VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: விசித்திரம்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > விசித்திரம்
சிறுகதைகள்

விசித்திரம்

கார்த்திகேயன் மாதையன்
Last updated: November 14, 2026 2:04 pm
7 Views
Share
6 Min Read
SHARE

விசித்திரம்

  • கார்த்திக் மாதையன்

 

அக்டோபர் மாதம் கி.பி 2000-ஆம் ஆண்டு காலை 8 மணி.

ஆ… வென்று ஒரு சத்தம்…

முகத்தில் சோப்பு நுரையுடன் அமர்ந்து இருந்தான் தேவதாஸ்… அவன் கழுத்தில் சவரகத்தியை வைத்தபடி நின்று இருந்தான் செல்வம்.

“அண்ணா… பாத்து பண்ணுணா… பிளேடு பட்டுட போகுது. உனக்கு வயசுஆகிடுச்சு கடைக்கு ஒரு ஆளை போடுன்னா கேட்க மாட்டேங்குற…”

“யாருக்கு எனக்கா…!? தா… இந்த தொழிலை தொட்டு இருபது வருஷம் ஆகுது. இதுநாள் வரைக்கும் ஒரு கீறல் விழுந்தது கிடையாது தெரியுமா…? ஏதோ லைட்டா கை தவிரடிச்சு. ஆனா காயமெல்லாம் ஒன்னும் ஆகல… வேணும்னா கண்ணாடியை பார்த்துக்கோ தேவா…”

“சின்ன வயசுல இருந்து நான் உங்ககிட்ட தான் முடி வெட்டிட்டு இருக்கேன்…” என்றபடி கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே, “அதெல்லாம் நீ கரெக்டா பண்ணுவேன்னு எனக்கு தெரியும்… சும்மா விளையாட்டு பண்ணா கோச்சிக்கிற பாத்தியா…” என்றான் தேவா.

“மார்க்கெட்டுல ஏதோ பிரச்சனைன்னு கேள்விப்பட்டேன்.”

“ஆமாண்ணா… கஷ்டப்படுறவனை எல்லாம் ஓரம் கட்டிட்டு வெட்டுர குத்துற ரவுடி பசங்கதான் இப்போ கட்டப்பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு திரியுறானுங்க. இவனுங்க அட்டகாசத்தை கண்ணால பாக்க முடியல இவங்களை எல்லாம் அடக்க ஒரு நாள் வராமலா போயிடும். அந்த நாளுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்.” என்று கூறியபடியே செல்வத்தின் கையில் பணத்தை வைத்து விட்டு நடந்தான் தேவா.

கையில் பணத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் செல்வம்.

அதே அக்டோபர் மாதம் கி.பி 2005ஆம் ஆண்டு, தாஸ் அந்த ஊரின் மிகப்பெரிய ரவுடியாக இருந்தான். தாஸுக்கும் எதிர் தரப்பு முனியாண்டிக்கும் அடிக்கடி மோதல் வந்து கொண்டே இருந்தது. தாஸை போடுவதற்கு, முனியாண்டி பலமுறை முயற்சி செய்து இருக்கிறான். 10 பேர் நின்றாலும் எதிர்த்து நின்று சண்டை போடுபவன் தாஸ். அவ்வளவு எளிதில் யாராலும் அவனை சாய்த்து விட முடியாது என்பது தெரிந்தாலும் அவனைப் போடுவதற்கான நாளை எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தனர் முனியாண்டி தரப்பினர்.

முனியாண்டி வீட்டின் வெளியே நாற்காலியைப் போட்டு அமர்ந்திருக்க, அவனின் அடியாட்கள் இரண்டு பேர் அங்கே வந்தார்கள்.

“நீங்க ஒன்னும் கிழிக்கிலன்னு உங்க மூஞ்சிங்கள பார்த்தாலே தெரியுதுடா…” என்றான் முனியாண்டி.

“அண்ணா… இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அவன் செத்துட்டாங்கற செய்தி உங்க காதுக்கு வரும்.”

“மூணு வருஷமா இதையேதாண்டா சொல்லிக்கிட்டு திரியுறீங்க… கேட்டு கேட்டு என் காதுக்கே அலுத்துப் போச்சு…” என முனியாண்டி அலுத்துக் கொள்ள, அந்த இரண்டு பேரில் ஒருவன் மட்டும் அவனின் காதில் ரகசியமாக ஏதோ ஒன்று சொல்ல சிரித்தான்.

