத
ஒரே நேரம் தான்..!
ஒரு செயலில்…
வெற்றிக்கும் தோல்விக்கும்
வரையறைகளின்
தாக்கம் ஒன்று தான்..!
ஒரு நாளில்…
உனக்கும் ஏனையோருக்கும்
நிமிடங்களின்
நீதி ஒன்று தான்..!
பேதமற்ற எல்லை ஒன்றே!
விதிவிலக்கற்ற நேரமும் ஒன்றே!
பயன்படுத்துவோம் நன்றே!


