VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: சரத்காலச் சந்திரன்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > கவிதைகள் > சரத்காலச் சந்திரன்
கவிதைகள்

சரத்காலச் சந்திரன்

ஜெயந்த்
Last updated: May 27, 2026 8:36 am
Share
2 Min Read
சரத்காலச் சந்திரன்
SHARE

ஓர் கூதிர் கால அந்தியில்

பருத்திச் சீலையின் கதகதப்பை

மடியில் முகர்ந்தபடி

மழலையாய் ஆயிடம் கேட்டேன்

 

நிலவு ஆணா பெண்ணா

 

அவள் புன்னகைத்துச் சொன்னாள்

 

திருநங்கை

 

—

 

முலைகளும் விதைப்பையும் தாங்கிய சரீரம்

கடல் குடித்து வீங்கிய ஆமையாய்க்

கங்குலில் மல்லாக்கக் கிடக்கிறது

 

குறிஞ்சி வேலன் சன்னதிக்கு அருகே

கருங்கொங்கணக் கிளையில் காய்த்த

நாடன் சுவடி

 

செய்தியிலில்லை

ஓலையிலிருந்த கற்பூர சுகந்தம்

 

சரத்காலமே

விதுவின் அந்திம காலம் எனும் ஆரூடம்

 

காவடி ஏந்திய திருநங்கைகள்

கிரிவலம் வந்தபோதிலும்

சுடர் தங்காது

என மலை அறியும்

 

நிசாகர சாபம்

தீர்ந்தபாடில்லை

 

காய்ச்சலில் உருகி வளர்கிறது விது

 

அம்புலியின் பஸ்மத் தூரலில்

காட்டை முகரும்

மட்குண்ணிகள்

மண்புழுக்கள்

 

மடந்தையாய் நாணி மிளிரும்

கரையான் புற்றுகள்

 

ஆத்திரக் குப்பிகள்

நிரம்பி வழிய

விதுக் குறியின் ஊற்றெனப் புரிந்ததும்

அலறி ஓட்டம்

 

விசித்திரமாய் பெருகிப் புடைக்கிறது

நிலவின் வயிறு

 

உள்ளில்

ஒரு மர்ம இரவாடியின் அசைவு

 

மேனி முழுக்க

அம்மைத் தழும்புகள்

 

அகாதத்தினுள்

கருத்துப் தேங்கிய ரகசியச் சுனைகள்

 

நிலவே

ஓர்மைகளின் வெளிச்சக் காடு

 

ஒளியைப் புதிரென உரித்து வீசும்

உருண்டு திரண்ட பன்னகம்

 

அதோ

என் இசக்கியின்

கொலுசணிந்த நிழல்

 

நிலவின் மண் பதியாத

அவள் பாத வளைவில்

என் சொப்பன முத்தங்கள்

 

அவள் புழையில்

என் உருகிய பாகின்

எண்ணெய் மணம்

 

அவள் குரல்வளையில்

இழைந்திருந்த கோகிலத்தின் மதுரம்

 

என்னவளின் மமதையில்

கிரகணத்தின் கவர்ச்சி

 

—

 

மூன்றாம் சாம அம்புலியில்

வெடிக்கும் குமிழிகளின் ஓலங்கள்

 

பேய்களாய் மேற்கு மலையில் இறங்குகிறது

மரணத்தின் துர்கந்தம்

 

சந்திரப் பெருமூச்சுகளை முகர்ந்த கூகைகள்

இழவுப் பாடல்களை இசைத்தபடி

வடக்கிருந்து மாய்கின்றன

 

பருதியும் அஞ்சிடும்

உக்கிரப் பிரகாச மலரைச் சூடி

நிற்கிறாள் இரவானவள்

 

நிலவின் பின் புறத்திலிருந்து

சிதறிப் பறக்கின்றன

ஆயிரம் கோடித் திருநங்கை மின்மினிகள்

 

பிலத்தின் கடைசிச் சுவர்களை

வெளிச்சம் வருடியதும்

கனவு கலைந்தெழுகிறான்

ஒரு யௌவன யோகி

 

கிரணங்கள்

குறியைத் தழுவ

முதிர்ந்த அம்புலி எழுப்பும்

அமானுஷ்ய முனகல்களால்

நடுங்குகிறது கம்பீர உழுவை

 

யாரும் எதிர்பாரா கணம்

விடியலில்

பௌர்ணமி வெடித்துச் சிதற

புறமுதுகைக் காட்டினான் மார்த்தாண்டன்

 

எங்கும் இசக்கியின் அல்குல் சுரந்த

அந்தகாரத்தை ஒத்த

காரிருள்

 

நான்காம் யாமம்

 

வேர்ப்பினில் நிலவை உமிழ்கிறது

கருஞ்சுனையருந்திய சயிந்தவம்

 

பழவத்தின் மையிருள் சுனையிலிருந்து

உதித்தது

திருநங்கை ஈன்றெடுத்த நிலவு

 

அதன் உள்ளங்கையில்

சரத்கால ரேகைகள்

 

முகத்தில் சுவடின்றி மறைந்து போன

ஒரு யௌவன யோகியின்

கள்ளச் சாயல்

PrevPreviousவிண்மீன் ஏப்ரல் 2026 மின்னிதழ்
Nextபகையின் தழும்புகள்!!!  நிஸ்வா – பகுதி 9Next

You Might Also Like

காப்பியக்கோவின் வெண்பா
மலடு
சுத்தம்…
விண்மீன் – வாழ்த்துப் பா
யாரோ வருவார்கள்
TAGGED:Poemsகவிதைகள்விண்மீன் ஏப்ரல் 2026
Previous Article Vinmeen Apr 2026 விண்மீன் ஏப்ரல் 2026 மின்னிதழ்
Next Article பகையின் தழும்புகள்!!!  நிஸ்வா – பகுதி 9
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (12) கட்டுரைகள் (18) கவிதைகள் (28) குறுநாவல் (1) சிறுகதைகள் (68) திரைப் பார்வை (8) தொடர்கள் (14) நிகழ்ச்சிகள் (4) நேர்காணல் (11) புத்தகப் பார்வை (34) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • June 20261
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (18) Interview (11) Poems (28) Series (14) Short Stories (69) ஆசிரியர் பக்கம் (12) இளையராஜா (2) கட்டுரை (11) கட்டுரைகள் (17) கவிதைகள் (28) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (2) சினிமா (8) சிறுகதைகள் (74) தலையங்கம் (12) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (14) நாவல் (7) நிகழ்ச்சி (4) நிஸ்வா (10) நூல் அறிமுகம் (34) நூல் வெளியீடு (3) நேர்காணல் (11) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (34) புத்தகம் (34) பெருங்கதை (1) பேட்டி (11) மதுரை (2) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (42) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?