காலைப்பொழுது. செல்வம் வீட்டில் கயிறு கட்டிலின் மேல் படுத்துக்கொண்டு இருக்க… செல்வத்தின் பட்டன் செல்லுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

‘அப்பா காது கேட்கலையா எவ்வளவு நேரம் ஃபோன் கால் அடிச்சுக்கிட்டு இருக்கு’ வீட்டின் உள்ளே இருந்த மகளின் குரல் கேட்டபின் அதை எடுத்துப் பார்த்தான். அது தாஸிடம் இருந்து வந்த அழைப்பு என்று தெரிந்தவுடன் பதட்டமானான்.

“எங்கணா இருக்க… வர்றியா…?”

“வரேன் தேவா…”

“சீக்கிரமா வா…” என்றவன் தாஸின் போன் காலை கட் செய்துவிட்டு முகத்தை கழுவினான்.

டேபிள் மேல் இருந்த மஞ்சப்பையை எடுத்து அதில் உள்ள பணத்தை பார்த்தான்.

முனியாண்டியின் கூட்டாளிகள் செல்வத்திடம் கூறியது நினைவுக்கு வந்தது.

முனியாண்டி ஆட்கள் “அண்ணா… அக்கா ஆஸ்பத்திரியில் சீரியஸா இருக்கிறதும், அவளை காப்பாத்தும்னா 50,000 ₹ பணம் வேணும்னும், எல்லாம் எங்களுக்கு தெரியும். இந்தா இதுல 50000 ₹ இருக்கு, எல்லாம் உனக்குத்தான்… உன்னோட மொத்த பிரச்சனையும் சால்வு பண்ணிக்கோ. இந்த தம்பிகளுக்காக ஒரே ஒரு காரியம் மட்டும் பண்ணிக்கொடு.” என்றபோது செல்வம் அமைதியாக அவர்களைப் பார்த்தான்.

“வழக்கமா தாஸு உன் கடையில் தான் கட்டிங் பண்ண வருவான்னு எங்களுக்கு நல்லா தெரியும்… அவன் அசந்த நேரமா பார்த்து அவனை முடிச்சிடு… என்ன, இது உன்னால மட்டும் தான் முடியும்… அது தெரிஞ்சு தான் உன்கிட்ட நாங்க வந்து இருக்கோம்.”

மௌனமாக நின்று கையில் பணத்துடன் அவர்களை பார்த்தான் செல்வம்.

“இந்த ஒன்னுமட்டும் நீ பண்ணி குடு, உனக்கு என்ன வேணுமோ நாங்க செய்யறோம்…”

மீண்டும் சுயநினைவுக்கு வந்த செல்வம், பணப்பையை எடுத்து பத்திரமாக வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியே வர திரும்பினான்.

‘சாப்பிடலையாப்பா…; என்ற உள்ளே இருந்து வந்த மகளின் குரலுக்கு “இதோ வந்துடுறேன்மா…” என்று பதில்கூறி கடைக்கு கிளம்பினான்.

கடைக்கு வந்த செல்வம் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு பூட்டைத் திறந்தான்.

யாரோ அவனை தோளில் தட்ட திரும்பி பார்த்தான்.

அங்கே தாஸ் நின்று கொண்டு இருக்க, கூடவே தாஸின் கையால் இரண்டு பேர் நின்று கொண்டு இருந்தனர்

தாஸை பார்த்ததும் பதட்டத்துடன் காணப்பட்டான் செல்வம்.

“ஏன்ணா… இவ்வளவு லேட். சரி சட்டரை திற…”

கடை சட்டரை திறக்க தாஸும் உதவி செய்து, உள்ளே போய் நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

தாஸுடன் வந்த இருவரும் காத்திருக்கும் சேரில் அமர்ந்து இருந்தனர்.

கண்ணாடியை பார்த்த தாஸ், தலையைத் தடவியபடி “அடேய்… தம்பிகளா… அண்ணனுக்கு இரண்டு முடி நரைச்சு போச்சுடா…” எனச் சிரித்தான்.

செல்வம் தாஸின் தோளில் துணியை போட்டான்.

“டேய் தம்பிங்களா…”

“அண்ணா” என்றார்கள் இருவரும்.

