VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: நம்பிக்கை
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > நம்பிக்கை
சிறுகதைகள்

நம்பிக்கை

‘உலகத்துல ரெண்டே ஜாதிதான் இருக்குன்னு’ சொல்லுறானே… எப்படி சாத்தியம்?

பாலமுருகன். லோ
Last updated: September 4, 2026 10:10 am
13 Views
Share
7 Min Read
நம்பிக்கை
SHARE

நம்பிக்கை

பாலமுருகன்.லோ

“ஏம்பா சக்திவேலு, எங்கப்பா? வேலாயுதம், குமாரு, வடிவேலு எல்லாரும் எங்க? நாளு கிழமை கெடா வெட்டுன்னு வந்துட்டா போதும், இவுனுங்களை காண முடியமாட்டேங்குது.”

“மாமா, எங்க போயிருக்கப் போறானுங்க? இங்கதான் எதாவது பக்கத்துல போயிருப்பானுங்க. வந்துருவானுங்க, விடுங்க. நம்ம கோவில் கெடா வெட்டப் பார்ப்போம்.”

“இப்படி இருக்கப்பத்தான் ஜோசியன் ஒருவன், ‘சொன்னதைக் கேட்டு குலதெய்வத்துக்கு ஒரு கெடா வெட்டுனா எல்லாம் சரியாயிடும். குமாருக்கும் நல்ல பொண்ணு அமையும்னு’ சொன்னதால, எல்லாருமா சேர்ந்து கெடா வெட்டலாமுன்னு வந்துருக்கிறாங்க.”

நேரம் ஆக ஆக, சக்திவேலுவின் மனைவி வசந்திக்கு சாமி வந்திருச்சு. நாக்கைத் துருத்திக்கிட்டு, பல்லை நரநரன்னு கடித்தபடி, சாமியப் பார்த்தபடியே குறி சொல்ல ஆரம்பிச்சுட்டா.

“ஏன்டா, நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியும். கெடா வெட்டுன்னா எல்லாம் சரியாயிடுமாடா? நீங்க எல்லாரும் ஒண்ணு நினைச்சுட்டு வந்திருக்கீங்க. ஆனா நடக்கப்போறது ஒண்ணு” என்று கூறியதும், உடனே அனைவரின் முகத்திலும் பீதி குடிகொண்டது.

சக்திவேல் தன் மனதில் நினைத்தான், “இவளுக்கு சாமி வந்து இப்படி இடக்குமொடக்கா சொல்லீடுச்சே? இப்ப என்ன பண்ணலாம்! குமாருக்கு ஒரு நல்ல பொண்ணு அமையணும்னு வேண்டிக்கிட்டுத்தான் கெடா வெட்டலாமுன்னு வந்தோம். சாமி இப்படி சொல்லீடுச்சே. இவனுங்க என்ன கிருத்துவம் பண்ணி வைக்கப் போறானுங்களோ தெரியலையே.”

சாமி ஏன் இப்படிச் சொன்னது?

வீட்டுல நடந்ததெல்லாம் ஒண்ணோன்னா அவன் கண்முன்னாடி ஓட ஆரம்பிச்சது…

சக்திவேலு, வேலாயுதம், குமாரு, வடிவேலு எல்லாரும் ராமசாமிக்கும் பாப்பாத்திக்கும் பிறந்தவங்க. ராமசாமி வயக்காட்டு வெள்ளாமையின்னு… காடு, ஆடு, மாடு, தோட்டம், சம்சாரம் எல்லாத்தோடையும் வாழ்ந்துட்டிருந்தவர். மூத்தவன் சக்திவேலு; அதுக்கப்புறம் வேலாயுதம்; அவனுக்கப்புறம் குமாரு; கடைக்குட்டிதான் வடிவேலு.

ராமசாமியும் பெரிசா படிக்கல. இவுங்க நாலு பேரும் ஸ்கூல் பக்கமே தலை வைக்காம, காடு, கழனி, தோட்டம், தொறவு எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருந்தாங்க.

சக்திவேலு இரவு உணவகம் வைச்சு நடத்திட்டு வர்றவன். வேலாயுதம் பனியன் கம்பெனியில வேலை பார்த்திட்டு வர்றவன். குமாரு டைலர். கடைக்குட்டி வடிவேலு மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சிட்டு, மூணு வருஷமா ராமசாமிக்கு ஒத்தாசையா சுத்திக்கிட்டு இருக்கிறான்.

