VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: ஒற்றைச் சிறகு ஓவியா
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > புத்தகப் பார்வை > ஒற்றைச் சிறகு ஓவியா
புத்தகப் பார்வை

ஒற்றைச் சிறகு ஓவியா

சௌமியா இராஜாராம்
Last updated: June 18, 2026 1:25 pm
8 Views
Share
2 Min Read
ஒற்றைச் சிறகு ஓவியா
ஒற்றைச் சிறகு ஓவியா
SHARE

ஒற்றைச் சிறகு ஓவியா

 

 

ஆசிரியர்: விஷ்ணுபுரம் சரவணன்

இவ்வுலகில் இருக்கும் அனைவருக்கும் ஆசைகள் ஆயிரம். குழந்தையாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் ஆசைகளில் ஒன்றாக, அதிகம் விரும்புவதாக இருப்பது ஒரு பறவையைப் போல உயரே பறக்க வேண்டும் என்பதுதான். இந்த ஆசை எனக்குள்ளும் இருந்தது. அச்சமயத்தில் எனக்குக் கிடைத்த இந்தப் புத்தகத்தில் ஒற்றைச் சிறகோடு இருக்கும் ஓவியாவுடன் நான் மற்றொரு சிறகாய் இருந்து இந்த நாவலைப் படித்தேன். 

விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய இந்நூல் அவருக்கு பால புரஸ்கார் விருதைப் பெற்றுத் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விகடன் குழுமத்தில் பணி புரிந்தவர் ஆவார். இந்நூல் இவருடைய இரண்டாவது நாவல்.

 

இக்கதையில் ஐந்து நண்பர்கள், அவர்கள் எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். ஒருநாள் பள்ளி ஆண்டு விழாவுக்காக ஓவியாவைத் தவிர மற்ற நால்வரும் நாடகத்தில் இணைந்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களில் ஒவ்வொன்றையும் ஓவியாவுக்கு அணிவித்து அழகு பார்த்தனர். அப்படியாக அவர்கள் அணிவித்த ஒற்றைச் சிறகுகள் அவளைப் பறக்க வைத்தன. அதனைக் கொண்டு பள்ளியில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தினர். அது என்னவென்றால் ‘இரகசியம்‘.

 

அதற்குப் பயன்படக்கூடிய முக்கியப் பொருளாக இருந்தது பள்ளி மணியை அடிக்கப் பயன்படுத்தப்பட்ட பச்சை நாக்கு. இம்மாயாஜாலத்தை பள்ளி ஆண்டு விழாவில் நடத்த எண்ணினர். அப்போது அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவன் அதனை – பச்சை நாக்கு – எடுத்து நான்கு துண்டுகளாகப் பிரித்து வெவ்வேறு இடங்களில் மறைத்து வைத்தான். அவனுக்கு உண்மையிலேயே மந்திரம் செய்வதற்குத் தெரியும் என்பதால் மறைத்து வைத்த இடங்களின் குறிப்புகளைத் தன் நண்பர்களின் கனவுகளில் மறைத்து வைத்தான்.

 

ஓவியாவிற்கு ஒருவருடைய கண்ணைப் பார்த்து அவர் எண்ணுவதைச் சொல்ல முடியும் என்பதால் ஒவ்வொரு குறிப்புகளின் மூலமாக ஒவ்வொன்றையும் கண்டுபிடித்து, நான்கையும் ஒன்றிணைத்து அவர்கள் நினைத்தது போல ஆண்டுவிழாவில் மாயாஜாலத்தை நிகழ்த்தினர்.

 

இந்த நாவலில் ஓவியாவும் அவளது நண்பர்களும் எங்கெல்லாம் அந்த நான்கு துண்டுகளாக்கபட்ட பச்சை நாக்கைத் தேடினார்கள் என்பதையும் அப்படித் தேடும்போது அவர்களுக்குக் கிடைத்த அனுபவம் என்ன என்பதையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். 

இந்நாவலை வாசித்ததன் மூலம் எனக்குச் சிறந்த அனுபவமும் ஆச்சர்யங்களும் கிடைத்தன. அவை உங்களுக்கும் கிடைக்க நீங்களும் இந்நாவலை வாசிக்கப் பரிந்துரைக்கிறேன்.

யாமறிந்த, வாசித்த சிறந்த சிறார் நாவல்களில் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கும் நாவல் எதுவென்றால், என்னளவில் நான் ஒற்றைச் சிறகு ஓவியாவைச் சொல்வேன்.

PrevPreviousஅரேபியாவின் ஆபரணம்
Nextவிண்மீன் ஜூலை 2025 மின்னிதழ்Next

You Might Also Like

செஞ்சோற்றுக் கடன் தீர
தியாகம்
தன்னைச் செதுக்கும் சிற்பி
பாட்டியும் மஞ்சள் கொன்றையும்
எம் காதல் ஜெயிக்கும்
TAGGED:சிறுகதைகள்நாவல்நூல் அறிமுகம்புத்தகப் பார்வைபுத்தகம்விண்மீன் ஜூலை 2025விமர்சனம்
Previous Article அரேபியாவின் ஆபரணம் அரேபியாவின் ஆபரணம்
Next Article Vinmeen July 2025 விண்மீன் ஜூலை 2025 மின்னிதழ்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?