“செல்வாண்ணன் கிட்டத்தான் நான் சின்ன வயசுல இருந்து முடி வெட்டுறேன் ரொம்ப நம்பிக்கையான ஆளு. அதுவும் இல்லாம இவரு என் குடும்பத்தில் ஒருத்தர் மாதிரி…” என்றதும் செல்வத்தைப் பார்த்து புன்னகைத்தார்கள் இருவரும்.

செல்வத்திற்கு இன்னும் பதட்டம் போகவில்லை…

“செல்வண்ணா இந்த ரெண்டு நரை முடியையும் கட் பண்ணிடு…”

செல்வம் பதில் சொல்லவில்லை.

“என்னண்ணா… நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கிறேன், நீ எதுவும் பேசாமலே இருக்க…?”

“உடம்பு சரியில்லை தேவா…”

“என்னை இன்னும் தேவான்னு கூப்பிடுற ஒரே ஆள் நீதாண்ணா…”

சோப்பு நுரை போட்டு கழுத்தில் கத்தி வைத்தான் செல்வம்.

‘ஆ…’வென்று ஒரு சத்தம்…

தாஸின் கழுத்தில் இருந்து கத்தியை எடுத்தான் செல்வம்…

சிறிது நேரத்திற்குப் பிறகு…

முனியாண்டியின் கூட்டாளிகளிடம் நின்று கொண்டிருந்தான் செல்வம்.

“என்னண்ணா… முடிச்சிட்டியா…?”

“இல்ல எனக்கு எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் பரவாயில்ல… என் தொழிலுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்… இந்தாங்க நீங்க கொடுத்த பணம்… தாஸை போடுற திட்டத்தை இதோடு நருத்திக்கோங்க இல்லைன்னா… உங்களுக்கு தான் ஆபத்து என்று பணத்தை கொடுத்துவிட்டு திரும்பி நடந்து சென்றான் செல்வம்.

கட்டிங் சேவிங் எல்லாம் முடிந்த பிறகு, கண்ணாடியை பார்த்துக் கொண்டே “ண்ணா… பார்த்து பண்ணுனா… நீ இன்னமும் அப்படியே தாண்ணா இருக்கிற…”

“அதான் உடம்பு சரியில்லைன்னு சொன்னேன்ல தேவா…”

“சூப்பரா வெட்டி இருக்குறண்ணா…” என்று கூறிய தேவதாஸ், செல்வத்தின் தோளில் கையை போட்டபடி கேட்டான்.

“ஆமா… அக்காவுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். ஏன் என்கிட்ட சொல்லல…” என உரிமையுடன் கேட்டவன், “தம்பி அந்த பையில இருக்க பணத்தை எடுடா…” என்றான்.

இருவரில் ஒருவன் ஒரு பையை கொண்டு வந்து கொடுத்தான்.

“இந்தா இதுல ஒரு 50000 ₹ பணம் இருக்கு… முதல்ல அக்காவை போய் பாரு போ… நீ என் அண்ணன் புரியுதா… எந்த தேவையானாலும் எனக்கு கால் பண்ணு…”

செல்வத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

“எனக்கு இருக்கிற ஒரே அண்ணன் நீ தான்… அதுவும் கூட பொறக்காத அண்ணன். என்ன,புரிஞ்சதா!” என்று கூறி தாஸ் கிளம்பி சென்றான்.

சாலையில் நடந்து வந்த செல்வம், தனது கையில் வைத்திருந்த அந்த பணத்தை பார்த்து, வாழ்க்கையின் விசித்திரத்தை நினைத்து, அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்துக் கொண்டான்.

***

You Might Also Like

மூன்றாம் பாலினம்
எதிர்பாராதது…
ஜீவநதி
நந்தனின் நாலு கட்டு வீடு
செஞ்சோற்றுக் கடன் தீர
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் அக்டோபர் 2026
Previous Article வசந்தி முனீஸ் – ஹைக்கூ
Next Article பகுதி 4: நட்சத்திர சாட்சி – சிலேடையில் சிக்கிய சோழம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (17) கட்டுரைகள் (29) கவிதைகள் (36) குறுநாவல் (1) சிறுகதைகள் (92) திரைப் பார்வை (13) தொடர்கள் (26) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (16) புத்தகப் பார்வை (43) விண்மீன் மின்னிதழ் (17)

பதிவுகள்

  • November 20265
  • October 202619
  • September 202613
  • August 202612
  • July 202617
  • June 202620
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?