சக்திவேலைத் தவிர, மத்த மூணு பேருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நல்லா சரக்கு அடிக்கிற பழக்கம். சொல்லப்போனா, மாசம் முதல் தேதி வந்தா போதும், வேலாயுதத்தோட மனைவி கஸ்தூரியோட குரல் வீடெங்கும் ஒலிக்கும்.

“யோவ், எங்கய்யா சம்பளப் பணம்? எங்க குடு, பார்ப்போம்?”ன்னு அவள் கேப்பா.

அதுக்கு வேலாயுதத்திடமிருந்து பதிலே வராது. கேட்டுக் கேட்டுப் பார்த்து, கோபம் தலைக்கேறின பிறகு, “இனி உன்கிட்ட இப்படி கேட்டா ஒண்ணும் தேறாது. கேட்க வேண்டிய முறையில கேக்கணும். இரு… வெளக்கமாத்த எடுத்து வர்றேன்” என்பாள்.

“யோவ், நானும் தினம் தினம் உன்னோட போராடிட்டு இருக்கேன்…. இந்தப் பாழாப்போன குடிய விட்டொழின்னு, ஆனா நீ கேட்கிறதே இல்ல. குடிக்கிறதோட இந்தக் குடும்பத்தையும் சேர்த்து சீரழிச்சுக்கிட்டு இருக்கியே. இது நியாயமா?”

அவனோ கண்கள் ரெண்டும் சொறுகின நிலையில், வேட்டியைக்கூட சரியா கட்ட முடியாத நிலையில் நின்றிருந்தான். அவ ஏதோ சொல்லுறான்னு மட்டும் புரியுது; ஆனா என்ன சொல்லுறான்னுதான் தெரியல. அந்த அளவுக்கு தொண்டைக் குழி வரைக்கும் சரக்கு ஏறியிருந்தது.

இவன்தான் இப்படின்னா, இவனோட தம்பி குமாரு சரக்கோட, சூது ஆடுற பழக்கமும் வைத்திருந்தான். வேலாயுதத்தைவிட மோசமான பழக்கம். அவனாவது சரக்கு அடிச்சாலும் சம்பளத்துல ஏதாவது வீட்டுக்குக் கொண்டுவந்து குடுப்பான். ஆனா இவனோ சம்பாதிச்ச பணத்தை முழுசா தொலைச்சுட்டு வருவான்.

“இவுங்க ரெண்டு பேரும்தான் சம்பாதிக்கிறாங்க; கெட்டுச் சீரழியறாங்க. இவன் வடிவேலு வேலைக்குப் போகாமலே இருக்கிறான், தோளுக்கு மேல வளர்ந்தவனுங்கள அடிச்சா திருத்த முடியும் இல்லேல? அதான் ராமசாமியும் இவன்களோட போராடிப் பார்த்து, மல்லுக்கட்ட முடியாம ஓஞ்சுப்போயிட்டாரு.”

சுவரோரம் தன் தலையைச் சாய்த்தபடி, எல்லாத்தையும் ஒண்ணொன்னா நினைச்சுட்டு இருந்த சக்திவேலைப் பார்த்த அவனது மாமா, “ஏம்பா, யோசனை பலமா இருக்கு. எதைப்பத்தி யோசிக்கிற? உன் பொண்டாட்டி மேல சாமி வந்ததே, அதைப் பத்தியா?” என்றார்.

“ஆமாம் மாமா, அத நினைச்சுத்தான் இங்க அமைதியா உட்கார்ந்திருந்தேன்.”

“சரி, விடுப்பா. யோசிக்கறத விட்டுட்டு, ஆக வேண்டிய விஷயத்தைப் பாரு”

”ஏன் மாமா, அவுனுங்க மூணு பேரும் வந்துட்டானுங்களா? நேரம் வேற ஆகிக்கிட்டே இருக்கு. கெடா வெட்டு சரியான நேரத்துக்கு ஆரம்பிக்கணும்.”

“ஏம்பா, நீ வேணுமுன்னா ஒரு போன் போட்டுப் பாரேன். அவுனுங்க எல்லாரும் எங்க இருக்கானுங்கன்னு கேளேன். போன எடுத்தானுங்கன்னா, நானும் அவுங்க அப்பாரும் அவுனுங்களை வரச்சொன்னோம்னு சொல்லுப்பா.”

“சரிங்க மாமா, அப்படியே ஆகட்டும்.”

தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து வேலாயுதத்திற்குப் போன் செய்தான் சக்திவேல்.

