VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: தாவணி கோவிலில் காவடி சிந்துகள்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > கட்டுரைகள் > தாவணி கோவிலில் காவடி சிந்துகள்
கட்டுரைகள்

தாவணி கோவிலில் காவடி சிந்துகள்

ஆர். வி. சரவணன்
Last updated: June 18, 2026 2:55 pm
17 Views
Share
3 Min Read
மலரே மலரே உல்லாசம்
SHARE

‘மலரே மலரே உல்லாசம்…

உந்தன் நினைவோ நினைவோ  சங்கீதம்…

உன்னை தான் சந்தித்தால்

உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்…

இதயம் எழுதும் கவிதை நீ………..’

 

சில பாடல்கள் கேட்க நல்லாருக்கும். சில பாடல்கள் காட்சியாகப் பார்க்க நல்லாருக்கும். ஆனா கேட்கவும் பார்க்கவும் நல்லாயிருக்கிற பாடல்களில் ஒன்று  ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’  படத்தில் வரும் இந்த  மான்டேஜ் சாங்.

கவிஞர் மு.மேத்தாவின் வரிகளை, இளையராஜா தன் இசையால் அழகுபடுத்த, ஜானகி தன் குரலால் பாடலை வசப்படுத்த, நான் மட்டும் விட்டு விடுவேனா  என்றபடி  இயக்குநர் பாலுமகேந்திரா ரஜினி மற்றும் மாதவியை கொண்டு தன் கேமரா கண்களால் கோர்த்திருக்கும் காதல் கவிதை இது.

பாடலில் வரும் சில வரிகளுக்கு நியாயம் செய்ய வேண்டி அவற்றை  காட்சிபடுத்தியிருப்பார் இயக்குநர்.  உதாரணத்திற்கு,  முதல் சரணத்தில் தொடங்கும் ‘தாவணி கோவிலில் காவடி சிந்துகள். யாரிசை சேர்த்ததோ. யார் மனம் வேர்த்ததோ …..’ வரிகளுக்கு ஏற்றார் போல் மாதவி பாவாடை தாவணியில்  துளிசி செடியை சுற்றி வருவார். 

‘வீடெங்கும் காதலன் வாசனை வீசுதோ ……..’ வரிகளுக்கு மாதவி ரஜினியின் மடியில் படுத்தபடி  அவரை ரசித்து  கொண்டிருப்பார். ‘தூங்கினால் காதிலே ஞாபகம் பேசுதோ……’ வரிகளுக்கு மாதவி ரஜினியின் காதை நிமிண்டுவார்.  ‘வானிலே வெண்ணிலா யாரை தான் தேடுதோ. மோக நோய் தீரவே  நீரில் தான்  மூழ்குதோ…….’  வரிகளுக்கு நிலா ஆக்ரமித்திருக்கும் நீர்நிலையை காட்சிப்படுத்தியிருப்பார்.

பாடல் முழுக்கவே ரஜினி, மாதவி இருவரும் உண்மையான காதலர்களின் உணர்வுகளை அவ்வளவு அழகாக வெளிப்படுத்தி இருப்பார்கள். அவற்றில் நான் ரசித்த  தருணங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

0.22 நொடியிலிருந்து 0.24 நொடிக்குள் வரும் ரஜினியின் அந்த குறும்புச் சிரிப்பு.

1.33 நொடியிலிருந்து 1.39 செகண்டிற்குள் தலைகோதியபடியும்  தலையை சிலிர்த்தபடியும் படகில் உலா வரும் ரஜினி மாதவியின் அந்த உற்சாகம்.

1.51 நொடியிலிருந்து வரும் காட்சியில்   ரஜினி பேசி கொண்டிருக்க, மாதவி அவரது நெஞ்சில் சாய்ந்த படிரசித்து சிரிப்பது.

2.20 நொடியில், மீன் எப்போது தூண்டிலில் சிக்கும் என்று காத்திருந்து, சிக்கியவுடன் மௌனம் கலைத்து வெளிப்படுத்தும் உற்சாக துள்ளல்.

2.57 முதல் 3.01 நொடிக்குள் வரும்  ரஜினி, மாதவியின் சிரிப்பு.

இப்படி  இந்த பாடல் காட்சியில்  இயக்குநர் பாலுமகேந்திரா அதகளப்படுத்தியிருக்கிறார்.

பாடல் முழுக்க  ரஜினியும் மாதவியும் பேசிக் கொண்டே ஊட்டியை நடந்தே சுற்றி வருகிறார்கள். ரொம்ப நடந்துகிட்டே இருக்காங்களே என்று சில இடங்களில்  இயக்குநர் அவர்களை அமர வைக்கிறார். நிற்கவும்  வைக்கிறார். ஆக மொத்தத்துல நம்மை ரசிக்க வச்சிடறார். (ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் சில காட்சிகள் மீண்டும் வருகிறது)

1985 ஆம் ஆண்டு வெளி வந்த  இந்தப் படத்தை  கும்பகோணம் மீனாட்சி திரையரங்கில் பார்த்தேன். இந்தப் பாடல் மட்டும் இத்தனை வருடங்களாக என்னோடு ஒட்டி கொண்டு வந்து கொண்டிருக்கிறது.  இத்தனை வருடங்களில் எத்தனை முறை கேட்டிருக்கிறேன் பார்த்திருக்கிறேன் என்பது கணக்கிலடங்கா.

இந்த பாடல் தந்த ஈர்ப்பினால்  எனது முதல் நாவலுக்கு நான் வைத்த பெயர் இளமை எழுதும் கவிதை நீ….( இதயத்தை இளமையாக்கி கொண்டேன்).

இந்த பாட்டைக் கேட்கிறப்ப கண்மூடி  கற்பனை பண்ணி பாருங்களேன். இரவு மழை நேரத்தில் காதலியோடு கை கோர்த்து குடை பிடித்து நடக்கிற மாதிரி. வார்த்தைகளில் கொண்டு வர இயலாத உணர்வு அது.  அது இளையராஜா தந்த இசைக் கொடை.

பாடலில் ஒரு வரி இப்படியாக வரும் ‘ நீ பாடும் ராகம். உன் வாழ்வின் யோகம்……’ என்று. இளையராஜாவை தான் மு.மேத்தா இப்படி சொல்லியிருப்பதாக எடுத்து கொள்ள தோன்றுகிறது.

PrevPreviousஜப்பானிய ஹைக்கு 
Nextஉரையாடல்கள்Next

You Might Also Like

பாசத்திற்குரிய பாரதிராஜா..!
மன அமைதி
ரோந்து
குருட்டுக் கோழிகள்
ஜப்பானிய ஹைக்கு 
TAGGED:essaysகட்டுரைகள்விண்மீன் ஜூலை 2025
Previous Article ஹைக்கூ ஜப்பானிய ஹைக்கு 
Next Article உரையாடல்கள் உரையாடல்கள்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?