நிலைப்பாடு
‘நிலைப்பாடு’
என்பது மிகவும் முக்கியமான வார்த்தை. இது
பொது அல்லது தனிப்பட்ட விஷயங்களில் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
இங்கே யாரும் யாரையும் ‘என்னோட
நிலைப்பட்டைத்தான் நீ எடுத்தாகணும்‘ என
வற்புறுத்த முடியாது என்றாலும் சமீப காலமாக வற்புறுத்தல்கள் என்று சொல்வதைவிட
மிரட்டலே அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
குடும்பப் பிரச்சினைகளில்
ஆளாளுக்கு ஒரு எண்ணம் இருக்கத்தான் செய்யும் என்பதை நாம் பார்த்துத்தான் வளர்ந்திருக்கிறோம்,
நம்
தலைமுறை அன்று பார்வையாளனாகவும் இன்று
அந்தப் பிரச்சினைகளில் முடிவெடுக்கும் நபராகவும் மாறியிருக்கிறது. அங்கே முயலுக்கு மூணு கால்ன்னு
நிற்பவருக்கு எல்லாரும் சமரசம் வீசுவதில்லை, எது சரி எது தவறென்ற வாதங்களும் அதன் பின்னான
தீர்வும் நிகழவே செய்யும். அதேபோல்தான் நடிகனை ரசிப்பது, அரசியல்வாதியை, அரசியல் கட்சியை
விரும்பது, விரும்பியதைச் சாப்பிடுவது, விரும்பியதை வாசிப்பது என எல்லாவற்றிலும் அவரவர்
முடிவுதான் முக்கியமே ஒழிய, அழுத்தங்கள் அல்ல.
இணையத்தின் பயன்பாடு அதிகமானபின்
கடந்த
சில வருடங்களாக நான்
ஆதரிக்கும் கட்சியையும் தலைவரையும்தான் நீயும் ஆதரிக்க வேண்டும் என்ற மனநிலை பரவலாய்
மாறியிருக்கிறது. அதுவும் இணையத்தில் ஆட்சி செய்கிறது. இது ஆரோக்கியமான சூழல்
இல்லை. அவர்களின் தவறைச் சுட்டிக் காட்டினால் உடனே ஒரு வட்டத்துக்குள் கொண்டு போய்
நிறுத்தி வைத்து அடிக்க நினைக்கும் மனநிலைக்கும் பைத்தியக்கார மனநிலைக்கும் வேறுபாடு
என்பது துளி கூட இல்லை என்றே சொல்லலாம்.
இங்கே அவரவர் நிலைப்பாடு அவரவருக்கு.
இந்த நிலைப்பாட்டுத் திணிப்புத்தான் நட்புக்களுக்குள் விரிசல் வரச் செய்கிறது என்பதை
நாம் யாரும் உணர்வதில்லை. எனக்குத் தேவை என்றால் நான் எதையும் பேசுவேன்
என்பதுதான்
தற்போது பலரின் (மன)நிலை,
இது
மாறவேண்டும். அடுத்தவர் பேசுவது பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிச் செல்லலாம். அதைவிடுத்து அவன் நண்பனாக இருந்தாலும் கேவலமாகப் பேசுவதையும் எழுதுவதையும் தவிர்த்தால் உறவு நீடிக்கும்.
என் நிலைப்பாடே
உனக்கும் என்றில்லாமல் அவரவர்
நிலைப்பாட்டில் இருக்க விடுவோமே..!