“டேய், எங்கடா இருக்கீங்க? கொஞ்சம் சீக்கிரம் வாங்கடா. மாமாவும் நம்ம அப்பாரும் உடனே உங்களைக் கூப்பிட்டாங்க. நேரம் வேற ஆகுதுடா. நாளு கிழமையா இப்படிப் பண்ணுனீங்கன்னா எப்படிடா?”

“அண்ணே, இதோ வந்துட்டோம்ண்ணே. ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கோங்கோ. வந்தர்றோம்” என்று போனை வைத்தான் வேலாயுதம்.

பத்து நிமிஷம் கழிச்சு வேகவேகமா வந்தனர் மூவரும்.

“வாங்கடா! இப்பவாவது சாமி கும்புட வரணும்னு தோணுச்சே. உங்க காலு கையெல்லாம் அலம்பிட்டு வாங்க. கெடா வெட்ட நேரமாச்சே” என்றனர் அவுங்க அப்பாரும் மாமாவும்.

“என்ன பூசாரி, கெடா வெட்டிடலாமா? எல்லாம் ரெடியா இருக்கா? இல்ல, ஏதாவது வேணுமா?”

“ஏணுங்க, எல்லாமே சரியா தயாரா இருக்குங்க. பூஜையை ஆரம்பிச்சுடலாம்” என்றவர் “எப்பா கருப்பா, இவுகளுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டப்பா. எல்லாம் உங்க புள்ளைங்கதானே. ஏதோ தப்பு, தவறு பண்ணியிருந்தாங்கன்னா, அத மன்னிச்சு நல்ல வழிய அருளுப்பா கருப்பா. அய்யா, உத்தரவு உடனே கொடுப்பா” என்று சொல்லிவிட்டு, “ராமசாமிண்ணே, கெடாவ அழச்சுட்டு வாங்க. உத்தரவு கேட்கணும். நானும் கருப்பன் கிட்ட வேண்டியிருக்கேன். தப்பு, தவறு ஏதாவது இவுங்க பண்ணியிருந்தா மன்னிச்சுடுவான்… பார்ப்போம். கருப்பன் உடனே உத்தரவு கொடுக்கிறானா, இல்ல தாமதம் பண்ணுறானான்னு பார்ப்போம்” என்றார் பூசாரி.

கெடாவ அழச்சுட்டு வந்தாங்க. கருப்பன வேண்டிக்கிட்டு, பூசாரி சொம்புல இருந்த மஞ்சத் தண்ணிய கெடா மேல தெளிச்சாரு. கெடா தன் தலையை அசைக்காம அப்படியே நின்னுச்சு.

கூட்டத்துல இருந்த சொந்தக்காரர் ஒருவர், “என்னப்பா இது? கருப்பன் உத்தரவு தரமாட்டேங்கிறானே!” என்றார்.

“என்ன சக்திவேலு, ஏதோ பெரிய தப்பு நடந்திருக்குப்போல” என்றார் ஒருவர்.

சக்திவேலுவின் ஆழ்மனம் கலங்கிப் போச்சு. ‘நாம என்ன தப்பு பண்ணுனோம்? இல்ல, நம்ம தம்பிங்கதான் ஏதாவது தப்பு பண்ணியிருப்பாங்களா? ஒண்ணுமே விளங்கலையே கருப்பா. நீயே ஒரு நல்ல வழியக் காண்பிப்பா. நாங்க அந்த வழியப் பிடிச்சுக்கிட்டு போயிடுறோம்’ என்று மனதார வேண்டினான்.

நேரம் ஆக ஆக மறுபடியும் வசந்திக்கு சாமி வந்துடுச்சு.

“அடேய், ஏதோ நடந்திருக்கு. இப்ப சொல்லப் போறீங்களா இல்லையா? டேய், தப்பான மனசோட இந்த கெடா வெட்ட நான் உத்தரவு தரமாட்டேன்” என்று வசந்தி மூலம் கருப்பன் தன் தீர்ப்பைச் சொல்லி முடித்தான்.

ஆளுக்கு ஆளு என்னன்னு யோசித்துக்கொண்டிருக்க, சக்திவேலு தன் அப்பாவையும் மாமாவையும் பார்த்து, “ஏணுங்க ஐயா, மாமா… போன மாசம் நம்ம வீட்டுல ஒரு பெரிய சண்டை நடந்ததே, ஞாபகம் இருக்கா?” என்றான்.

ராமசாமியும் சக்திவேலுவின் மாமாவும், “ஆமாம்பா, தகராறு நடந்தது. அது குமாரு கல்யாண விஷயமாதானே! அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்தனர்.

இவர்கள் யோசித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் வசந்தி மூலம் கருப்பன் வந்தான்.

“டேய், நீங்களெல்லாம் யாருடா? சொல்லுங்கடா… நீங்க யாரு?”

“கருப்பா, நாங்க எல்லாம் உங்க புள்ளைங்க… மனுஷங்க.”

“அப்ப குமாரு காதலிக்கிறானே, அவ மட்டும் என் புள்ளை இல்லையாடா? நீங்க மனுஷங்கன்னா, அவ என்ன மிருகமா? அவளும் மனுஷிதானேடா”

சக்திவேலுவும் கூட இருந்தவங்களும், “கருப்பா, அவனுக்கு இருக்கிற கெட்ட பழக்கத்துக்கு சொந்தத்திலிருந்து பொண்ணு குடுக்குறதே பெரிசு. இதுல வேற நாம ஏன் மறுப்பு தெரிவிக்கணும்? அவளோட சேர்ந்து நாமும் இவன நல்ல வழிக்குக் கொண்டு வந்திடலாம்னு நினைச்சாலும் நாம பொழங்காத இடத்துல இருந்து வர்றவள எப்படி…”

“அடேய், அதெல்லாம் அவளே பார்த்துப்பாடா. அவனையே நம்பித்தானே வர்றா. இதைக்கூட பார்த்துக்க மாட்டாளா? கண்டிப்பா அவன ஒரு நல்ல வழிக்குக் கொண்டு வந்துருவாடா.”

“ஏன்டா இந்த ஜாதி, ஜாதின்னு கட்டிக்கிட்டு அழுவுறீங்க? எங்க சொல்லுடா பார்ப்போம்… சாமிக்கு ஜாதி இருக்காடா? சாமியப் பிரிச்சு வச்சதே உங்கள மாதிரி இருக்கிற மனுஷ ஜாதிதான்டா. இது எப்படா உங்களுக்குப் புரியப்போகுது?”

“கருப்பா, என்னத்தான் இருந்தாலும் நம்ம…”

“டேய், போக்கத்த பயலுகளா! மனுஷன மனுஷனா மதிக்கக் கத்துக்கங்கடா முதல்ல. இந்த உலகத்துல ஜனிச்ச பிறகு மொத்தமே ரெண்டு ஜாதிதான்டா. என்ன தெரியுமடா உங்களுக்கு? சொல்லுங்க, பார்ப்போம்!” என்றான் கருப்பன்.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஊரு உலகமெங்கும் ஜாதி பரவிக்கிடக்குது. இப்ப போயி கருப்பன், ‘உலகத்துல ரெண்டே ஜாதிதான் இருக்குன்னு’ சொல்லுறானே… எப்படி சாத்தியம்?

கருப்பனே முன்வந்து, “அட மடப்பய மகனுகளா! இது கூட தெரியாமலா இத்தனை நாளா இருந்திருக்கீங்க? ஒண்ணு ஆண் ஜாதி… இன்னொண்ணு பெண் ஜாதிதான்டா!” என்று கருப்பன் கூறி முடித்தான்.

எல்லோரும் கருப்பனை மனமுருகிப் பார்த்தனர். ஆனால் குமார் மட்டும் தன் அண்ணி வசந்தியைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டான்.

வசந்தி உருவில் இருந்த கருப்பன், அவனைப் பார்த்து புன்முறுவல் ஒன்றை உதிர்த்தான். அந்த ஒற்றைப் புன்முறுவல் ஆயிரம் அர்த்தங்களை மறைத்திருந்தது என்ற உண்மை குமாருக்கு மட்டும் விளங்கியது.

மீண்டும் ஒரு குரல் ஒலித்தது.

“என்னடா… யோசிச்சீங்களா? இப்ப உத்தரவு வேணுமா, இல்ல வேண்டாமா?”

You Might Also Like

உம்மாவின் துப்பட்டா
கதை சொல்லப்போறேன்
சோளகர் தொட்டி
துண்டுபீடி
அன்பின் ஆழம்
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் ஆகஸ்ட் 2026
Previous Article தாய்மொழி
Next Article இந்தியர் வீதி – அத்தியாயம் 1
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (16) கட்டுரைகள் (25) கவிதைகள் (31) குறுநாவல் (1) சிறுகதைகள் (84) திரைப் பார்வை (9) தொடர்கள் (20) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (14) புத்தகப் பார்வை (41) விண்மீன் மின்னிதழ் (16)

பதிவுகள்

  • September 20264
  • August 202612
  • July 202617
  • June 202620
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?